• English
  • Login / Register

15 படங்களில் புதிய Kia Sonet GTX+ வேரியன்ட்டின் விரிவான விவரங்கள் இங்கே

published on டிசம்பர் 18, 2023 04:47 pm by rohit for க்யா சோனெட்

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கியா சோனெட் -ன் GTX+ வேரியன்ட், பழைய மாடலில் சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் உபகரணங்களில் மாற்றங்களை பெற்றுள்ளது, மேலும் இது கூடுதலான வசதிகள் கொண்டதாகவும் இருக்கின்றது.

2024 Kia Sonet

கியா சோனெட் சப்-4m SUV இப்போது ஃபேஸ்லிப்டட் ஆக வெளியிடப்பட்டது. இது மொத்தம் ஏழு வேரியன்ட்களில் வழங்கப்படும்: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line. இந்த கதையில், Kia Sonet ஃபேஸ்லிஃப்ட்டின் GTX+ வேரியன்ட் (GT லைன் டிரிம் கீழ்) என்ன வசதிகளுடன் வருகின்றது என்பதை பார்ப்போம்:

வெளிப்புறம்

முன்பக்கம்

2024 Kia Sonet front
2024 Kia Sonet grille

முன்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது சோனெட் GTX+ மற்ற டிரிம்களை விட (HT லைன் மற்றும் X-லைன்) வித்தியாசமான பாணியிலான கிரில்லை கொண்டிருப்பது தெரிகின்றது. சில்வர் இன்செர்ட்டுகள் மற்றும் முன்பக்க கேமராவுடன் தேன்கூடு போன்ற வடிவம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான LED ஃபாக் லேம்ப்கள் கொண்ட டெக் லைன் வேரியன்ட்களை விட இதன் பம்பர் ஸ்போர்ட்டியாக தெரிகின்றது. மல்டி-ரிஃப்ளெக்டர் 3-பீஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் நீண்ட ஃபாங் வடிவ LED DRL -கள் ஆகியவை மூன்று டிரிம் லைன்களுக்கும் பொதுவானவையாக இருக்கும்.

2024 Kia Sonet grille

சோனெட் -ன் GTX+ வேரியன்ட் இப்போது 10 வகையான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை (ADAS) கொண்டுள்ளது. இதன் ADAS அமைப்பானது முன்பக்க கண்ணாடியின் உட்புறம் பொருத்தப்பட்ட கேமராவின் அடிப்படையில் செயல்படுகிறது.

பக்கவாட்டில் உள்ள மாற்றங்கள்

2024 Kia Sonet side
2024 Kia Sonet ORVM-mounted camera

சோனெட் GTX+ -ன் பக்கவாட்டில் உள்ள ஒரே பெரிய மாற்றம், புதிதாக வடிவமைக்கப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 360-டிகிரி அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ORVM-மவுண்டட் கேமரா ஆகும்.

பின்புறம்

2024 Kia Sonet rear

பின்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியின் GTX+ வேரியன்ட் வாஷர் மற்றும் டிஃபோகர் கொண்ட வைப்பரை கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்டுடன், புதிய கியா செல்டோஸ் போலவே இப்போது கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப்பையும் பெறுகிறது.

உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்

டாஷ்போர்டு

2024 Kia Sonet cabin

GT லைன் பதிப்பிற்கான ஆல் பிளாக் கேபின் தீமை கியா தக்க கொடுத்துள்ளது. அதைத் தவிர்த்து பார்த்தால் ஒட்டுமொத்த டேஷ்போர்டு வடிவம் மற்றும் வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் இல்லை.

2024 Kia Sonet steering-mounted ADAS and cruise controls

அதன் ஸ்டீயரிங் வீலின் கீழ் பகுதியில் ‘ஜிடி’ என்ற எழுத்து வடிவம் (மோனிகர்) உள்ளது, அதே சமயம் ADAS -க்கான ஹாட்கீ இப்போது ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது, க்ரூஸ் கன்ட்ரோலுக்கான பட்டனும் அதிலேயே இருக்கின்றது.

2024 Kia Sonet climate control panel
2024 Kia Sonet ventilated seats controls

முன்பு போலவே வென்டிலேட்டட் முன் இருக்கைகளை  அப்படியே இருக்கின்றன. புதிய வடிவத்தில் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன் இருக்கைகள்

2024 Kia Sonet front seats
2024 Kia Sonet 4-way powered driver seat

2024 சோனெட்டின் GTX+ வேரியன்ட் பிளாக் மற்றும் வொயிட் நிற இருக்கை அமைப்புடன் மாறுபட்ட வெள்ளை தையல்களுடன் இருக்கின்றது. உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை இப்போது 4-வே பவர்-அட்ஜெஸ்ட்மென்ட்டை கொண்டுள்ளது, இந்த வசதி இதன் உடன்பிறப்பான  ஹூண்டாய் வென்யூ -வில் 2022 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2024 Kia Sonet sunroof
2024 Kia Sonet 10.25-inch digital driver display

கியாவின் சப்-4எம் எஸ்யூ -வியின் இந்த வேரியன்ட் செல்டோஸில் காணப்படுவது போல் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகின்றது.

பின் இருக்கைகள்

2024 Kia Sonet rear seats

பின்புறத்தில், சோனெட் GTX+ ஆனது இரண்டு அடஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்களுடன் வருகிறது, ஆனால் நடுவில் இருக்கும் பயணிகளுக்கு இந்த வசதி இல்லை, ஆனால் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட்  சீட்பெல்ட்கள் கிடைக்கும். கப்ஹோல்டர்கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டையும் கியா வழங்கியுள்ளது.

மேலும் படிக்க: 2023 இல் இந்தியாவில் கியாவில் அறிமுகமான அனைத்து புதிய அம்சங்கள்

விலை மற்றும் போட்டியாளர்கள்

Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 2024 -ல் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். ஹூண்டாய் வென்யூ -வை தவிர டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும். மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் -க்கு மாற்றாக இருக்கும்.

தொடர்புடையது: 2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரம் இங்கே

மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Kia சோனெட்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience