சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
published on ஜூலை 10, 2024 07:49 pm by samarth for பிஒய்டி அட்டோ 3
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் மற்றும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஆகியவற்றால் எலக்ட்ரிக் எஸ்யூவியானது ரூ.9 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.
-
அட்டோ 3 இப்போது மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர்.
-
டைனமிக் வேரியன்டில் இயங்கும் டெயில்கேட் மற்றும் அடாப்டிவ் LED லைட்ஸ், குறைவான ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரே ஒரு நிறத்திலான ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகள் இல்லை.
-
அடிப்படை மாறுபாட்டில் 49.92 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது, இது ARAI கிளைம்டு 468 கி.மீ வரம்பை வழங்குகிறது.
-
மற்ற இரண்டு வேரியன்ட்களும் 60.48 kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன. ARAI-ன் கிளைம்டு 521 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.
-
அடிப்படை வேரியன்ட் 70 kW DC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. மற்ற வேரியன்ட்கள் 80 kW DC சார்ஜிங்கை சப்போர்ட் பெறுகின்றன.
BYD நிறுவனம் இந்தியா -வில் அதன் வேரியன்ட் வரிசையை BYD அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி -யில் ஒரு புதிய பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக மாற்றியமைத்துள்ளது. இதன் மூலமாக அட்டோ 3 இப்போது விலை குறைவாக கிடைக்கும். அட்டோ 3 இப்போது புதிதாக மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர். இதன் விலை ரூ 24.99 லட்சத்தில் தொடங்குகிறது. இது EV காரின் முந்தைய தொடக்க விலையுடன் ஒப்பிடுகையில் ரூ 9 லட்சம் குறைவாகும். இதன் மூலம் புதிய காஸ்மோஸ் பிளாக் நிறமும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வேரியன்ட்களை பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.
விலை
அட்டோ 3 -யின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேரியன்ட்களின் விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட்கள் |
விலை |
டைனமிக் |
ரூ.24.99 லட்சம் |
பிரீமியம் |
ரூ.29.85 லட்சம் |
சுப்பீரியர் |
ரூ.33.99 லட்சம் |
விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை, (அறிமுகம்)
பவர்டிரெய்ன்
பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் சிறிய 49.92 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. மற்ற வேரியன்ட்களில் முன்பு கிடைத்த 60.48 kWh பேட்டரி பேக் கிடைக்கும். புதிய வேரியன்ட்களில் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுக்கான விரிவான விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
டைனமிக் (புதியது) |
பிரீமியம் (புதியது) |
சுப்பீரியர் |
பேட்டரி பேக் |
49.92 kWh |
60.48 kWh |
60.48 kWh |
பவர் |
204 PS |
204 PS |
204 PS |
டார்க் |
310 Nm |
310 Nm |
310 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (ARAI) |
468 கி.மீ |
521 கி.மீ |
521 கி.மீ |
சார்ஜிங்கை பொறுத்தரையில் BYD -யின் பிளேட் பேட்டரியை DC சார்ஜரை பயன்படுத்தி வெறும் 50 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம். பேஸ் வேரியன்ட் 70 kW DC சார்ஜிங் ஆப்ஷனை மட்டுமே சப்போர்ட் செய்கிறது, மற்ற வேரியன்ட்கள் 80 kW சார்ஜிங் ஆப்ஷனை சப்போர்ட் செய்கின்றன.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
அட்டோ 3 காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 12.8-இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சிஸ்டம், ஒரு பனோரமிக் சன்ரூஃப், 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், 60:40 ஸ்பிளிட் பின் இருக்கைகள் மற்றும் 5 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகிய வசதிகள் உள்ளன. புதிய லோயர்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால் டைனமிக் வேரியன்ட் பவர்டு டெயில்கேட், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்படவில்லை, ஆனால் 6-ஸ்பீக்கர் செட்டப்பை மட்டுமே இது பெறுகிறது. டாப்-ஸ்பெக் வேரியன்ட் உடன் ஒப்பிடும்போது, மிட்-ஸ்பெக் பிரீமியம் வேரியன்ட் அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் மட்டும் கொடுக்கப்படவில்லை.
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் டிசென்ட் கன்ட்ரோல் , டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை உள்ளன. (ADAS), இது இப்போது டாப்-எண்ட் சுப்பீரியர் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
போட்டியாளர்கள்
BYD அட்டோ 3 கார் இப்போது விற்பனையில் உள்ள MG ZS EV மட்டுமல்லாமல், புதிதாக வரவிருக்கும் டாடா கர்வ்வ் EV, மாருதி சுஸூகி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful