Hyundai Exter Knight எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.8.38 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஜூலை 10, 2024 06:59 pm by shreyash for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
எக்ஸ்டர் எஸ்யூவி -யின் 1 -ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்டரின் நைட் எடிஷன், ஹையர்-ஸ்பெக் SX மற்றும் SX (O) கனெக்ட் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
-
ஆல் பிளாக் முன்பக்க மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ரெட் கலர் கொண்ட பிரேக் காலிப்பர்கள் ஆகியவற்றை வெளிப்புறத்தில் உள்ள ஹைலைட்ஸ்களாக பார்க்க முடிகிறது.
-
உள்ளேயும் இது ஆல் பிளாக் டாஷ்போர்டு மற்றும் ரெட் இன்செர்ட் உடன் பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது.
-
8-இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப் மற்றும் டூயல் கேமராவுடன் கூடிய டாஷ் கேம் உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக இது பெறுகிறது.
-
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.
-
வழக்கமான எக்ஸ்டருடன் வழங்கப்படும் அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இதிலும் உள்ளது.
-
எக்ஸ்டரின் நைட் எடிஷனுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15,000 அதிகமாக செலுத்த வேண்டும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் 2023 -ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, டாடா பன்ச் உடன் போட்டியிட மைக்ரோ எஸ்யூவி பிரிவில் இது நுழைந்தது. அறிமுகமானதிலிருந்து, அதன் எஸ்யூவி போன்ற வடிவமைப்பு மற்றும் சிறப்பான வசதிகளால் எக்ஸ்டர் மக்களிடையே பிரபலமான காராக மாறியுள்ளது. இப்போது அதன் 1 -ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஹூண்டாய் இப்போது எக்ஸ்டரின் ஸ்பெஷல் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை
வேரியன்ட் |
வழக்கமான விலை |
நைட் எடிஷன் விலை |
வித்தியாசம் |
மேனுவல் |
|||
SX |
ரூ.8.23 லட்சம் |
ரூ.8.38 லட்சம் |
+ ரூ.15,000 |
SX டூயல்-டோன் |
ரூ.8.47 லட்சம் |
ரூ.8.62 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) கனெக்ட் |
ரூ.9.56 லட்சம் |
ரூ.9.71 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) கனெக்ட் டூயல்-டோன் |
ரூ.9.71 லட்சம் |
ரூ.9.86 லட்சம் |
+ ரூ.15,000 |
ஆட்டோமெட்டிக் |
|||
SX |
ரூ.8.90 லட்சம் |
ரூ.9.05 லட்சம் |
+ ரூ.15,000 |
SX டூயல்-டோன் |
ரூ.9.15 லட்சம் |
ரூ.9.30 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) கனெக்ட் |
ரூ.10 லட்சம் |
ரூ.10.15 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) கனெக்ட் டூயல்-டோன் |
ரூ.10.28 லட்சம் |
ரூ.10.43 லட்சம் |
+ ரூ.15,000 |
எக்ஸ்டரின் நைட் எடிஷன் அதன் ஹையர் ஸ்பெக் SX மற்றும் SX(O) கனெக்ட் வேரியன்ட்களுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடுஷனுக்காக கூடுதலாக ரூ. 15,000 செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் இது கிடைக்கிறது.
மேலும் பார்க்க: BYD Atto 3 சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் புதிய வேரியன்ட்களை பெறுகிறது, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
நைட் எடிஷனில் உள்ள மாற்றங்கள்
ஹூண்டாய் வென்யூவின் நைட் பதிப்பில் காணப்படுவது போல் எக்ஸ்டெர் முழுக்க ஆல் பிளாக் நிற வெளிப்புற ஷேடு உடனும் ரெட் ஹைலைட்ஸ் உடனும் வருகிறது. வெளிப்புற பெயிண்ட் தவிர எக்ஸ்டர் நைட் பதிப்பில் உள்ள மாற்றங்கள் ஆல் பிளாக் முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், ரெட் பிரேக் காலிப்பர்கள் கொண்ட பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் நைட் எடிஷன் பேட்ஜ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. புதிய அபிஸ் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு தவிர, எக்ஸ்டர் நைட் எடிஷன் 4 மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது: ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், ரேஞ்சர் காக்கி, ஷேடோ கிரே (புதியது), ரேஞ்சர் காக்கி வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் (புதியது).
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
உள்ளே எக்ஸ்டர் நைட் எடிஷன் பிளாக் நிற உட்புற தீம் மற்றும் பிளாக் இருக்கை அப்ஹோல்ஸ்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி வென்ட்கள் மற்றும் இருக்கைகளில் ரெட் இன்செர்ட்கள் கொடுக்கப்படலாம். எக்ஸ்டரின் ஆல்-பிளாக் எடிஷனில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆட்டோ ஏசி, சன்ரூஃப் மற்றும் டூயல் கேமராக்கள் கொண்ட டேஷ் கேம் உள்ளிட்ட வசதிகள் வழக்கமான காரை போலவே உள்ளது.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா மூலம் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
அதே பெட்ரோல் இன்ஜின்
எக்ஸ்டரின் நைட் எடிஷன் 83 PS/114 Nm அவுட்புட் கொடுக்கும் 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கிடைக்காது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் எக்ஸ்டரின் ஸ்பெஷல் நைட் எடிஷன்களுக்கு வழக்கமான வேரியன்ட்களை விட ரூ. 15,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். எக்ஸ்டர் காரின் விலை தற்போது ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது டாடா பன்ச் உடன் போட்டியிடுகிறது. மேலும் சப்-4மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவ்ற்றுக்கு மாற்றாகவும் உள்ளது,
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் AMT