சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கடந்த வாரம் (பிப்ரவரி 12-16) கார் துறையில் நடைபெற்ற முக்கியமான அனைத்து விஷயங்களும் இங்கே

published on பிப்ரவரி 19, 2024 08:13 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி

கடந்த வாரம், டாடா EV -களின் விலை குறைக்கப்பட்டது, குளோபல் NCAP ஆல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் -க்கான கிராஷ் டெஸ்ட் முடிவுகளின் அறிவிப்பையும் பார்க்க முடிந்தது.

பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில், ரெனால்ட் மற்றும் ஸ்கோடாவிலிருந்து சில உலகளாவிய வெளியீடுகளை பார்க்க முடிந்தது, அதே நேரத்தில் டாடா நிறுவனம் சிறந்த இரண்டு EV -களில் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டது. அதே வாரத்தில், குளோபல் என்சிஏபி ஒரு புதிய கிராஷ் டெஸ்ட் முடிவை அறிவித்தது, அதே நேரத்தில் கியாவிடமிருந்து வரவிருக்கும் எலக்ட்ரிக் காரின் சோதனை காரையும் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தின் நடைபெற்ற அனைத்து முக்கிய விஷயங்களையும் பார்ப்போம்.

டாடா டியாகோ EV நெக்ஸான் EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

டாடாவின் இதுவரை அதிகம் விற்பனையான Tata Nexon EV Tata Tiago EV ஆகிய கார்கள் இப்போது ரூ.1.2 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும். டாடாவின் அறிவிப்பின்படி, பேட்டரி பேக் செலவு குறைக்கப்பட்டதால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது, ஆகவே இந்த கார்கள் முன்பை விட விலை குறைவாக கிடைக்கும்.

மீண்டும் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ள டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் 2018 ஆம் ஆண்டில் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் முழுமையாக 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற இந்தியாவின் முதல் மாடல் ஆகும். ​​2024 -ம் ஆண்டில் பெரியோர் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் Tata Nexon ஃபேஸ்லிஃப்ட் கார் குளோபல் NCAP -யில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

புதிய பதிப்பைப் பெறும் ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா ஸ்லாவியா டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட் அடிப்படையில் மற்றொரு புதிய ஸ்டைல் ​​பதிப்பைப் பெறுகிறது. ஸ்கோடா ஸ்லாவியாவின் இந்த புதிய லிமிடெட் எடிஷன் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெடிக் ஆட் ஆன் -களை கொண்டுள்ளது, அதே நேரத்தில் இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் இல்லை.

இந்தியாவிற்கான BYD சீல் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது

BYD சீல் என்பது ஆல் எலக்ட்ரிக் செடான் ஆகும், இது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, இந்தியாவிற்கான அதன் வெளியீட்டு தேதியை BYD நிறுவனம் உறுதி செய்துள்ளது. BYD e6 எம்பிவி மற்றும் BYD அட்டோ 3 எஸ்யூவி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவில் BYD வழங்கும் மூன்றாவது காராக இது இருக்கும்.

ரெனால்ட் டஸ்டர் துருக்கியில் வெளியிடப்பட்டது

மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவி கடந்த வாரம் துருக்கியில் வெளியிடப்பட்டது, இந்த முறை ரெனால்ட் பேட்ஜின் கீழ் இந்த கார் வெளியாகியுள்ளது. புதிய ரெனால்ட் டஸ்டர் உலகளவில் மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) டிரைவ் ட்ரெய்ன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா XUV700 -யின் புதிய வேரியன்ட் விவரம் வெளியாகியுள்ளது

மஹிந்திரா XUV700 விரைவில் புதிய பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை பெறலாம். டில்லியின் NCT அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறையின் ஆவணம் இணையத்தில் வெளியானது. அதைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யலாம்.

இந்தியாவில் கியா EV9 சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது

கியா தனது ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -யான EV9 -யை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்தில்,இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா EV9 -யின் ஸ்பை ஷாட்கள் அதன் முன் மற்றும் பின்புற வடிவமைப்பை தெளிவாக காட்டுகின்றன.

ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் அறிமுகமானது

கடந்த வாரம் உலகளவில் அறிமுகமான ஆக்டேவியாவிற்கு மிட்லைஃப் அப்டேட்டை ஸ்கோடா வழங்கியுள்ளது. அப்டேட்டட் ஆக்டேவியா -வின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது, மேலும் ஃபெர்பாமன்ஸ் சார்ந்த RS வேரியன்ட் முன்பை விட இப்போது அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது.

BMW 7 சீரிஸ் பாதுகாப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

BMW 7 சீரிஸின் பாதுகாப்பு பதிப்பு இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த BMW செடான் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களை தாங்கும் திறன் கொண்டது. உயர் பதவியில் உள்ள அதிகாரிகள், விஐபிக்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நபர்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

shreyash

  • 20 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Tata நெக்ஸன் இவி

Read Full News

explore similar கார்கள்

டாடா நிக்சன்

Rs.8 - 15.50 லட்சம்* get சாலை விலை
டீசல்23.23 கேஎம்பிஎல்
சிஎன்ஜி17.44 கிமீ / கிலோ
பெட்ரோல்17.44 கேஎம்பிஎல்
செப்டம்பர் சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா எக்ஸ்யூவி700

Rs.13.99 - 26.04 லட்சம்* get சாலை விலை
டீசல்17 கேஎம்பிஎல்
பெட்ரோல்15 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
செப்டம்பர் சலுகைகள்ஐ காண்க

ஸ்கோடா ஸ்லாவியா

Rs.10.69 - 18.69 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்20.32 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
செப்டம்பர் சலுகைகள்ஐ காண்க

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை