• English
  • Login / Register

எக்ஸ்க்ளூசிவ்: Tata Punch EV -யின் பேட்டரி மற்றும் செயல்திறன் விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ளன

டாடா பன்ச் EV க்காக ஜனவரி 16, 2024 12:50 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 104 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா நிறுவனம் 25 kWh மற்றும் 35 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்குகளுடன் பன்ச் EV -யை வழங்கலாம். இவற்றின் கிளைம்டு ரேஞ்ச் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Tata Punch EV

  • டாடா பன்ச் EV -யை ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

  • கோரப்பட்ட ரேஞ்ச் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை; ரேஞ்ச் 400 கி.மீ வரை இருக்கலாம்.

  • நீளமான LED DRL ஸ்ட்ரிப், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய ஹெட்லைட்கள் ஆகியவை அடங்கும்.

  • கேபினில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

  • டூயல் 10.25-இன்ச் டிஸ்பிளேஸ், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.

  • விலை ரூ.12 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

டாடா பன்ச் EV ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டாடா நிறுவனம் ஏற்கனவே ஆல் எலக்ட்ரிக் பன்ச் -ன் வேரியன்ட் வரிசை மற்றும் முக்கிய அம்சங்களின் விவரங்களை வெளியிட்டிருந்தது. இப்போது பவர்டிரெய்ன் பற்றிய பிரத்யேக விவரங்களும் இப்போது கிடைத்துள்ளது.

பவர்டிரெயின் விவரங்கள் ?

டாடா பன்ச் EV -க்கு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும், ஒவ்வொன்றும் அதற்கென உள்ள மின்சார மோட்டாருடன் வரும். அதன் விவரங்கள்:

Tata Punch EV electric specifications

பன்ச் EV -யின் இரண்டு பதிப்புகளும் ஒற்றை மின்சார மோட்டாரை பெறலாம், பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் வரும். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் இவற்றின் மூலமாக கூடுதல் செயல்திறன் கிடைக்கும். இரண்டு பேட்டரி பேக்குகளின் கிளைம்டு ரேஞ்ச் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. டாடா முன்பு 500 கி.மீ (குறைந்தபட்சம் பெரிய பேட்டரி பேக்குடன்) ரேஞ்ச் -ஐ கொடுக்கும் என கூறியுள்ளது. ஆனால் இந்த பேட்டரி பேக் மூலமாக கார் 400 கி.மீ வரை செல்லும் என எதிர்பார்க்கிறோம்.

பன்ச் EV -யின் விரைவான கண்ணோட்டம்

Tata Punch EV

மைக்ரோ எஸ்யூவி -யின் EV புதிய அப்டேட்டுக்காக, டாடா அதன் முன்பக்கத்தை  மாற்றியமைத்துள்ளது, மேலும் அதை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் EV -க்கு இணையாகக் இது மாற்றப்பட்டுள்ளது. இது முன்பக்கம் அகலம் முழுமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள்ள ஒரு நீளமான LED DRL ஸ்டிரிப், ஹெட்லைட் அமைப்பிற்கான ஒரு முக்கோண வடிவ ஹவுஸிங் மற்றும் பன்ச் -ன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் வேரியன்ட்களில் கிரில் இருக்கும் முன்பக்கத்தில் அமைந்துள்ள சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பக்கவாட்டில், புதிய அலாய் வீல்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்க முடிகின்றது. பின்புறத்தில், அது இன்னும் அதே LED டெயில்லைட்களை கொண்டுள்ளது, ஆனால் அது  மேம்படுத்தப்பட்டுள்ளது. பன்ச் EV -யில் பம்பர் வடிவமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்டில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த 7 புதுப்பிப்புகள்

கேபின் மற்றும் போர்டில் உள்ள அம்சங்கள்

இல்லுமினேட்டட் 'டாடா' லோகோ, பேடில் ஷிஃப்டர்கள் (பேட்டரி ரீஜெனரேஷன்), டிரைவ் செலக்டருக்கான டிஸ்பிளேயுடன் கூடிய ரோட்டரி டயல் மற்றும் டச்-எனேபில்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றைக் கொண்ட புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் இந்த காரில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.

Tata Punch EV interior

பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். அதன் பாதுகாப்பு கருவியில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்  (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை உள்ளன.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Tata Punch EV rear

டாடா பன்ச் EV -யின் ஆரம்ப விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது சிட்ரோன் eC3 -க்கு முதன்மை போட்டியாளராக இருக்கும் . அதே வேளையில், எம்ஜி காமெட் இவி மற்றும் டாடா டியாகோ EV பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் இது டாடா நெக்ஸான் EV விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: பன்ச் AMT

was this article helpful ?

Write your Comment on Tata பன்ச் EV

explore மேலும் on டாடா பன்ச் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience