சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சிட்ரோன் eC3 மற்றும் அதன் போட்டியாளர்கள்: அவற்றின் விலைகளைப் பற்றி பேசலாம்

citroen ec3 க்காக மார்ச் 02, 2023 07:26 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மூன்று EV-க்களில், eC3 மிகப்பெரிய 29.2 kWh பேட்டரி பேக் அளவையும் 320 கி.மீ பயண தூரத்துக்கு ரேன்ஜ் -யையும் கொண்டுள்ளது.

சிட்ரோன் இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் விலைகளை இப்போது வெளியிட்டுள்ளது. eC3இன் விலை ரூ.11.50 இலட்சத்தில் தொடங்குகிறது. நுழைவு நிலை EV சலுகையாக, அதன் முக்கியப் போட்டியாளர்களாக டாடா டியாகோ EV மற்றும் டைகோர் EV ஆகிய கார்கள் இருக்கின்றன. விலையைப் பொறுத்து அவைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என பார்ப்போம் வாருங்கள்.

விலை சோதனை

சிட்ரோயன் eC3

டாடா டியாகோ EV

டாடா டைகோர் EV

1

3.3kW சார்ஜர் உடன் 19.2kWh


XE - ரூ. 8.69 இலட்சம்

XT - ரூ. 9.29 இலட்சம்

3.3kW சார்ஜர் உடன் 24kWh

XT - ரூ. 10.19 இலட்சம்

XZ+ - ரூ. 10.99 இலட்சம்

XZ+ டெக்லக்ஸ்- ரூ.11.49 இலட்சம்

2

29.2kWh பேட்டரி பேக்

7.2kW சார்ஜர் உடன் 24kWh

26kWh பேட்டரி பேக்

லைவ்-ரூ.11.50 இலட்சம்

XZ+ - ரூ. 11.49 இலட்சம்

ஃபீல்.ரூ.12.13 இலட்சம்

XZ+ டெக்லக்ஸ்- ரூ.11.99 இலட்சம்

XE - ரூ. 12.49 இலட்சம்

ஃபீல் வைப் பேக் - ரூ. 12.28 இலட்சம்

ஃபீல் டுயூயல்-டோன் வைப் பேக்-ரூ.12.43 இலட்சம்

XT - ரூ. 12.99 இலட்சம்

XZ+ - ரூ. 13.49 இலட்சம்

XZ+ லக்ஸ் - ரூ. 13.75 இலட்சம்

  • eC3 உடன் டியாகோ EV கடுமையாகப் போட்டியிடுகிறது. இரண்டு மாடல்களின் பேஸ் வேரியண்ட்களுக்கும் இடையில் ரூ.2.81 இலட்சம் விலையில் வித்தியாசம் உள்ளது. ரூ.1.31 இலட்சத்திற்கும் கூடுதல் விலை என்றாலும் கூட நீண்ட-தூர பயணத்திற்கேற்ற காருடன் டியாகோ EV ஒப்பிடக்கூடியதாகவே இருக்கிறது.

  • இரு EV ஹேட்ச்பேக்குகளையும் விட டைகோர் EV அதிக தொடக்க விலை கொண்டதாக உள்ளது, eC3 இன் முதன்மை காரைவிட ரூ.6000 கூடுதல் விலை கொண்டதாக அதன் பேஸ் வேரியண்ட் உள்ளது.

  • எடுத்துக்காட்டாக, eC3 உடன் ஒப்பிடுகையில் டாடா நெக்சான் EV பிரைம் அதே போன்ற பயண தூரத்துடன் (312கிமீ) எலக்ட்ரிக் SUV ஆக கூடுதல் திறன் கொண்ட மோட்டார் மற்றும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாகவும் விலை ரூ.14.49 இலட்சத்தில் தொடங்குவதாகவும் உள்ளது. டாப்-வகை eC3 -ஐ விட சிறிதளவே கூடுதலாக அதன் ப்ரீமியம் ரூ.2 இலட்சமாக உள்ளது.

மேலும் படிக்க: புதிய ரெக்கார்டை உருவாக்க உள்ள டாடாநெக்சான் EV

  • ஆட்டோமெட்டிக் AC, பவர்டு -ORVMs மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களுடன் 3.3kW சார்ஜிங் தேர்வுடன் டியாகோ EVயின் எக்ஸ்இசட்+ டெக் லக்ஸ் காரின் விலை eC3 இன் பேஸ்-ஸ்பெக் டிரிம்மின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட ரூ.1000 வித்தியாசம் இருக்கிறது.

  • 24kWh பேட்டரி பேக் மற்றும் 7.2kW சார்ஜிங் தேர்வுடன் கூடிய டாடா டியாகோ XZ+ டிரிம்மின் விலை கூட eC3 -ன் ஃபீல் வேரியண்டை விடவும் ரூ.1.13 இலட்சம் குறைவானதாக உள்ளது. மேலும் கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது.

  • 10.2-அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நான்கு ஸ்பீக்கர் ஒலி அமைப்புடன் கூடியதாக eC3 இன் டாப்-ஸ்பெக் ஃபீல் கார் விளங்குகிறது.

