• English
  • Login / Register

புதிய, ஃபுல்லி லோடட் ஷைன் டிரிம் உடன் BS6 பேஸ் 2 அப்டேட்டைப் பெறும் சிட்ரோன் C3- இன் டர்போ வேரியன்ட்கள்

published on மே 08, 2023 12:02 pm by rohit for சிட்ரோய்ன் சி3

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த அப்டேட்டுடன், C3 இப்போது ரூ.6.16 லட்சத்தில் இருந்து ரூ.8.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Citroen C3

  • C3 இன் அனைத்து வேரியன்ட்களும் இப்போது BS6 இரண்டாம் கட்ட விதிமுறைகளுக்கு இணங்குகின்றன.

  • C3 டர்போவின் விநியோகம் மே மாதத்தின்  நடுவில் இருந்து தொடங்கும்.

  • ESP மற்றும் ஐடில் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் உள்ளிட்ட சில பிரத்யேக அம்சங்களுடன் டர்போ கார் வேரியன்ட்களை சிட்ரோன் வழங்குகிறது.

  • C3 இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் கிடைக்கிறது: 82PS 1.2 -லிட்டர் N.A.  மற்றும் மற்றொன்று 110PS1.2 லிட்டர் டர்போ.

புதிய டாப்-ஸ்பெக் ஷைன் காரை சிட்ரோன் C3 காரின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் கார் களுடன் அறிமுகப்படுத்திய பின்னர், கார் தயாரிப்பாளர் இப்போது ஹேட்ச்பேக்கின் ஷைன் டர்போ ட்ரிம்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்டேட்டுடன், டர்போ வேரியன்ட்கள் இப்போது BS6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு இணக்கமாக உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். C3 டர்போவின் விநியோகம் மே மாதத்தின் நடுவில் இருந்து தொடங்கும் என்று சிட்ரோன் தெரிவித்திருக்கிறது.

C3 ஹேட்ச்பேக் காரின் முழுமையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலை பட்டியலை இங்கே காணலாம்:


வேரியன்ட்


விலை (எக்ஸ்-ஷோரூம்)


லைவ்


ரூ. 6.16 லட்சம்


ஃபீல்


ரூ. 7.08 லட்சம்


ஃபீல் வைப் பேக்


ரூ. 7.23 லட்சம்


ஃபீல் டூயல் டோன்


ரூ. 7.23 லட்சம்


ஃபீல் டுயல் டோன் வைப் பேக்


ரூ. 7.38 லட்சம்


ஷைன்


ரூ. 7.60 லட்சம்


ஷைன் வைப் பேக்


ரூ. 7.72 லட்சம்


ஷைன் டூயல் டோன்


ரூ. 7.75 லட்சம்


ஷைன் டுயல் டோன் வைப் பேக்


ரூ. 7.87 லட்சம்


ஃபீல் டர்போ டூயல் டோன் (புதியது)


ரூ. 8.28 லட்சம்


ஃபீல் டூயல் டோன் வைப் பேக் (புதியது)


ரூ. 8.43 லட்சம்


ஷைன் டர்போ டூயல் டோன் (புதியது)


ரூ. 8.80 லட்சம்


ஷைன் டர்போ டூயல் டோன் வைப் பேக் (புதியது)


ரூ. 8.92 லட்சம்

வேறு ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா?

Citroen C3 idle-engine start/stop

Citroen C3 hill-hold assist

C3 காரின் டர்போ வேரியன்ட்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஐடில் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றை பிரத்யேகமாக சிட்ரோன் இதில்  பொருத்தியிருக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷைன் ட்ரிம் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM கள், ஃபாக் லைட்டுகள், 15 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், 35 கனெக்டட் கார் டெக் ஃபியூச்சர்கள் மற்றும் பகல் / இரவு IRVM ஆகியவற்றை வழங்குகிறது. இதன் பாதுகாப்பு அம்சங்களில்  ரிவர்சிங் கேமரா, ரியர் டிஃபோகர் மற்றும் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்கவும்: இந்த ஆண்டு கோடைகால சேவை முகாமில் சிட்ரோன் வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய அனைத்து பலன்களும் இதோ

C3 இன்ஜின்கள் விவரம்

Citroen C3 1.2-litre naturally aspirated petrol engine

c3 இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் ஆப்ஷனை வழங்குகிறது: 5-ஸ்பீடு மேனுவல் உடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் (82PS/115Nm) மற்றொன்று 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட் (110PS/190Nm). சிட்ரோன் விரைவில் C3 ஐ ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் இடையே நீங்கள் கவனிக்கும் 5 முக்கிய வேறுபாடுகள்

இதன் போட்டியாளர்கள்  யார் என்பதைப் பார்க்கலாம்

Citroen C3 rear

மாருதி வேகன் ஆர் மற்றும் செலிரியோ மற்றும் டாடா டியாகோ போன்ற கார்களுக்கு போட்டியாக சிட்ரோனின் ஹேட்ச்பேக் கார் தயாராகி வருகிறது. இதன் அளவு மற்றும் விலை காரணமாக, மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20 போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் மற்றும் நிஸான் மேக்னைட், மாருதி பிரான்க்ஸ் மற்றும் ரெனால்ட் கிகர் போன்ற சப்-4m எஸ்யூவி -களுடன் போட்டி போடுகிறது.

மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 ஆன்  ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Citroen சி3

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
×
We need your சிட்டி to customize your experience