ம ைக்ரோ SUV இன் இரு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஹூண்டாய் எக்ஸ்டரின் சமீபத்திய டீசர்
published on மே 25, 2023 04:57 pm by rohit for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் சன்ரூஃப் பெறும் முதல் மைக்ரோ SUV எக்ஸ்டர் ஆகும்.
-
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை 10ஆம் தேதி எக்ஸ்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.
-
அது ஐந்து கார் வேரியன்ட்களாக வழங்கப்படும் EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட்.
-
எக்ஸ்டர் ஆனது இரட்டை கேமராக்கள் கொண்ட டேஷ்கேமை, முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் பெறும்.
-
அதன் சன்ரூஃப் செயல்பாடுகளுக்கான குரல் கட்டளைகளை ஆதரிக்கும்.
-
ஹூண்டாய் அதற்கு 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட்டை வழங்கும்; இது CNG ஆப்ஷனையும் பெறும்.
-
ஆரம்ப விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஹூண்டாய் எக்ஸ்டெர் போர்டில் சில முக்கிய வெர்ச்சுவல் பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்திய சிறிது காலத்திற்குப் பிறகு , கார் தயாரிப்பு நிறுவனம் இப்போது அதன் ஒற்றை-பேன் சன்ரூஃப் -ஐ காட்டும் டீஸர் படத்தை வெளியிட்டுள்ளது. டீஸர் படத்துடன், மைக்ரோ SUV ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஹூண்டாய் உறுதிப்படுத்தியது. இந்த அம்சத்தைச் சேர்ப்பதன் காரணமாக அதன் முதன்மை போட்டியாளரான டாடா பன்ச் மீது எக்ஸ்டர் கூடுதலான ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கும்
இரண்டு முக்கிய அம்சங்களின் கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன
பிரிவில் முதன்முதலாக உள்ள சன்ரூஃப் தவிர, எக்ஸ்டரில் டூயல் டேஷ்கேம் அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கும், இது அதன் பிரிவில் முதலாவதாக இருக்கும்.
முன்புறம் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டையும் கொண்டுள்ளது, இது 2.3-அங்குலடிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் பயன்பாட்டு இணைப்பு மற்றும் பல பதிவு முறைகளை வழங்கும். டிரைவிங் (சாதாரணநிலை), ஈவென்ட் (பாதுகாப்பு) மற்றும் வெகேஷன் (டைம் லேப்ஸ்) போன்ற பல்வேறு ரெக்கார்டிங் விருப்பங்களை இரட்டை கேமராக்கள் கொண்டிருக்கும் போது இதன் மூலமாக புல் HD ரெசல்யூசனில் வீடியோக்களை எடுக்க முடியும்.
கனெக்டட் கார் டெக் கிற்கு நாம் இங்கே நன்றி சொல்ல வேண்டும், எக்ஸ்டரின் சன்ரூஃப்-ஐ "ஓபன் சன்ரூஃப்" அல்லது "ஐ வான்ட் டு சீ த ஸ்கை" போன்ற குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி இயக்க முடியும்.
மேலும் படிக்கவும்: உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் விரைவில் டாஷ்கேம் ஆகவும் செயல்படும்
எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்கள்
இந்த இரண்டு அம்சங்களைத் தவிர, ஹூண்டாய் எக்ஸ்டருக்கு குரூஸ் கன்ட்ரோல், பெரிய டிஸ்பிளே யூனிட், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றையும் வழங்கும் என நம்புகிறோம். இதன் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.
இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் எக்ஸ்டரை 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கும், ஐந்து-வேக மேனுவல் அல்லது 5-வேக AMT ஆகியவற்றுடன் இணைக்கப்படும். இது CNG கிட் தேர்வும் கிடைக்கும்.
வேரியன்ட்கள், விலை மற்றும் போட்டி கார்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் EX, S, SX, SX (O), and SX (O) கனெக்ட் ஆகிய ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கும். எக்ஸ்டரின் விலை ரூ. 6 லட்சத்திலிருந்து (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் -ஐ தவிர்த்து சிட்ரோன் C3, ரெனால்ட் கைகர், மாருதி ஃபிராங்க்ஸ் மற்றும் நிஸான் மேக்னைட்ஆகியவற்றுக்கு எதிராகவும் போட்டியிடுகிறது.