டூயல் CNG சிலிண்டர்களுடன் Hyundai Aura E வேரியன்ட் அறிமுகம்
published on செப் 03, 2024 07:04 pm by dipan for ஹூண்டாய் ஆரா
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட்டுக்கு முன்னர் ஹூண்டாய் ஆராவிற்கு மிட்-ஸ்பெக் S மற்றும் SX டிரிம்களுடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைத்தது. அவற்றின் விலை ரூ.8.31 லட்சமாக இருந்தது.
ஹீண்டாய் எக்ஸ்டர் மற்றும் கிராண்ட் i10 நியோஸ் கார்களில் உள்ளதை போலவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஆரா டூயல்-சிஎன்ஜி டெக்னாலஜியுடன் இப்போது கிடைக்கிறது. மேலும் பேஸ்-ஸ்பெக் 'E' வேரியன்ட் இப்போது CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது. மற்றும் ரூ. 7.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வேரியன்ட் அப்டேட்டுக்கு முன்னர் சிஎன்ஜி ஆப்ஷன் முன்பு ஆராவின் மிட்-ஸ்பெக் எஸ் மற்றும் SX வேரியன்ட்களில் மட்டுமே கிடைத்தது. இதன் விலை ரூ.8.31 லட்சத்தில் இருந்து தொடங்கியது. இருப்பினும் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் இந்த இரண்டு டிரிம்களின் விலையை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. எனவே இப்போது டூயல் சிஎன்ஜி சிலிண்டர்கள் செட்டப் உடன் வரும் ‘இ’ டிரிமில் என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்:
ஹூண்டாய் ஆரா E CNG: எக்ஸ்ட்டீரியர்
பேஸ்-ஸ்பெக் மாடலாக இருப்பதால் ஆராவின் E டிரிம் ஹாலோஜன் ஹெட்லைட்கள் உடன் வருகிறது மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் முன் ஃபெண்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஃபாக் லைட்களை பெறாது. இருப்பினும் இது பெறுவது Z- வடிவ ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் ஆரா E CNG 14-இன்ச் ஸ்டீல் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பிளாக் ORVM -கள் மற்றும் டோர் ஹேண்டில்களும் உள்ளன.
ஹூண்டாய் ஆரா E CNG: இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஹூண்டாய் ஆரா E CNG இன்டீரியர் வெளிப்புறத்தைப் போலவே எளிமையாக இருக்கிறது. கேபினில் கிரே மற்றும் பெய்ஜ் கலர் தீம் உள்ளது மற்றும் இருக்கைகள் பீஜ் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன. அனைத்து இருக்கைகளும் ஸ்டாண்டர்டான ஹெட்ரெஸ்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆனால் 3-பாயின்டர் சீட்பெல்ட்கள் இல்லை.
மையத்தில் மல்டி இன்ஃபார்மேஷன் டிஸ்பிளேவுடன் (MID) ஒரு அனலாக் டிரைவர்ஸ் டிஸ்பிளே உள்ளது. இது ஒரு மேனுவல் ஏசி, கூல்டு க்ளோவ் பாக்ஸ், முன் பவர் ஜன்னல்கள் மற்றும் 12V சார்ஜிங் சாக்கெட் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ஃபேக்டரியில் CNG ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் டாப் 10 விலை குறைவான கார்கள்
ஹூண்டாய் ஆரா E சிஎன்ஜி: பவர்டிரெய்ன்
ஹூண்டாய் ஆரா E சிஎன்ஜி 1.2 லிட்டர் இன்ஜினுடன் 69 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கும். இது பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இங்கு AMT கியர் பாக்ஸ் உடன் இணைக்க ஆப்ஷன் இல்லை.
ஹூண்டாய் ஆரா E CNG: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் ஆராவின் E CNG டிரிம் விலை ரூ.7.49 லட்சம் ஹூண்டாய் ஆரா காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.05 லட்சம் வரை இருக்கும். எனவே இது ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் மற்றும் மாருதி சுஸூகி டிசையர் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. குறிப்பாக ஹோண்டா அமேஸ் தவிர அனைத்து போட்டி கார்களும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன் உடன் கிடைக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஆரா AMT