Tata Curvv -க்கு போட்டியாக இருக்குமா ?... நாளை அறிமுகமாகிறது Citroen Basalt Vision கூபே ஸ்டைல் கார்
published on மார்ச் 26, 2024 07:06 pm by shreyash for சிட்ரோய்ன் பசால்ட்
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் பசால்ட் விஷன் முன்பு C3X என அழைக்கப்பட்ட கூபே-ஸ்டைல் எஸ்யூவி -க்கான முன்னோட்டமாக இருக்கும்.
-
சிட்ரோன் நிறுவனம் தென் அமெரிக்க மற்றும் இந்திய சந்தைகளில் பசால்ட் விஷன் காரை அறிமுகப்படுத்தும்.
-
பசால்ட் விஷன் சிட்ரோன் C3 ஏர்கிராஸின் அதே தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
C3 மற்றும் C3 ஏர்கிராஸ் காரில் ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
-
C3 மற்றும் C3 ஏர்கிராஸில் காணப்படும் அதே 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பசால்ட் பயன்படுத்தும்.
-
இந்தியாவில் இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் இதன் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கும்.
பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான சிட்ரோன் நிறுவனத்தின் சிட்ரோன் பசால்ட் விஷன் புதிய கூபே எஸ்யூவி மார்ச் 27 2024 அன்று உலகளவில் அறிமுகமாக உள்ளது. சிட்ரோன் எஸ்யூவி கூபே கார் சோதனை செய்யப்படும் போது பலமுறை படம் பிடிக்கப்பட்டுள்ளது, இது முன்பு C3X என்று அழைக்கப்பட்டது. இது தென் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் காரில் உள்ள அதே CMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த புதிய சிட்ரோன் காரில் இருந்து நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இங்கே.
ஸ்போர்ட்டியர் கூபே வடிவமைப்பு
வடிவமைப்பின் அடிப்படையில் சிட்ரோன் அதிகமான விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும் டீஸர் அதன் சாய்வான கூரையை போல இருக்கலாம் என தெரிகின்றது. இது கூபே போன்ற தோற்றத்தை அளிக்கிறது. சதுர வடிவ டெயில்லேம்ப்களுக்கு இப்போது அடையாளம் காணக்கூடிய சிட்ரோன் லைட் சிக்னேச்சரையும் நாங்கள் காண்கிறோம். முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பசால்ட் விஷன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களுடன் குறிப்பாக முன்பக்க மற்ற வடிவமைப்பு ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் பார்க்க: இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்கோடா கோடியாக் டாப் வேரியன்ட் விலை குறைக்கப்பட்டுள்ளன
கேபின் மற்றும் வசதிகள்
சிட்ரோன் பசால்ட் விஷன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் போன்ற டேஷ்போர்டு தளவமைப்பு மற்றும் கேபினைக் கொண்டிருக்கும். வசதிகளைப் பொறுத்தவரை இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் அதே 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவிக்குள் காணப்படுவது போல் 7-இன்ச் முழு-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறலாம். தற்போதுள்ள சிட்ரோன் மாடல்களில் ஆட்டோமேட்டிக் ஏசி க்ரூஸ் கன்ட்ரோல் புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகளையும் இது சேர்க்கலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியா-ஸ்பெக் சிட்ரோன் எஸ்யூவி கூபே 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS / 205 Nm வரை) இந்தியா-ஸ்பெக் சிட்ரோன் பசால்ட் விஷனில் பயன்படுத்தப்படலாம். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
சிட்ரோன் பசால்ட் விஷந் மார்ச் 27 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் இதன் விலையை ரூ.8 லட்சம் ஆக நிர்ணயம் செய்யலாம். இந்தியாவில் இது வரவிருக்கும் டாடா கர்வ்வ் -க்கு போட்டியாக இருக்கும். அதே போல் மற்ற காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
0 out of 0 found this helpful