Kia Sonet ஃபேஸ்லிப்ட்க்கான அனைத்து கலர் ஆப்ஷன்களின் முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்

published on டிசம்பர் 18, 2023 06:29 pm by rohit for க்யா சோனெட்

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 8 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் வழங்கப்படும், அதே நேரத்தில் X-லைன் வேரியன்ட் அதற்கென உள்ள மேட் ஃபினிஷ் ஷேடை பெறுகிறது.

2024 Kia Sonet colour options

  • ஃபேஸ்லிப்டட் Kia Sonet சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • மொத்தம் ஏழு வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line.

  • செல்டோஸிலிருந்து கடன் வாங்கிய ஒரே ஒரு புதிய நிறத்தைப் பெறுகிறது; மற்றவை எதுவும் மாறவில்லை.

  • பழைய சோனெட்டின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்ளன; மற்றும் டீசல்-MT ஆப்ஷன் மீண்டும் திரும்பியுள்ளது.

  • ஜனவரி 2024 -ல் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும்.

கியா சோனெட் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமானது. அதன் விலை விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றாலும், கியா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -க்கான முன்பதிவுகளை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளது. எனவே புதிய சோனெட் -டை வாங்க நீங்கள் திட்டமிட்டால், அதில் கிடைக்கும் அனைத்து வண்ணங்களையும் பாருங்கள்:

2024 Kia Sonet Pewter Olive

  • பியூட்டர் ஆலிவ் (புதியது)

2024 Kia Sonet Glacier White Pearl

  • கிளேஸியர் வொயிட் பேர்ல்

2024 Kia Sonet Sparkling Silver

  • ஸ்பார்க்ளிங் சில்வர்

2024 Kia Sonet Gravity Grey

  • கிராவிட்டி கிரே

2024 Kia Sonet Aurora Black Pearl

  • அரோரா பிளாக் பேர்ல்

2024 Kia Sonet Intense Red

  • இன்டென்ஸ் ரெட்

2024 Kia Sonet Imperial Blue

  • இம்பீரியல் ப்ளூ

2024 Kia Sonet Clear White

  • கிளியர் வொயிட்

இப்போது நிறுத்தப்படவுள்ள மாடலில் இருந்து அனைத்து ஷேட்களும் மாற்றப்பட்டுள்ளன, புதிய கியா செல்டோஸ் மாடலில் இருந்து கடன் வாங்கப்பட்ட பியூட்டர் ஆலிவ் நிறம் மட்டுமே கூடுதலாக உள்ளது.. 2020 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோனெட்டில் அறிமுகமான பீஜ் கோல்ட் ஷேட் சிறிது நேரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது அது  ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலுடன் திரும்பப் கிடைக்காது.

இது கீழே குறிப்பிட்டுள்ளபடி 2 டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுகிறது:

2024 Kia Sonet Intense Red with Aurora Black Pearl

  • இன்டென்ஸ் ரெட் வித் அரோரா பிளாக் பேர்ல்

2024 Kia Sonet Glacier White Pearl with Aurora Black Pearl

  • கிளேஸியர் வொயிட் பேர்ல் வித் அரோரா பிளாக் பேர்ல்

2024 Kia Sonet X-Line

ரேஞ்ச்-டாப்பிங் எக்ஸ்-லைன் டிரிம் 'எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபிக்' எனப்படும் தனித்துவமான மேட் ஃபினிஷ் ஷேடில் வருகிறது.

வெளிப்புற ஷேடுகளை தவிர, கேபின் இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் பிற உட்புற சிறப்பம்சங்கள் மூலம் வெவ்வேறு வண்ண ஆப்ஷன்களில் வருகிறது.

2024 Kia Sonet X-Line and GT Line interiors

X-லைன் வேரியன்ட், சேஜ் கிரீன் லெதரெட் இருக்கைகள் மற்றும் இன்செர்ட்களுடன் கூடிய ஆல்-பிளாக் கேபினையும் கொண்டுள்ளது. நீங்கள் GTX+ வேரியன்ட்டை தேர்வுசெய்தால் (GT லைனின் கீழ்), அது முழுக்க ஆல் பிளாக் கேபின் தீம் உடன் கிடைக்கும். ஆனால் அப்ஹோல்ஸ்டரி பிளாக் மற்றும் வொயிட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும். அதேசமயம் கேபினில் சில வொயிட் இன்செர்ட்களும் உள்ளன.

2024 Kia Sonet Tech Line interiors

டெக் லைன் வேரியன்ட்கள் (HT லைன் என்றும் அழைக்கப்படுகின்றன) மொத்தம் மூன்று கேபின் தீம்களைப் பெறுகின்றன: செமி-லெதரெட் இருக்கைகள், பிளாக் மற்றும் பெய்ஜ் நிற கேபின் தீம் மற்றும் செமி-லெதரெட் இருக்கைகள் கொண்ட அனைத்து பிளாக் கேபின் மற்றும் பிளாக் நிறத்துடன் கூடிய பிளாக் கேபின் மற்றும் பிரெளவுன் நிறச் இன்செர்ட்களுடன் கூடிய பிரெளவுன் நிற இருக்கை அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன.

தொடர்புடையது: ஃபேஸ்லிஃப்ட் Kia Sonet காரில் கொடுக்கப்பட்டுள்ள வேரியன்ட் வாரியான வசதிகள் இங்கே

பவர்டிரெய்ன் மற்றும் அம்சங்கள்

கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்டை, பழைய மாடலின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன், அதன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கூடுதலாக வழங்குகிறது. உபகரணங்களைப் பொறுத்தவரை, அதன் முக்கிய அம்சங்களில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் (இப்போது ஸ்டாண்டர்டாக கிடைக்கும்) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும். மேலும் ‘சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக கட்டுரையில்’ விரிவான தகவல்களை நீங்கள் காணலாம்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

2024 Kia Sonet rear

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் ஜனவரி 2024 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். புதுப்பிக்கப்பட்ட சப்-4m எஸ்யூவி -யின் விலையை கியா ரூ. 8 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கலாம். இது ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியற்றுடன் போட்டியிடும். மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவருக்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: கியா சோனெட் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது க்யா சோனெட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience