Citroen Basalt டிரைவிங் ரிப்போர்ட்: நிறைகள் மற்றும் குறைகள்
published on ஆகஸ்ட் 26, 2024 03:57 pm by ansh for சிட்ரோய்ன் பசால்ட்
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெரிய இட வசதியை கொண்ட பூட் மற்றும் வசதியான ஓய்வு இருக்கைகள் பசால்ட்டை சிறந்த தேர்வாக மாற்ற முயற்சித்துள்ளன. ஆனால் வசதிகள் மற்றும் பவர் பற்றாக்குறை அதைத் தடுக்கிறது.
ரூ. 7.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் சிட்ரோன் பசால்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மற்றும் நாங்கள் ஏற்கனவே எஸ்யூவி-கூபே -வை டிரைவ் செய்து பார்த்துள்ளோம் வைத்துள்ளோம். இது ஒரு தனித்துவமான ஸ்டைலிங், கேபினில் நல்ல இடம் மற்றும் ஒரு குடும்பத்திற்கான நடைமுறைக்கு ஏற்ற கார் ஆகும். ஆனால் உங்கள் வாங்கும் முடிவை பாதிக்கக்கூடிய சில குறைகளும் உள்ளன. நாங்கள் டிரைவிங் செய்து பார்த்த பிறகு நாங்கள் விரும்பும் விஷயங்கள் மற்றும் விரும்பாத விஷயங்கள் அனைத்தையும் இங்கே பாருங்கள்.
நிறைகள்
தனித்துவமான ஸ்டைலிங்
பசால்ட் ஒரு எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும். மேலும் அந்த குறிப்பிட்ட வடிவமைப்பானது இந்த காரை மற்ற எஸ்யூவி மாடல்களில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. சாய்வான கூரையானது ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது சாலையில் அனைவராலும் கவனிக்கப்படும்.
பெரிய பூட் அளவு
இது 470-லிட்டர் பூட் இடத்தை கொண்டுள்ளது. இதை நீங்கள் நிறைய சாமான்களை பொருத்த பயன்படுத்தலாம். பாசால்ட்டின் பூட் பெரிதாக உள்ளது. இது இன்னும் பெரிய சூட்கேஸ்களை எளிதாக எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. மேலும் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்லும் வகையில் இடத்திற்காக பின்புற சீட்களை மடிக்கலாம். இருப்பினும் 60:40 ஆக ஸ்பிளிட் செய்ய முடியாது. மேலும், உயரமான பூட் நிலை மற்றும் பூட் திறப்பின் வடிவம் சாமான்களை உள்ளே வைப்பதை எளிதாக்குகிறது.
இந்த பிரிவில் சிறப்பான பின் இருக்கைகள்
பட்ஜெட்டில் ஓட்டுநர் இயக்கப்படும் அனுபவத்தை நீங்கள் விரும்பினால் பசால்ட் உங்களுக்கான சிறந்த கார்களில் ஒன்றாகும். இது ஒரு சாய்வான கூரையைக் கொண்டிருந்தாலும் கூட 6-அடி உயரமுள்ளவர்களுக்கும் கூட போதுமான அளவு ஹெட்ரூம் இந்த காரில் உள்ளது. மேலும் முழங்கால் இடவசதி மற்றும் லெக் ரூம் ஆகியவற்றில் நீங்கள் சமரசம் செய்யத் தேவையில்லை. பின்புற இருக்கைகளின் சிறந்த பகுதி என்பது வெளிப்புற பயணிகளுக்கு அனுசரிப்பு செய்யக்கூடிய தொடையின் ஆதரவாகும். இது அவர்களின் மிகவும் வசதியான இருக்கை நிலையைக் கண்டறிய உதவுகிறது.
மேலும் படிக்க: Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?
குறைகள்
அதிகமான வசதிகள் கொண்டதாக இல்லை
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் வரும் பசால்ட் கார் அதன் போட்டி கார்களில் கிடைக்கும் சில பிரீமியம் வசதிகளை கொண்டிருக்கவில்லை.
லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், பவர்டு டிரைவர் சீட் மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகள் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் வாங்குபவர்களை மிகவும் கவர்ந்திருக்கும்.
அவ்வளவு பிரீமியமாக இல்லை
பாசால்ட் ஒரு தனித்துவமான வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் உட்புறம் மிகவும் அடிப்படை விஷயங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே இது பிரீமியம் ஆக இல்லை. கேபினில் பிரீமியம் பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக சாஃப்ட் டச் பேடிங், இது கேபினை கொஞ்சம் மந்தமாகவும் அடிப்படையாகவும் உணர வைக்கிறது. அதிக சாஃப்ட் டச் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் கேபினை மேலும் பிரீமியம் ஆக மாற்றியிருக்கும்.
அவ்வளவு ஸ்போர்ட்டியாக இல்லை
சிட்ரோன் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் பாசால்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இவை வழக்கமான வாகனம் ஓட்டுவதை விட நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் இந்த எஸ்யூவி-கூபே ஃபார்ம் ஃபேக்டருடன் நீங்கள் மிகவும் உற்சாகமான ஓட்ட அனுபவத்தைத் தேடுகிறீர்கள் என்றால், துரதிருஷ்டவசமாக நீங்கள் அதை பசால்ட் மூலம் பெற முடியாது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சற்று லேக் ஆக உணர்வை கொடுக்கிறது. இது முந்திச் செல்வதை முன்கூட்டியே திட்டமிடுகிறது. மேலும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் அதன் போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய அற்புதமான டிரைவ் அனுபவத்தை நீங்கள் இதில் பெற மாட்டீர்கள்.
விலை & போட்டியாளர்கள்
சிட்ரோன் பாசால்ட்டின் விலை ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 13.83 லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்னயம் செய்யப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் டாடா கர்வ் -க்கு போட்டியாக இருக்கும். மஹிந்திரா XUV 3XO மற்றும் டாடா நெக்ஸான், கியா சோனெட் போன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு பாசால்ட் ஒரு பெரிய மாற்றாகவும் இருக்கும். மேலும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுடன் போட்டியிடும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: பசால்ட் ஆன்ரோடு விலை