• English
    • Login / Register

    Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே

    சிட்ரோய்ன் பசால்ட் க்காக ஆகஸ்ட் 12, 2024 07:52 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 78 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.

    Citroen Basalt variant-wise powertrain options explained

    • சிட்ரோன் பாசால்ட் சமீபத்தில் ரூ. 7.99 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

    • இது 3 வேரியன்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்.

    • 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் என இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.

    • டர்போ-பெட்ரோலில் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உள்ளது.

    • முழுமையான வேரியன்ட் வாரியான விலை பட்டியல் விரைவில் வெளியாகும்.

    இந்தியாவில் சிட்ரோன் பசால்ட் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை 7.99 லட்சத்திலிருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இந்த எஸ்யூவி-கூபே பற்றிய பெரும்பாலான தகவல்கள் வெளியாகியுள்ளன. வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன, அதை இங்கே பாருங்கள்:

    சிட்ரோன் பசால்ட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    Citroen Basalt 1.2-litre turbo-petrol engine

    சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின்களின் விவரங்கள் பின்வருமாறு:

    இன்ஜின்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    82 PS

    110 PS

    110 PS

    டார்க்

    115 Nm

    190 Nm

    205 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு AT

    மைலேஜ் (கிளைம்டு)

    18 கிமீ/லி

    19.5 கி.மீ

    18.7கிமீ/லி

    வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    Citroen Basalt 6-speed AT

    சிட்ரோன் பாசால்ட் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ். ஒவ்வொரு வேரியன்ட்டுக்கும் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விரிவான பட்டியல் இங்கே:

    இன்ஜின்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு ஏடி

    யூ

    ✔️

    பிளஸ்

    ✔️

    ✔️

    ✔️

    மேக்ஸ்

    ✔️

    ✔️

    • பேஸ்-ஸ்பெக் யூ வேரியன்ட்ட் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜினுடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

    • மிட்-ஸ்பெக் பிளஸ் என்பது மூன்று ஆப்ஷன்களையும் அவற்றின் அந்தந்த டிரான்ஸ்மிஷனுடன் சேர்த்து பெறும் ஒரே வேரியன்ட் ஆகும்.

    • டாப்-ஸ்பெக் மேக்ஸ் வேரியன்ட்ட் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே வருகிறது.

    மேலும் பார்க்க: சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி கூபே -வை ஓட்டிய பிறகு நாங்கள் கற்றுக்கொண்ட 5 விஷயங்கள்

    சிட்ரோன் பாசால்ட் விலை மற்றும் போட்டியாளர்கள்

    Citroen Basalt side profile

    சிட்ரோன் பசால்ட் காரின் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது. சரியான வேரியன்ட் வாரியான விலை பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும் சிட்ரோனின் அதிகாரப்பூர்வ கான்ஃபிகிரேட்டரின்படி எஸ்யூவி-கூபேயின் டாப்-எண்ட் ஸ்பெக் 13.49 லட்சம் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் (விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா அறிமுக விலை). இது டாடா கர்வ்  உடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்றவற்றுக்கு ஒரு ஸ்டைலான எஸ்யூவி-கூபே மாற்றாக இருக்கும்.

    கார்கள் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Citroen பசால்ட்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience