• English
  • Login / Register

புதுப்பொலிவுடன் கூடிய கிராண்ட் i10 நியோஸ் ஐ ஹூண்டாய் காட்சிப்படுத்தியது, முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளது.

published on ஜனவரி 12, 2023 05:17 pm by ansh for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மேம்படுத்தப்பட்ட இந்த ஹாட்ச்பேக் மீள் வடிவமைக்கப்பட்ட முன்புற அமைப்பு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது.

Facelifted Hyundai Grand i10 Nios

  • முன்பணமாக ரூ. 11,000 மட்டுமே செலுத்தி முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியுள்ளது.

  • புதிய கிராண்ட் i10 நியோஸ் -இல் வழக்கமான நான்கு ஏர் பேக்குகள் அமையப்பெற்றிருக்கும்.

  • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் அதே சமயம் CNG என்ஜின்களின் விருப்பத்தேர்வையும்  கொண்டுள்ளது.

  • விலை ரூ. 5.70 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹூண்டாய் புதுப்பொலிவூட்டப்பட்ட இந்த  பதிப்பை எந்த விதமான ஆரவாரமுமில்லாமல் அமைதியாக கிராண்ட் i 10 நியோஸ் அறிமுகப்படுத்தியது மற்றும் முன்பதிவுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது. இந்த ஹாட்ச் பேக்குக்கு ஒரு முன் தொகையாக ரூ. 11,000 செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது நாடு முழுவதிலுமுள்ள இந்த கார் தயாரிப்பாளர்களின் முகவர்களிடம் முன்பதிவு செய்யலாம்.

 

Facelifted Grand i10 Nios Grille

 

புதுப்பொலிவுடன் கூடிய  இந்த ஹாட்ச் பேக் ஒரு புதிய கிரில் மற்றும் ஒரு ஸ்போர்டியர் முன்புற பம்பருடன் சீரமைக்கப்பட்ட LED DRL கள் மற்றும் அல்லாய் வீல்களின் ஒரு புதிய வடிவத்துடன்   மறுவடிவமைக்கப்பட்ட  முன்புற தோற்றத்தைக் கொண்டிருக்கும். புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் கூடிய பின்புற LED விளக்குகள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பூட் லிட் கொண்ட பின்புறத்தை  கொண்டுள்ளது.

 

மேலும் படிக்க: ஹைலுக்ஸ் பிக் அப் -இற்கான முன்பதிவுகளை டொயோட்டா மீண்டும் தொடங்கியுள்ளது

 

இந்த புதுப்பிக்கப்பட்ட கிராண்ட் i10 நியோஸ் ஆனது இப்போது ஒரு புதிய ஸ்பார்க் கிரீன் ஷேட் உடனும் வருகிறது மற்றும் இது இருவேறு டோன்களின்  விருப்பத்தேர்வையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஹேட்ச்பேக் பல்வேறு வண்ண உட்புற விருப்பத்தேர்வுகளுடனும் இப்போது கிடைக்கிறது. 

 

Hyundai Grand i10 Nios Engine

 

AMT. சக்தி கடத்தலுக்கான தேர்வுகளைப் பொறுத்தவரை இந்த கிராண்ட் i10 நியோஸ் ஒரு ஐந்து படிநிலை கைவினை வேக மாற்ற அமைப்பு  அல்லது AMT அமைப்புடன் இணைக்கப்பட்ட 83PS மற்றும் 113.8NM சக்தித் திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. அதே என்ஜினுடன் சக்தி கடத்தலுக்கான ஒரு CNG அமைப்பும் மற்றும் ஒரு கைவினை ஐந்து வேக படிநிலையுடனும் கிடைக்கிறது அது குறைந்த அளவிலான 69PS மற்றும் 95.2NM சக்தித்திறனை வெளிப்படுத்தும்.  இந்த கார் தயாரிப்பாளர் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் விருப்பத்தேர்வை தற்சமயம் நிறுத்திவைத்திருக்கிறார்.

 

Facelifted Hyundai Grand i10 Nios Cabin

முந்தைய பதிப்பிலுள்ள அனைத்து சிறப்பம்சங்களும் தக்கவைக்கப்பட்டுள்ள அதே சமயம்  இந்த புதிய ஹேட்ச் பேக் ஆனது க்ரூய்ஸ் கண்ட்ரோல், புதிய கருவித் தொகுப்பு, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், USB டைப் C சார்ஜிங் சாக்கெட், காலடி விளக்குகள் மற்றும் ‘நியோஸ்’ என்ற எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட  ஒரு புதிய சாம்பல் நிற அப்ஹோல்ஸ்ட்டரி ஆகியவை உட்பட கூடுதல் சாதனங்களைக் கொண்டிருக்கும். ஒரு எட்டு இன்ச் தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் காட்சியமைப்பு, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி மற்றும் பின்புற AC ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இது வருகிறது.

 

Facelifted Hyundai Grand i10 Nios Seats

 

இதன் பாதுகாப்பு வலையமைப்பில் இப்போது வழக்கமான நான்கு ஏர் பேக்குகளுடன் கிடைக்கும் இதன் மேம்பட்ட சிறப்புக் கூறுகளுடன்  ஆறு ஏர் பேக்குகளுடன் கூடிய வகை வருகிறது.  இதன் புதிய விருப்பத்தேர்வு பாதுகாப்பு சிறப்பம்சங்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) வெஹிகில் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட் (VSM) ஹில் அசிஸ்ட், டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) மற்றும் ISOFIX ஆங்கரேஜஸ் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

 

Facelifted Hyundai Grand i10 Nios Rear

 

இந்த புதுப்பொலிவுடன் கூடிய கிராண்ட் i10 நியோஸ் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது, அதன் அறிமுக அடிப்படை விலை ரூ. 5.70 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹாட்ச் பேக் இவற்றுக்கு தொடர்ந்து ஒரு போட்டியாளராக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனத்திற்கு ஒரு மாற்று வாகனத்தை நீங்கள் விரும்பினால் இதை பார்வையிடுவதை  நீங்கள் கருத்தில் கொள்ளலாம் ரெனால்ட் டிரைபர்.

 

மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் கார்கள் இவை

மேலும் படிக்கவும்: கிராண்ட் i10 நியோஸ் AMT

was this article helpful ?

Write your Comment on Hyundai Grand ஐ10 Nios

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience