• English
  • Login / Register

Tata Nexon EV & Tata Tiago EV ஆகிய கார்கள் இப்போது ரூ.1.2 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும்

published on பிப்ரவரி 14, 2024 05:37 pm by shreyash for டாடா டியாகோ இவி

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பேட்டரி பேக்கின் விலை குறைந்துள்ளதால் இந்த கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

\Tata Nexon EV & Tiago EV

  • டாடா நெக்ஸான் EV காரின் விலை ரூ. 1.2 லட்சம் வரை குறைந்துள்ளது.

  • டாடாவின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரூ.70,000 வரை விலை குறைந்துள்ளது.

  • சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Punch EV மற்றும் Tigor EV ஆகியவற்றில் விலை -யில் மாற்றங்கள் இல்லை.

மின்சார வாகனத்தில் (EV), பேட்டரி பேக் என்பது மிகவும் விலையுயர்ந்த ஒரு பொருள்  ஆகும். எனவே பேட்டரி பேக் விலையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டதால். டாடா அதன் இரண்டு சிறந்த டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா டியாகோ EV ஆகிய கார்களின் விலையை குறைத்துள்ளது. இருப்பினும், டாடா பஞ்ச் EV -யின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாடா டிகோர் EV விலையிலும் மாற்றம் இல்லை. இந்த கார்களின் விலை ஏற்கனவே பேட்டரி பேக்கிற்கு ஏற்றவாறே உள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

டியாகோ EV & நெக்ஸான் EV ஆகிய கார்களின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்:

டாடா டியாகோ EV

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

XE மீடியம் ரேஞ்ச்

ரூ.8.69 லட்சம்

ரூ.7.99 லட்சம்

(-) ரூ. 70,000

XT மீடியம் ரேஞ்ச்

ரூ.9.29 லட்சம்

ரூ. 8.99 லட்சம்

(-) ரூ. 30,000

XT லாங் ரேஞ்ச்

ரூ.10.24 லட்சம்

ரூ.9.99 லட்சம்

(-) ரூ. 25,000

XZ+ லாங் ரேஞ்ச்

ரூ.11.04 லட்சம்

ரூ.10.89 லட்சம்

(-) ரூ. 15,000

XZ+ டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச்

ரூ.11.54 லட்சம்

ரூ.11.39 லட்சம்

(-) ரூ. 15,000

XZ+ லாங் ரேஞ்ச் (7.2 kW சார்ஜருடன்)

ரூ.11.54 லட்சம்

ரூ.11.39 லட்சம்

(-) ரூ. 15,000

XZ+ டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச் (7.2 kW சார்ஜருடன்)

ரூ.12.04 லட்சம்

ரூ.11.89 லட்சம்

(-) ரூ. 15,000

  • டாடா டியாகோ EV இப்போது ரூ.7.99 லட்சம் குறைந்த ஆரம்ப விலையில் கிடைக்கும், இது முன்பை விட ரூ.70,000 குறைவு. எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கிற்கான அதிகபட்ச விலைக் குறைப்பு அதன் பேஸ்-ஸ்பெக் XE வேரியன்ட் ஆகும்.

  • டியாகோ EV -யின் மிட்-ஸ்பெக் XT வேரியன்ட்களின் விலை ரூ.30,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

  • டியாகோ EV -யின் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களில் வாடிக்கையாளர்கள் கணிசமாக சேமிக்க முடியும் என்றாலும், டாப்-ஸ்பெக் XZ+ வேரியன்ட்களுக்கான விலைக் குறைப்பு ரூ.15,000 மட்டுமே.

  • டாடா டியாகோ EV -க்கான விலை இப்போது ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.11.89 லட்சம் வரை உள்ளது.

இதையும் பார்க்கவும்: குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாக்கும், தோட்டா துளைக்காது… இந்தியாவில் BMW 7 Series Protection கார் அறிமுகம்

டாடா நெக்ஸான்

2023 Tata Nexon EV

மீடியம் ரேஞ்ச்

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

கிரியேட்டிவ் பிளஸ்

ரூ.14.74 லட்சம்

ரூ.14.49 லட்சம்

(-) ரூ. 25,000

ஃபியர்லெஸ்

ரூ.16.19 லட்சம்

ரூ.15.99 லட்சம்

(-) ரூ. 20,000

ஃபியர்லெஸ் பிளஸ்

ரூ.16.69 லட்சம்

ரூ.16.49 லட்சம்

(-) ரூ. 20,000

ஃபியர்லெஸ் பிளஸ் எஸ்

ரூ.17.19 லட்சம்

ரூ.16.99 லட்சம்

(-) ரூ. 20,000

எம்பவர்டு

ரூ.17.84 லட்சம்

ரூ.17.49 லட்சம்

(-) ரூ. 35,000

இதையும் பார்க்கவும்: 2024 ஜனவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 கார் பிராண்டுகள்: ஹூண்டாய் டாடாவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தது

லாங் ரேஞ்ச்

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

ஃபியர்லெஸ்

ரூ.18.19 லட்சம்

ரூ.16.99 லட்சம்

(-) ரூ. 1.2 லட்சம்

ஃபியர்லெஸ் பிளஸ்

ரூ.18.69 லட்சம்

ரூ.17.49 லட்சம்

(-) ரூ. 1.2 லட்சம்

ஃபியர்லெஸ் பிளஸ் எஸ்

ரூ.19.19 லட்சம்

ரூ.17.99 லட்சம்

(-) ரூ. 1.2 லட்சம்

எம்பவர்டுபிளஸ்

ரூ.19.94 லட்சம்

ரூ.19.29 லட்சம்

(-) ரூ. 65,000

  • டாடா நெக்ஸான் EVயின் மிட்-ஸ்பெக் லாங்-ரேஞ்ச் ஃபியர்லெஸ் டிரிம்கள் விலை ரூ.1.2 லட்சம் வரை உள்ளது. இருப்பினும், நெக்ஸான் EV -யின் டாப்-ஸ்பெக் எம்பவர்டு பிளஸ் லாங் ரேஞ்ச் டிரிம் ரூ.65,000 விலைக் குறைந்துள்ளது.

  • மீடியம் ரேஞ்ச் வேரியன்ட்களை பற்றி பார்க்கும் போது, அவற்றின் விலை ரூ.35,000 வரை விலை குறைந்துள்ளது.

  • Tata Nexon EVக்கான விலைகள் இப்போது ரூ.14.49 லட்சத்தில் தொடங்கி ரூ.19.29 லட்சம் வரை செல்கின்றன.

பேட்டரி விலை குறைந்ததன் பலனை டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களின் விலைகளைக் குறைப்பதன் மூலமாக கொடுத்துள்ளது. இதனால் இந்த கார்களின் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மற்றும் EV பதிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியை சற்று குறைக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இந்த விலை குறைப்பால், மின்சார கார் வாங்கலாம் என பரிசீலிப்பீர்களா ? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: டியாகோ EV ஆட்டோமெட்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata Tia கோ EV

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா Seltos ev
    க்யா Seltos ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience