Citroen eC3 புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டுடன் அதிக அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது
published on ஜனவரி 24, 2024 05:54 pm by shreyash for citroen ec3
- 181 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
-
சிட்ரோன் eC3 இன் டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்டின் விலை ரூ. 13.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.
-
எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்பிள் சரிசெய்யக்கூடிய ORVMகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற வைப்பர் மற்றும் வாஷர் கொண்ட பின்புற டிஃபோகர் ஆகியவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன.
-
இன்னும் அதே 29.2 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, இது 320 கிமீ வரை ARAI கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
-
இப்போது இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது.
சிட்ரோன் eC3, பிப்ரவரி 2023 -ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: லைவ் மற்றும் ஃபீல். இப்போது 2024 -ல், eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்டை பெற்றுள்ளது. இந்த புதிய வேரியன்ட்டின் அறிமுகத்துடன், eC3 இப்போது முன்பை விட கூடுதல் வசதிகளுடன் வருகின்றது.
மேலும் விவரங்களைபார்ப்பதற்கு முன், சிட்ரோன் eC3 -க்கான முழுமையான விலையை பார்ப்போம்:
வேரியன்ட் |
விலை |
லிவ் |
ரூ.11.61 லட்சம் |
ஃபீல் |
ரூ.12.70 லட்சம் |
ஃபீல் வைப் பேக் |
ரூ.12.85 லட்சம் |
ஃபீல் வைப் பேக் டூயல் டோன் |
ரூ.13 லட்சம் |
ஷைன் |
ரூ.13.20 லட்சம் |
ஷைன் வைப் பேக் |
ரூ.13.35 லட்சம் |
ஷைன் வைப் பேக் டூயல் டோன் |
ரூ.13.50 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் இந்தியா) -க்கான விலை ஆகும்
புதிய வசதிகள்
சிட்ரோம் eC3, அதன் டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டில், இப்போது எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM, பின்புற பார்க்கிங் கேமரா, பின்புற வைப்பர்-வாஷர் மற்றும் பின்புற டிஃபாகர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. கூடுதலாக, ஸ்டீயரிங் இப்போது லெதரால் மூடப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் eC3 இன் மிட்-ஸ்பெக் ஃபீல் வேரியன்ட்டை போலவே, ஷைன் வேரியன்ட் 15-இன்ச் அலாய் வீல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் eC3 -யில் உள்ள மற்ற வசதிகளை பொறுத்தவரையில் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேனுவல் ஏசி மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: Tata Punch EV மற்றும் Citroen eC3: விவரங்கள் ஒரு ஒப்பீடு
பேட்டரி பேக்கில் மாற்றங்கள் இல்லை
சிட்ரோன் அதன் புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் பவர்டிரெயினில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. eC3 ஆனது 29.2 kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்துகிறது, இது ARAI கிளைம்டு 320 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. பேட்டரி பேக் 57 PS மற்றும் 143 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் eC3 இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கின்றது: 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங், இது பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 57 நிமிடங்கள் எடுக்கும்; மற்றும் 10.5 மணி நேரத்தில் 10 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் 15A ஹோம் சார்ஜர்.
பெட்ரோலில் இயங்கும் சிட்ரோன் C3 ஏற்கனவே அதே 'ஷைன்' மோனிகருடன் ஒரு வேரியன்ட்டையும் கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.
இதையும் பார்க்கவும்: புதிய ஹூண்டாய் கிரெட்டா vs ஸ்கோடா குஷாக் vs ஃபோக்ஸ்வேகன் டைகுன் vs எம்ஜி ஆஸ்டர்: விலை ஒப்பீடு
போட்டியாளர்கள்
சிட்ரோன் eC3 காரானது டாடா பன்ச் EV மற்றும் டாடா டியாகோ EV ஆகியவற்றுடன் போட்டியிடும். எம்ஜி காமெட் இவி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: சிட்ரோன் eC3 ஆட்டோமெட்டிக்