  • அதன் சிறந்த தோற்றப் பொலிவுக்காக மட்டும் வெளிப்புறத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் வழங்கப்பட்டுள்ள வசதி அம்சங்களைப் பொறுத்தவரை டியாகோ EV கொடுக்கும் சொகுசின் அருகில் கூட eC3 ஐ கொண்டு வர இயலவில்லை.

  • பாதுகாப்பைப் பொருத்தவரை, முன்பக்கமாக இரண்டு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் அனைத்தும் மூன்று EV -க்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோருமுக்கானவை

மேலும் படிக்க: eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மூலம் ஃப்ளீட் சந்தையில் சிட்ரோன் நுழைகிறது

பவர்டிரெய்ன் விவரங்கள்

சிறப்பு விவரங்கள்

சிட்ரோன் eC3

டாடா டியாகோ EV

டாடா டைகோர் EV

பேட்டரி பேக்

29.2kWh

19.2kWh/24kWH

26kWh

ஆற்றல்

57PS

61PS/75PS

75PS

முறுக்கு விசை

143Nm

170Nm

Range

பயணதூரம்:

320 கி.மீ (MIDC ரேட்டிங்)

250கிமீ/315கிமீ

315 கிமீ

  • eC3க்கு மிகப்பெரிய பேட்டரி பேக் அம்சம் உள்ளது. மேலும் அதிக பயண தூரத்தை வழங்குகிறது. ஆனால் மற்றவற்றை விட 5 கி.மீ மட்டுமே கூடுதலாக வழங்குகிறது.

  • டியாகோ இரு பேட்டரி பேக் விருப்பத் தேர்வுகளுடன் வருகிறது- ஒன்று நடுத்தர-பயணதூரத்திற்கானது 19.2kWh மற்றும் நீண்ட தூர பயணத்திற்கான 24kWh. இவற்றின் ரேன்ஜ் முறையே 250 கிமீ முதல் 315 கிமீ தூரம் வரை இருக்கலாம். இரு ஃபார்ம்களிலும் அது கூடுதல் திறனை வழங்குகிறது, ஆனால் eC3 உடன் ஒப்பிடுகையில் டார்க் குறைவாக உள்ளது.

டாடா டைகோர் EV

  • டைகோர் EV-இன் 26kWh பேட்டரி பேக் 315 கிமீ பயணதூரத்திற்கு ஏற்றது, மேலும் இந்த அம்சத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிக திறன் கொண்ட EV யாக உள்ளது.


சார்ஜிங் விவரங்கள்

சார்ஜர்

சிட்ரோன் eC3

டாடா டியாகோ EV

டாடா டைகோர் EV

29.2kWh

19.2kWh

24kWh

26kWh

15A பிளக் பாயிண்ட் (10 முதல் 100% வரை)

10 மணி 30 நிமிடங்கள்

6.9 மணிநேரங்கள்

8.7 மணிநேரங்கள்

9.4 மணிநேரங்கள்

3.3kW AC (10 முதல் 100%வரை)

பொருந்தாது

5.1 மணிநேரங்கள்

6.4 மணிநேரங்கள்

பொருந்தாது

7.2kW AC ( 10 முதல் 100% வரை)

பொருந்தாது

2.6 மணிநேரங்கள்

3.6 மணிநேரங்கள்

பொருந்தாது

D

DC ஃபாஸ்ட் சார்ஜர் (10 முதல் 80% வரை)

57 நிமிடங்கள்

57 நிமிடங்கள்

57 நிமிடங்கள்

59 நிமிடங்கள்(25kW)

  • பேட்டரி பெரிய அளவில் இருப்பதால் 15A பிளக் பாயின்ட் பயன்படுத்தி 10 முதல் 100 சதவீதம் சார்ஜ் செய்ய eC3 -க்கு மிக அதிக நேரம் ஆகும் என்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பொருத்தவரை, EVக்களின் சார்ஜிங் நேரங்களில் மிகப்பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

முடிவுரை

விலை அட்டவணையைப் பார்த்து மூன்று EVக்களின் விவரக்குறிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், விலையைப் பொருத்தவரை டியாகோ EV மிக சரியான தேர்வாக வரும், ஏனெனில் அது நல்ல அம்சங்கள் மற்றும் 315 கிமீ பயண தூரத்தையும் வழங்குகிறது, அது eC3 ஐவிட 5கிமீ மட்டுமே குறைவு.

கூடுதல் பூட் ஸ்பேஸ் மற்றும் ஆற்றலுக்காக செடானை விரும்பும் நபர்கள், டைகோர் EVயைத் தேர்ந்தெடுக்கலாம் , இந்தப் பட்டியலில் உள்ள EV க்களில் இதுவே விலை அதிகமானது. இதற்கிடையில், இடவசதியான கேபின், முதல்தரமான இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு மற்றும் ஃப்ரென்ச் ஸ்டைலிங்குடன் கூடுதல் சாலை கவனம் கொண்டதாக eC3 உள்ளது.

மேலும் படிக்கவும்: சிட்ரோயன் eC3 ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Citroen ec3

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை