• English
  • Login / Register

MG ஹெக்டரை விட Tata ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கிடைக்கும் கூடுதல் வசதிகள் என்ன ?

published on அக்டோபர் 30, 2023 12:27 pm by rohit for டாடா ஹெரியர்

  • 70 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய டாடா ஹாரியர் எம்ஜி ஹெக்டரை விட சில கூடுதலான வசதிகளை பெறுவது மட்டுமல்லாமல், உள்ளேயும் வெளியேயும் சில சிறப்பான மேம்பாடுகளையும் கொண்டுள்ளது.

Tata Harrier and MG Hector

டாடா ஹாரியர்  2019 -ல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அதன் முக்கிய போட்டியாளராக  எம்ஜி ஹெக்டர் வந்தது. எம்ஜி எஸ்யூவி எப்பொழுதும் சற்று கூடுதல் அம்சங்களுடன் இருந்தது(இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பித்தலுடன் இன்னும் கூடுதலன தொழில்நுட்ப வசதிகளை பெற்றது), சமீபத்திய ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் மூலம் டாடா அதன் அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. உண்மையில், டாடா எஸ்யூவி இப்போது ஒரு படி மேலே சென்று ஹெக்டரை விட சில தனித்துவமான வசதிகள் பலவற்றைக் கொண்டுள்ளது. அந்த பட்டியலை விரிவாக இங்கே பார்ப்போம்:

டூயல் ஜோன் ஏசி

Tata Harrier dual-zone climate control

  • முதன்முறையாக ஹாரியரில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் ஒன்று டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் 

  • டாடா இந்த கூடுதலான சொகுசு மற்றும் வசதியின் அம்சத்தை எஸ்யூவியின் ஹையர்-ஸ்பெக் ஃபியர்லெஸ் வேரியன்ட்களில் வழங்குகிறது.

  • ஹாரியர் ஃபியர்லெஸ் டிரிம் ரூ.22.99 லட்சத்தில் தொடங்குகிறது.

A post shared by CarDekho India (@cardekhoindia)

7 ஏர்பேக்குகள்

Tata Harrier 7 airbags

  • ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் 7 ஏர்பேக்குகளுடன் அறிமுகமானது, இது டாடா கார்களில் கொடுக்கப்படுவது முதல் முறையாகும்.

  • டாடாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி இப்போது டிரைவரின் பக்க முழங்கால் காற்றுப் பையுடன் வருகிறது.

  • 24.49 லட்சத்தில் இருந்து தொடங்கும் எஸ்யூவியின் முழு வசதியுள்ள ஃபியர்லெஸ்+ வேரியன்ட்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அம்சம் கிடைக்கும்.

இதையும் பார்க்கவும்: 2023 டாடா ஹாரியர் டார்க் எடிஷனை 5 விரிவான படங்களில் பாருங்கள்

10-ஸ்பீக்கர் மியூஸிக் சிஸ்டம்

Tata Harrier 10-speaker JBL music system

  • ஃபேஸ்லிஃப்ட் மூலம், டாடா நிறுவனம் ஹாரியரில் உள்ள ஸ்பீக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளது. எஸ்யூவி ஆனது இப்போது 5 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்கள் மற்றும் அதன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்திற்காக 1 சப்வூஃபரை பெறுகிறது, இது ஃபியர்லெச்+ வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

  • மறுபுறம், எம்ஜி எஸ்யூவி 8-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி மியூஸிக் சிஸ்டமை கொண்டுள்ளது.

ஒரு பெரிய டிரைவர் டிஸ்ப்ளே

Tata Harrier 10.25-inch digital driver's display

  • ஹாரியர் 2023 -ம் ஆண்டில் ரெட் டார்க் பதிப்பில் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவைப் பெற்றிருந்தாலும், அதைவிட பெரிய 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் டாடா அதை உயர்த்தியுள்ளது.

