• English
  • Login / Register

2023 டாடா ஹாரியர் டார்க் எடிஷனை 5 விரிவான படங்களில் பாருங்கள்

published on அக்டோபர் 25, 2023 08:34 pm by ansh for டாடா ஹெரியர்

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா ஹாரியரின் டார்க் எடிஷன் ஆல் பிளாக் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பெரிய அலாய் வீல்களை கொண்டுள்ளது.

 

2023 Tata Safari Dark Edition

2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உட்பட பல புதிய பிட்டுகளுடன் வந்தது, ஆனால் அவற்றில் டார்க் எடிஷனின் ஆப்ஷன் அப்படியே இருந்தது. புதுப்பிக்கப்பட்ட SUV இன்னும் ஆல் பிளாக் நிறத்தில் வருகிறது, அதை நீங்கள் எங்கள் விரிவான கேலரியில் பார்க்கலாம்.

முன்புறம்

2023 Tata Harrier Dark Edition Front

டார்க் ஹாரியர் முற்றிலும் கருப்பு நிற வெளிப்புற ஷேடைப் பெறுகிறது, பிளாக்டுஅவுட் கிரில், கருப்பு பம்பர் மற்றும் கருப்பு ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் பூசப்படாத ஒரே ஒரு அம்சம் குரோம் டாடா லோகோ மட்டுமே.

மேலும் படிக்க: சமீபத்திய டாடா கர்வ்வ் ஸ்பை புகைப்படங்கள் அது கூபே வடிவமைப்பில் இருப்பதை காட்டுகின்றன

பக்கவாட்டுப் பகுதிகள்

2023 Tata Harrier Dark Edition Side

பக்கவாட்டு தோற்றம்  அதே கருப்பு நிறத்தை பெறுகிறது. இங்கே, ரூஃப் ரெயில்கள், ORVMகள் மற்றும் கதவு கைப்பிடிகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன மற்றும் இங்குள்ள ஹாரியர் எழுத்துகள் குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இது முன்புற கதவுக்கு அருகில் டார்க் பேட்ஜிங்கையும் பெறுகிறது.

2023 Tata Harrier Dark Edition Alloy Wheel

டார்க் எடிஷன் மூலம், இரண்டு அளவுகளில் கிடைக்கும் ஆல் பிளாக் அலாய் வீல்களையும் பெறுவீர்கள். லோயர்-ஸ்பெக் டார்க் எடிஷன் கார் வேரியன்ட்களில் 18-இன்ச் அலாய் வீல்களும், டாப்-ஸ்பெக் வேரியன்ட்களில் 19-இன்ச் வேரியன்ட்களும் கிடைக்கும்.

டாஷ்போர்டு

2023 Tata Harrier Dark Edition Dashboard

வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்திலும் பிளாக் தீம் உள்ளது. டாஷ்போர்டு மூன்று கருப்பு அடுக்குகளுடன் வருகிறது, அவற்றில் ஒன்று கார்பன் ஃபைபர் போன்ற ஃபினிஷ் பெறுகிறது, இது சாதாரண வேரியன்ட்களில் வெவ்வேறு வண்ண ஆப்ஷன்களை பெறுகிறது.

2023 Tata Harrier Dark Edition Centre Console

கதவுகள், கிராப் ரெயில்ஸ் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை பியானோ கருப்பு நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பழைய சஃபாரி ரெட் டார்க் எடிஷனிலிருந்து  2023 டாடா சஃபாரி டார்க் எடிஷன் எப்படி வேறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்

இருக்கைகள்

2023 Tata Harrier Dark Edition Rear Seats

டார்க் எடிஷனின் இருக்கைகள் பிளாக் மற்றும் கிரே நிறத்தில் முக்கோண வடிவமைப்பு கூறுகளுடன் வருகின்றன. அதே மாதிரி வடிவமைப்பு பின்புற இருக்கைகளிலும் காணப்படுகிறது.

விலை

டாடா ஹாரியரின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.27.35 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டார்க் எடிஷன் மிட்-ஸ்பெக் ப்யூர்+ S வேரியன்ட் விலை  ரூ.19.99 இலட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) -லிருந்து தொடங்குகிறது.. புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் தொடர்ந்து  மஹிந்திரா XUV700, MG ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ்  ஆகிய போட்டியாளர்களுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள: டாடா ஹாரியர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஹெரியர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience