கிரான்ட் i10 நியோஸ்-க்கு புதிய மிட்-ஸ்பெக் டிரிம்மை ஹீண்டாய் சேர்க்கிறது
published on மார்ச் 13, 2023 06:58 pm by ansh for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்போர்ட்ஸ் டிரிம்மிற்கு கீழே புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் டிரிம் ஒரே ஒரு அம்ச வேறுபாட்டுடன் இடம்பெற்று உள்ளது.
-
ஹீண்டாய் கிரான்ட் i10 நியோஸ் புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் டிரிம்மை ப் பெறுகிறது.
-
அது மிட்-ஸ்பெக் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்-ற்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது
-
அதேமாதிரியான ஸ்போர்ட்ஸ் கார் வகைகளுடன் ஒப்பிடும்போது புதிய டிரிம் ரூ.3,500 மலிவான விலையில் கிடைக்கிறது.
-
கிரான்ட் i10 நியோஸ் 83PS மற்றும்114Nm களில் சுழலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைப் பெற்றுள்ளது
-
ஹேட்ச்பேக்கின் விலைகள் ரூ. 5.69 இலட்சம் முதல் ரூ. 8.46 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
தோற்றத்தில் புத்தம்புது பதிப்பான கிரான்ட் i10 நியோஸ் ஐ, ஹீண்டாய் அறிமுகப்படுத்திய பிறகு அதன் கார் வரிசைகளில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஹேட்ச்பேக்கின் மிட்-ஸ்பெக் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களுக்கு இடையில் வைக்கப்பட்ட புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் டிரிம்மை கார் உற்பத்தியாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
விலை
|
|
|
|
MT |
ரூ. 7.16 இலட்சம் |
|
|
AMT |
|
|
|
ஸ்போர்ட்ஸ் மேனுவல் மற்றும் AMT கார் வகைகளுடன் ஒப்பிடும்போது ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் கார்கள் ரூ.3,500 மலிவான விலையில் கிடைக்கின்றன ஸ்போர்ட்ஸ் டிரிம்மில் கிடைக்கும் CNG மற்றும் ட்யூயல் டோன் ஆப்சன்களை இது இழந்துள்ளது.
அம்சங்களில் உள்ள வேறுபாடுகள்
புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் காரில் இல்லாத ஓரே அம்சம் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் மட்டுமே ஏனெனில் இதில் அதற்குப் பதிலாக மேனுவல் ஏசி இடம் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள அனைத்து அம்சங்களும் இரு டிரிம்களுக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளன. ஆன்டிராய்டு, ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற ஏசி வென்டுகள், குரூஸ் கண்ட்ரோல், நான்கு ஏர்பேகுகளுடன் (டாப் டிரிமிற்கு மட்டுமே ஆறு ஏர்பேக்குகள்), கூடிய எட்டு அங்குல தொடுதிரை தகவல்போக்கு அமைப்பை இரண்டுமே பெற்றுள்ளன, EBD உடன் கூடிய ABS எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பும் (TPMS) இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க: புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்கசார் கார்களின் விலைகளை ஹீண்டாய் வெளியிட்டுள்ளது
பவர்டிரெயின்
83PS/114Nm உடன் வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிரான்ட் i10 நியோஸ் வருகிறது மேலும் ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஐந்து-வேக AMT உடன் அது இணைக்கப்பட்டுள்ளது. 69PS மற்றும் 95.2Nm இன் குறைந்த திறன் கொண்ட அதே என்ஜினை CNG கார்கள் பெற்றுள்ளன, ஐந்து-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் அவை இணைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் கார்கள் CNG ஆப்ஷனைப் பெறவில்லை.
போட்டியாளர்கள்
ரூ.5.69 லட்சம் முதல் ரூ.8.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலை வரம்பில், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் உடன் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் 490 கிமீ வரையிலான பயணதூரத்துடன் வெளிவருகிறது.
மேலும் படிக்கவும்: கிராண்ட் i10 நியோஸ் AMT
0 out of 0 found this helpful