  • இது முழுத் திரையில் நேவிகேஷனை காட்டுகிறது, இது பொதுவாக சொகுசு கார்களில் காணப்படும் ஒரு வசதி அம்சமாகும்.

  • டாடா நிறுவனம் புதிய ஹாரியரை பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் பேஸ்-க்கு மேலே உள்ள ப்யூர் டிரிமில் பொருத்தியுள்ளது, இது ரூ.16.99 லட்சத்தில் தொடங்குகிறது.

மேலும் பார்க்கவும்: மஹிந்திரா எக்ஸ்யுவி700யில் இல்லாமல் 2023 டாடா ஹாரியர் & சஃபாரியில் உள்ள 8 அம்சங்கள் 

ஓட்டுநர் இருக்கைக்கு நினைவக செயல்பாடு

Tata Harrier powered driver seat with memory function

  • இங்கு குறிப்பிடப்பட்டுள்ள டாடா மற்றும் எம்ஜி எஸ்யூவி -கள் இரண்டும் 6 வே பவர்டு டிரைவர் இருக்கையைப் பெறுகின்றன. இருந்த போதும், ஹாரியர் ஓட்டுநர் இருக்கைக்கான நினைவக செயல்பாட்டை வழங்கியுள்ளது உங்கள் விருப்பமான ஓட்டுநர் நிலைகளில் 3 வரை சேமிக்க முடியும் என்பதால், ஹாரியர் ஒரு படி மேலே உள்ளது.

  • இது ஃபியர்லெஸ் டிரிமில் இருந்து கிடைக்கும்.

A post shared by CarDekho India (@cardekhoindia)

டீசல்-ஆட்டோ ஆப்ஷன்

Tata Harrier 6-speed automatic gearbox

  • பல ஆண்டுகளாக ஹெக்டரை விட ஹாரியர் பெற்றிருக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று, அதன் டீசல்-ஆட்டோமெட்டிக் காம்பினேஷன் (6-ஸ்பீடு யூனிட்) ஆகும்.

  • இரண்டு எஸ்யூவி -களும் ஒரே 2-லிட்டர் டீசல் யூனிட்டை 170 PS மற்றும் 350 Nm வழங்கும் போதிலும்.

  • டாடா இந்த எஸ்யூவி -யை மிட்-ஸ்பெக் ப்யூர்+ வேரியன்ட்டிலிருந்து வழங்கியுள்ளது.

  • ஹாரியரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ. 19.99 லட்சத்தில் இருந்து வருகிறது.

தொடர்புடையது: 2023 டாடா ஹாரியர் vs போட்டியாளர்கள்: விலை விவரங்கள்

மகிழ்ச்சி தரும் அம்சங்கள்

Tata Harrier multi-colour ambient lighting

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் ஹாரியர் அதன் எம்ஜி -யை விட மிகவும் பயனுள்ள மற்றும் ஃபங்ஷனல் நன்மைகள் கொண்டுள்ளது என்றாலும், இன்னும் சில நல்ல நன்மைகள் இங்கே உள்ளன. ஜெஸ்டர்-கன்ட்ரோல்டு டெயில்கேட், பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், LED DRL -களுக்கான வரவேற்பு மற்றும் குட்பை அனிமேஷன் செயல்பாடு மற்றும் பெரிய 19-இன்ச் அலாய் வீல்கள் கொண்ட டார்க் எடிஷன் ஆகியவை இதில் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக, 2023 டாடா ஹாரியரின் விலை ரூ.15.49 லட்சத்தில் இருந்து ரூ.27.34 லட்சமாக உள்ளது. எம்ஜி ஹெக்டரை போலவே, இது ஒரு பெரிய தொடுதிரை,  மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ஏடிஏஎஸ்), லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் அபரிமிதமான சாலை இருப்பு போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களுக்காக ஹெக்டருக்கு மேல் ஹாரியரை விலை பிரீமியத்தில் தேர்ந்தெடுப்பீர்களா? உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை

மேலும் படிக்க: ஹாரியர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஹெரியர்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience