இந்தியாவில் விற்பனைக்கு வந்தது BYD Seal EV: காரின் விலை ரூ.41 லட்சத்தில் இருந்து தொடக்கம்
published on மார்ச் 05, 2024 04:01 pm by rohit for பிஒய்டி சீல்
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
சீல் எலக்ட்ரிக் செடான் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: டைனமிக் ரேஞ்ச், பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
-
இந்தியாவில் BYD -யின் மூன்றாவது EV இது மற்றும் சீல் பிராண்டின் முதல் செடான் கார் இதுவாகும்.
-
சீலின் விலை ரூ 41 லட்சம் முதல் ரூ 53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.
-
இரண்டு பேட்டரி பேக்குகள், இரண்டு டிரைவ் ட்ரெய்ன்கள் மற்றும் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப்களுடன் வருகிறது.
-
ரொட்டேட்டிங் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை உள்ளன.
இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிரிவு BYD சீல் எலக்ட்ரிக் செடானின் அறிமுகத்தின் மூலம் இன்னும் போட்டி நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இந்த EV -க்கான முன்பதிவு பிப்ரவரி 27 முதல் ஆன்லைனில் மற்றும் BYD -யின் டீலர்ஷிப்களில் ரூ. 1 லட்சத்துக்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும்: டைனமிக் ரேஞ்ச், பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ்.
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) |
டைனமிக் ரேஞ்ச் |
ரூ.41 லட்சம் |
பிரீமியம் ரேஞ்ச் |
ரூ.45.55 லட்சம் |
பெர்ஃபாமன்ஸ் |
ரூ.53 லட்சம் |
எலக்ட்ரிக் பவர் ட்ரெய்ன்களின் விவரங்கள்
BYD ஆனது மூன்று எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் சேர்க்கைகளின் தேர்வுடன் சீல் EV -யை வழங்குகிறது:
விவரங்கள் |
டைனமிக் ரேஞ்ச் |
பிரீமியம் ரேஞ்ச் |
பெர்ஃபாமன்ஸ் |
பேட்டரி பேக் |
61.4 kWh |
82.5 kWh |
82.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 (பின்புறம்) |
1 (பின்புறம்) |
2 (முன் மற்றும் பின்) |
சக்தி |
204 PS |
313 PS |
530 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
510 கி.மீ |
650 கி.மீ |
580 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
RWD |
AWD |
சீல் இரண்டு பேட்டரி பேக்குகள் மற்றும் மொத்தம் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றது. ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டும் இந்த காரில் உள்ளன.
இதன் சிறிய பேட்டரி பேக் 110 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது. அதே நேரத்தில் பெரிய பேட்டரி பேக் 150 kW வரை சப்போர்ட் செய்கிறது..
இதில் உள்ள தொழில்நுட்ப வசதிகள்?
ரொட்டேட்டிங் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை எலக்ட்ரிக் செடானில் உள்ள வசதிகளாகும்.
பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழு தொகுப்பும் இதில் உள்ளது.
மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்தால் கிடைக்கும் பலன்கள்
மார்ச் 31, 2024 -க்குள் சீல் EV-யை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் பலன்கள் கிடைக்கும் என்று BYD அறிவித்துள்ளது: வீட்டில் நிறுவப்படும் 7 kW சார்ஜர், 3 kW போர்ட்டபிள் சார்ஜிங் பாக்ஸ், வெஹிகிள் டூ லோட் பவர் சப்ளை யூனிட், 6 வருட ரோட் சைடு அசிஸ்ட் மற்றும் ஒரு இலவச இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் ஆகியவை கிடைக்கும். BYD ரூ.1.25 லட்சத்துக்கு முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கிறார். கூடிய விரைவில் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BYD சீல் காருக்கான உத்தரவாத விவரங்கள்
சீல் EV காரின் பேட்டரி பேக்கிற்கு 8-ஆண்டு/1.6 லட்சம் கிமீ வாரண்டியும், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் மோட்டார் கன்ட்ரோலருக்கு 8-ஆண்டு/1.5 லட்சம் கிமீ வாரண்டியும், பல்வேறு வேரியன்ட்களின் மற்ற பேட்டரி தொடர்பான தொகுதிகளுக்கு 6-ஆண்டு/1.5 லட்சம் கிமீ வாரண்டியும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ள 2024 ஆம் ஆண்டின் டாப் 3 வேர்ல்டு கார்கள்
போட்டியாளர்கள்
BYD சீல் கியா EV6, ஹூண்டாய் அயோனிக் 5, மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகிய கார்களுடன் போட்டியிடும். இது BMW i4 காருக்கு ஒரு விலை குறைவான மாற்றாகவும் இருக்கும்.
0 out of 0 found this helpful