சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டிசைன் ஸ்கெட்ச் மூலம் ஹூண்டாய் எக்ஸ்டரின் முதல் பார்வை இதோ

ஹூண்டாய் எக்ஸ்டர் க்காக ஏப்ரல் 26, 2023 06:53 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

டாடா பன்ச் -க்கு போட்டியாக ஹூண்டாயின் புதிய மைக்ரோ எஸ்யூவி ஜூன் மாதத்திற்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி தோற்றத்திற்காக சில முரட்டுத்தனமான பாகங்களுடன் நேரான மற்றும் பெட்டி போன்ற வடிவமைப்பைப் பெறும்.

  • H-வடிவ எல்இடி DRLகள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் மற்ற காட்சி கூறுகளுடன் ரூஃப் ரெயில்களை இது வழங்குகிறது.

  • பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வரை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் அது தொடரும்.

  • விலை ரூ. 6 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டெர் எஸ்யூவி -யின் புதிய டீசரை டிசைன் ஸ்கெட்ச் மூலம் வெளியிட்டுள்ளது. டாடா பன்ச்,நிஸான் மேக்னைட்,ரெனால்ட் கைகர் மற்றும் சிட்ரோன் C3 போன்றவற்றுக்கு போட்டியாக ஜூன் மாதத்திற்குள் புதிய மைக்ரோ எஸ்யூவி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹூண்டாய் எக்ஸ்டரின் முன்பக்க தோற்றம் ஜியோமெட்ரிக் வடிவங்களைக் கொண்டுள்ளது மற்றும் இயல்பான பெட்டி போன்று உள்ளது. இது ஒரு மெல்லிய கருப்பு பட்டை மூலம் இணைக்கப்பட்ட H- வடிவ எல்ஈடி DRL களைப் பெறுகிறது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கிரில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களைக் கொண்டுள்ளது, இது இரண்டு சதுர வடிவ கேஸ்களால் கவர் செய்யப்பட்டிருக்கும். கீழ் பகுதியை நோக்கி, அதன் கரடுமுரடான தன்மையை ஈர்க்கும் வகையில் ஒரு ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டைப் பெறும்.

மேலும் படிக்கவும்: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சனுடன் கூடிய 10 மிக மலிவான கார்கள்

ரூஃப் ரெயில்கள், டால் பாய் லுக் மற்றும் சற்று விரிவடைந்த சக்கர வளைவுகள் ஆகிய வடிவமைப்பு பாகங்களை நாம் பார்க்கலாம். H -வடிவ LED டெயில் விளக்குகள், ஃபங்கி அலாய் வீல்கள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றையும் பார்க்க முடிகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டெர் அதன் இளம் வாடிக்கையாளர்களின் ஈர்ப்பை நிறைவு செய்யும் கூறுகளுடன் தனித்துவமான தோற்றமுடைய கேபினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களைப் பொருத்தவரை , அதில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் , டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் , ஆறு ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னா 2023 மதிப்பாய்வில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட 5 விஷயங்கள்

கிராண்ட் i10 நியோஸின் 83PS 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் எக்ஸ்டருக்குப் பயன்படுத்தப்படும். CNG ஒரு விருப்பமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மிகவும் உற்சாகமான முன்மொழிவுக்கு, ஹூண்டாய், எஸ்யூவி உடன் 100PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை வழங்கலாம் .

சுமார் ரூ.6 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் ஹீண்டாய் எக்ஸ்டரின் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவி ஆக நிலைநிறுத்தப்படும் மற்றும் விலை அடிப்படையில் நியோஸ் மற்றும் i20 க்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.

Share via

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

N
neelmani mishra
Apr 27, 2023, 4:00:27 PM

Hundai should launch a car positioned between EON and NIOS

B
bharat b gohil
Apr 26, 2023, 12:41:17 AM

Mare pan Hyundai exter levi che

B
bharat b gohil
Apr 26, 2023, 12:41:17 AM

Mare pan Hyundai exter levi che

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை