சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Punch காரை போன்ற டூயல் சிஎன்ஜி சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் Hyundai எக்ஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

ஹூண்டாய் எக்ஸ்டர் க்காக ஜூலை 16, 2024 04:28 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் CNG மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த அப்டேட் காரணமாக காரின் விலை ரூ.7,000 உயர்த்துள்ளது.

  • ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி -யை மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது: S, SX மற்றும் SX நைட் எடிஷன்.

  • இந்த புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் சிஎன்ஜி காரில் புதிய டாடா சிஎன்ஜி கார்கள் போன்றே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோடு என இரண்டுக்கும் இடையேயும் மாறிக்கொள்ளலாம்.

  • முன்பு இருந்த அதே 1.2 லிட்டர் பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது; 27.1 கி.மீ/கிலோ மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 8 இன்ச்டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் காரில் உள்ளன.

  • எக்ஸ்டரின் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும்.

சிஎன்ஜி பவர்டிரெய்னுக்கான டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதால் ஹூண்டாய் டாடாவுக்கு இனிமேல் கடும் போட்டியை உருவாக்கும் என தெரிகிறது.

இந்த அமைப்புடன் வழங்கப்படும் முதல் மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பிரதான போட்டியாளரான டாடா பன்ச் காரும் இதே போன்ற தொழில்நுட்பத்தையே கொண்டுள்ளது. சிஎன்ஜி பவர்டிரெயின் ஆப்ஷனை பெறும் மைக்ரோ எஸ்யூவி -யின் அதே 3 வேரியன்ட்களில் ஸ்பிளிட்-சிலிண்டர் டேங்க் செட்டப்பை ஹூண்டாய் வழங்குகிறது.

வேரியன்ட் வாரியான விலை

வேரியன்ட்

பழைய விலை (ஒரே ஒரு CNG சிலிண்டருடன்)

புதிய விலை (டூயல் CNG சிலிண்டர்களுடன்)

வித்தியாசம்

S

ரூ.8.43 லட்சம்

ரூ.8.50 லட்சம்

+ரூ 7,000

SX

ரூ.9.16 லட்சம்

ரூ.9.23 லட்சம்

+ரூ 7,000

SX நைட் எடிஷன்

ரூ.9.38 லட்சம்

ரூ.9.38 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

எக்ஸ்டர் காரின் CNG வேரியன்ட்களுக்கான ஸ்பிலிட்-சிலிண்டர் செட்டப்பை கொடுத்துள்ளதால் ஹூண்டாய் அவற்றின் விலையை ரூ.7,000 வரை அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நைட் எடிஷனின் SX வேரியன்ட்டில் கூட சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷனை ஹுண்டாய் வழங்குகிறது.

டூயல் சிலிண்டர் CNG செட்டப்பால் கிடைக்கும் பலன்கள்

டூயல் சிலிண்டர் CNG டெக்னாலஜியால் கிடைக்கும் மிகப்பெரிய வசதிகளில் ஒன்று காரில் அதிக பூட் ஸ்பேஸ் கிடைப்பதாகும். புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் CNG ஆனது ஒரு இன்டெகிரேட்டட் எலக்ட்ரிக் கன்ட்ரோல் யூனிட் (ECU) உடன் வருகிறது. இது சமீபத்திய டாடா CNG கார்களில் கிடைக்கும் பயணத்தின் போது பெட்ரோல் மற்றும் CNG மோடுகளுக்கு இடையில் மாறுவதற்கு இது உதவுகிறது. எக்ஸ்டர் காரில் டூயல் சிலிண்டர் CNG டெக்னாலஜியுடன் வாடிக்கையாளர்களுக்கு 3 வருட உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஃபேக்டரியில் CNG ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் டாப் 10 விலை குறைவான கார்கள்

எக்ஸ்டர் சிஎன்ஜி பவர்டிரெய்ன்

அப்டேட்டட் எக்ஸ்டர் CNG ஆனது முன்பு இருந்த அதே பவர்டிரெய்ன் செட்டப்பில் கிடைக்கிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

எக்ஸ்டர் சிஎன்ஜி

இன்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல்+CNG

பவர்

69 PS

டார்க்

95 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் சிஎன்ஜி காருக்கு 27.1 கிமீ/கிலோ மைலேஜ் கிடைக்கும் என ஹூண்டாய் கூறுகிறது. மைக்ரோ எஸ்யூவி ஆனது இரண்டு CNG சிலிண்டர்களையும் சேர்த்து 60 லிட்டர் தண்ணீருக்கு சமமான கொள்ளளவை கொண்டுள்ளது. வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களில் 1.2-லிட்டர் பவர்டிரெய்ன் 83 PS மற்றும் 114 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 5-ஸ்பீடு AMT ஆப்ஷனையும் பெறுகிறது.

எக்ஸ்டர் CNG காரிலுள்ள வசதிகள் என்ன ?

எக்ஸ்டரின் மிட்-ஸ்பெக் எஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி கிட் வழங்கப்படுவதால் எஸ்யூவியின் சிஎன்ஜி வேரியன்ட்களில் 8 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) போன்ற முக்கிய வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது. இதன் நேரடி போட்டியாளர் டாடா பன்ச் (சிஎன்ஜி வேரியன்ட்கள் உட்பட) ஆக இருக்கும். மேலும் இது சிட்ரோன் C3, மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் போன்ற கார்களுக்கு மாற்றாகவும் இருக்கும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் AMT

Share via

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை