சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Venue நைட் எடிஷன் ரூ.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது

published on ஆகஸ்ட் 18, 2023 06:39 pm by tarun for ஹூண்டாய் வேணு

வென்யூ நைட் எடிஷன் பல விஷுவல் அப்டேட்களை பெறுகிறது மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 'ப்ராப்பர்' மேனுவலை மீண்டும் கொண்டு வருகிறது.

  • வென்யூ நைட் எடிஷன் மாடல் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது.

  • பிளாக், வொயிட், கிரே, ரெட் மற்றும் ரெட் வித் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது.

  • எக்ஸ்டீரியர் முழுவதும் பிளாக் கலர் பினிஷ் மற்றும் பிராஸ் கலர் இன்செர்ட்களை பெறுகிறது.

  • இன்டீரியர் முழுக்க ஆல் பிளாக் கலர் தீமில் பிராஸ் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • புதிய அம்சங்களில் டூயல் கேமரா டாஷ் கேம் மற்றும் எலக்ட்ரோக்ரோமிக் ஐஆர்விஎம் ஆகியவை அடங்கும்.

  • 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ புதிய நைட் எடிஷனுடன் ஆல் பிளாக் கிளப்பில் இணைகிறது. கிரெட்டாவுக்குப் பிறகு, ஹூண்டாய் நிறுவனம் பிளாக்-அவுட் ஆப்ஷனை கொடுக்கும் இரண்டாவது கார் இதுவாகும். இருப்பினும், வழக்கமான குரோம் ட்ரீட்மென்ட்டுக்கு பதிலாக மாறுபட்ட பிளாக் அழகியலுக்காக மற்ற நான்கு வண்ணங்களிலும் இது வழங்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷனை பல பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது, மேலும் அதை டாப்-ஸ்பெக் வேரியன்ட்டுக்கு மட்டுமின்றி அனைத்துக்கும் கொடுத்துள்ளது.

வேரியன்ட் வாரியான விலைகள்

Variant

வழக்கமான விலை

நைட் எடிஷன்

வித்தியாசம்

S (O) MT 1.2 பெட்ரோல்

ரூ. 9.76 லட்சம்

ரூ. 10 லட்சம்

ரூ. 24,000

SX MT 1.2 பெட்ரோல்

ரூ. 10.93 லட்சம்

ரூ.11.26 லட்சம்

ரூ. 33,000

SX MT 1.2 பெட்ரோல் டூயல் டோன்

ரூ. 11.08 லட்சம்

ரூ. 11.41 லட்சம்

ரூ. 33,000

SX (O) MT 1.0 டர்போ பெட்ரோல்

-

ரூ. 12.65 லட்சம்

SX (O) MT 1.0 டர்போ பெட்ரோல் டூயல் டோன்

-

Rs 12.80 லட்சம்

SX (O) DCT 1.0 டர்போ

ரூ. 13.03 லட்சம்

ரூ. 13.33 லட்சம்

ரூ. 30,000

SX (O) DCT 1.0 டர்போ டூயல் டோன்

Rs 13.18 Lakh

Rs 13.48 Lakh

ரூ. 30,000

அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

வென்யூ நைட் எடிஷன் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 13.48 லட்சம் வரை இருக்கும், இது தொடர்புடைய வேரியன்ட்களை விட ரூ.33,000 வரை கூடுதலாக இருக்கிறது.

எக்ஸ்டீரியர் விஷுவல் மாற்றங்கள்

நைட் எடிஷனில் உள்ள மாற்றங்களை பொறுத்தவரையில் கிரில், லோகோ, ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ORVMகள், ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் அலாய் வீல்களில் பிளாக் ஃபினிஷ் ஆகியவை அடங்கும். முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், முன் சக்கரங்கள் மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவற்றில் பிராஸ் இன்செர்ட்கள் உள்ளன. முன்பக்க பிரேக் காலிப்பர்களில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது மற்றும் போர்டில் 'நைட்' சின்னம் உள்ளது. S (O) வேரியன்ட் அலாயை பெறவில்லை, ஆனால் ஸ்போர்ட் பிளாக் வீல் கவர்களை கொண்டுள்ளது.

அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே மற்றும் ஃபியரி ரெட் , ஃபோர் சிங்கிள்-டோன் ஷேட்களிலும், ஒரு டூயல்-டோன் ஷேட்: அபிஸ் பிளாக் வித் ஃபியரி ரெட் ஆகியவற்றில் இது கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: Hyundai Exter Top-spec AMT vs Hyundai i20 Sportz Turbo-Petrol DCT - எதை தேர்வு செய்வது?

இன்டீரியரில் உள்ள மாற்றங்கள்

நைட் எடிஷனில் வென்யூவின் டூயல்-டோன் இன்டீரியர் முழுக்க ஆல் பிளாக்-தீம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இது குரோம் ஆக்ஸன்ட்களுடன் கூடிய பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி உட்பட கேபின் முழுவதும் பிராஸ் கலர் இன்செர்ட்களையும் பெறுகிறது. உள்ளே ஸ்போர்ட்டியர் மற்றும் பிரீமியம் தோற்றத்திற்கு, பெடல்கள் மெட்டல் ஃபினிஷ் மற்றும் 3டி டிசைனர் மேட்களை பெறுகின்றன.

புதிய அம்சங்களும் உள்ளன

டூயல் கேமரா டேஷ்கேம் வென்யூ N லைனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது, குறிப்பாக நைட் எடிஷன் வேரியன்ட்களுக்கு. S(O) MT வேரியன்ட் ஒரு எலக்ட்ரோக்ரோமிக் IRVM -ஐ பெறுகிறது, இது SX வேரியன்டிலிருந்து கிடைக்கிறது.

வென்யூவில் இருக்கும் அம்சங்களில் எலக்ட்ரிக் சன்ரூஃப், 8-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

வென்யூ நைட் எடிஷனை தற்போதுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் தேர்வு செய்யலாம். பெட்ரோல் இன்ஜின் 83PS மற்றும் 114Nm க்கு டியூன் செய்யப்பட்டு, 5-ஸ்பீடு மேனுவல் ‘பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நைட் எடிஷனுக்காக ஒரு ஆச்சரியமான புதுப்பிப்பு, வழக்கமான வேரியன்ட்களில் வழங்கப்படும் iMT (கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல்) -க்கு மாறாக, டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் சேர்க்கப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120PS மற்றும் 172Nm ஐ கொடுக்கிறது மற்றும் 7-ஸ்பீடு DCT -யின் ஆப்ஷனையும் பெறுகிறது.

நைட் எடிஷனில் இல்லாவிட்டாலும், வென்யூவுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 115PS 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 10 சிறந்த சிஎன்ஜி கார்கள், அதே நேரத்தில் செலவும் குறைவாக இருக்கும்

போட்டியாளர்கள்

வழக்கமான ஹூண்டாய் வென்யூ கியா சோனெட், மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. நைட் எடிஷனுக்கு ஒரே போட்டியாக டாடா நெக்ஸானின் டார்க் வேரியன்ட்கள் மற்றும் கியா சோனெட் எக்ஸ்-லைன் இருக்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ ஆன் ரோடு விலை

t
வெளியிட்டவர்

tarun

  • 43 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் வேணு

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை