இந்தியாவில் BYD Seal வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 15, 2024 08:56 pm by shreyash for பிஒய்டி சீல்
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில், BYD சீல் காரின் விலை ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.
-
BYD சீல் கார் இ-பிளாட்ஃபார்ம் 3.0 -வை அடிப்படையாகக் கொண்டது, இது BYD அட்டோ 3 -க்கு அடிப்படையாக இருக்கும்.
-
சீல் காரின் குளோபல்-ஸ்பெக் வெர்ஷன் 82.5 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது, இது 570 கிமீ (WLTP-ரேட்டட்) ரேஞ்சை வழங்குகிறது.
-
இது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
-
15.6-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இதில் அடங்கும்.
-
BYD சீல் ஆனது யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
BYD சீல் ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் இந்தியாவில் அறிமுகமானது, இப்போது, மார்ச் 5, 2024 அன்று இந்தியாவில் இந்த ஆல்-எலக்ட்ரிக் செடான் அறிமுகப்படுத்தப்படும் தேதியை BYD உறுதிப்படுத்தியுள்ளது. BYD e6 MPV மற்றும் இந்த வேர்ல்ட் அட்டோ 3 எஸ்யூவி கார்களை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது காராக இது இருக்கும். . BYD சீல் காரை பற்றிய விவரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
வடிவமைப்பு
BYD சீல் கார் சிறப்பான ஏரோடனமிக் வடிவமைப்பு மற்றும் அதே நேரத்தில், சிறிதளவு வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது U-வடிவ ஹெட்லைட் கிளஸ்டரைபபெறுகிறது, கீழே LED DRL கள் உள்ளன, பின்புறத்தில், இது அனைத்து LED டெயில்லைட்களையும் டாட் மேட்ரிக்ஸ் LED வடிவத்துடன் இணைக்கின்றது. முன் மற்றும் பின்பக்க பம்பர்கள் ஏரோடைனமிக் வடிவமைப்பில் உள்ளன, இவை சிறிதளவு ஸ்போர்ட்டியான தோற்றத்தை காருக்கு கொடுக்கின்றன.
பக்கவாட்டில் இருந்து, BYD சீல் ஒரு மென்மையான சாய்வான கூரையைக் கொண்டுள்ளது, இது ஒரு குறுகிய பின்புற முனையுடன் ஒன்றிணைந்து, ஒரு ஃபாஸ்ட்பேக் தோற்றத்தை காருக்கு கொடுக்கின்றது. இது 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன மற்றும் 0.219 ஏர் டிராக் கோ-எஃபிசியன்ட்டை கொண்டுள்ளது.
செல் டு பாடி (CTB) தொழில்நுட்பம்
BYD சீல் காரில் CTB (செல் டு பாடி) தொழில்நுட்பத்தைப் உள்ளது, இதில் பேட்டரி பேக் நேரடியாக வாகனத்தின் ஃபிரேம் உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது, இதன் மூலம் செடானின் கையாளுதல் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் மேம்படுகின்றது. இது e-பிளாட்ஃபார்ம் 3.0 அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது , இது அட்டோ 3 மின்சார எஸ்யூவி -க்கான அடித்தளமாகவும் இருக்கும்.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
உட்புறத்தில் , BYD சீல் டூயல்-டோன் டேஷ்போர்டு தீம் மற்றும் ஸ்போர்ட்டியான சீட்களுடன் வருகின்றது. உள்ளே உள்ள முக்கிய சிறப்பம்சம் அதன் பெரிய 15.6-இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அட்டோ 3 மற்றும் e6 MPV உடன் வழங்கப்பட்டுள்ளதை விட பெரியது ஆகும். இது 12-ஸ்பீக்கர் டைனாடியோ சவுண்ட் சிஸ்டமுடன் வருகிறது.
குளோபல்-ஸ்பெக் சீலில் உள்ள மற்ற பிரீமியம் அம்சங்களில் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், மெமரி செயல்பாட்டுடன் 8-வே பவர்டு அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், 6-வழி எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் கோ-டிரைவர் சீட், வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகிய வசதிகள் உள்ளன.
சீல் காரில் வெஹிகிள் டூ (V2L) வெஹிகிள் வசதி உள்ளது, இது வாகனத்தின் பேட்டரியை பயன்படுத்தி வெளிப்புற சாதனங்களை இயக்கலாம்.
பேட்டரி பேக், ரேஞ்ச் & சார்ஜிங்
குளோபல்-ஸ்பெக் BYD சீல் 82.5 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது:
பேட்டரி பேக் |
82.5 kWh |
82.5 kWh |
டிரைவ்டிரெய்ன் |
பின் சக்கர இயக்கி |
ஆல் வீல் டிரைவ் |
பவர் |
313 PS |
530 PS |
டார்க் |
360 Nm |
670 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (WLTP ரேட்டட்) |
570 கி.மீ |
520 கி.மீ |
ஆக்சலரேஷன் 0-100 கிமீ/மணி |
5.9 வினாடிகள் |
3.8 வினாடிகள் |
இரண்டு வேரியன்ட்களின் டாப்-ஸ்பீட் 180 கிமீ/மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. BYD சீல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளபடி பல சார்ஜிங் ஆப்ஷன்களுடன் வருகிறது:
சார்ஜர் |
சார்ஜிங் நேரம் |
|
டிரைவ் டைப் |
ரியர் வீல் டிரைவ் |
ஆல் வீல் டிரைவ் |
11 kW AC (0-100 சதவீதம்) |
8.6 மணி நேரம் |
8.6 மணி நேரம் |
150 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் (10-80 சதவீதம்) |
37 நிமிடங்கள் |
37 நிமிடங்கள் |
இரண்டு வேரியன்ட்களும் ஒரே 82.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருப்பதால், அவற்றின் சார்ஜிங் நேரம் ஒன்றுதான்.
பொறுப்பு துறப்பு: இந்த விவரங்கள் BYD சீலின் உலகளாவிய பதிப்பிற்கானவை, ஆகவே இந்தியா-ஸ்பெக் பதிப்பிற்கு மாற்றம் இருக்கலாம்.
யூரோ NCAP -லிருந்து 5-நட்சத்திரங்களை பெற்றுள்ளது
2023 ஆம் ஆண்டில், BYD சீல் யூரோ NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் -க்கு உட்படுத்தப்பட்டது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முழுமையான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆகியவை அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் சேஞ்ச் மற்றும் டிபார்ச்சர் அசிஸ்ட், மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்றவற்றை உள்ளடக்கிய ஃபுல் சூட் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்(ADAS) -களுடன் வருகின்றது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
BYD சீல் இந்தியாவில் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கலாம். இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 -க்கும் BMW i4 -வுக்கு விலை குறைவான மாற்றாகவும் இது இருக்கும்.
0 out of 0 found this helpful