Mahindra XUV700 கார் ஒரு பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டை விரைவில் பெறவுள்ளது
published on பிப்ரவரி 14, 2024 07:01 pm by ansh for மஹிந்திரா எக்ஸ்யூவி700
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய வேரியன்ட் பெரும்பாலும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் வரும் மற்றும் டீசல் இன்ஜினுடன் கிடைக்காது.
-
மஹிந்திரா XUV700 ஆனது 5 வேரியன்ட்களில் வருகிறது: MX, AX3, AX5, AX7 மற்றும் AX7L.
-
பேஸ்-ஸ்பெக் MX பெட்ரோல் அதிக டிரிம்களில் இருந்து 6-ஸ்பீடு AT யூனிட் உடன்வரும்.
-
புதிய ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும்.
-
தொடர்புடைய மேனுவல் வேரியன்ட் விலை சுமார் ரூ.1.6 லட்சமாக கூடுதலாக இருக்கும்.
-
பேஸ்-ஸ்பெக் MX வேரியன்ட் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டூயல்-ஃப்ரன்ட் ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் இதில் இருக்கும்.
ஆன்லைனில் வெளியாகியுள்ள டெல்லியின் NCT -யின் போக்குவரத்துத் துறையின் ஆவணத்தின்படி மஹிந்திரா XUV700 பேஸ்-ஸ்பெக் MX பெட்ரோல் டிரிம் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெறும் என்று தெரிய வருகின்றது. விலை குறைவான பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
இப்போதைக்கு, XUV700 -யின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் ஒன்-அபோவ்-பேஸ் AX3 வேரியன்ட்டிலிருந்து தொடங்குகின்றன. எனவே பேஸ் வேரியன்ட்டுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குவது 2-பெடல் அமைப்பை மிகவும் விலை குறைவானதாக மாற்றும். இந்த ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ், பெரும்பாலும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர், 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (200 PS/380 Nm) வழங்கப்படும், ஆனால் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் கிடைக்காது.
பேஸ்-ஸ்பெக் காரில் உள்ள வசதிகள்
XUV700 -ன் MX வேரியன்ட் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய டிரைவர் சீட், பின்புற இருக்கைகளுக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் நான்கு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது.
இதையும் பார்க்கவும்: முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட 5-டோர் Mahindra Thar … பின்புற தோற்றத்தை விரிவாகக் பார்க்க முடிந்தது
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டூயல் ஃபிரன்ட் முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை
மஹிந்திரா XUV700 பேஸ்-ஸ்பெக் MX பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ. 13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் சுமார் ரூ.1.6 லட்சம் கூடுதலாக இருக்கும். XUV700 -யை பொறுத்தவரை, அதன் விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ. 26.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கின்றது. மேலும் இது ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி -க்கும், 5-சீட்டர் வேரியன்ட்கள் ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஹெக்டர், மற்றும் டாடா ஹாரியர் போன்ற கார்களுக்கும் போட்டியாக இருக்கின்றன.
மேலும் படிக்க: XUV700 ஆன் ரோடு விலை