• English
  • Login / Register

Hyundai Exter : 75 சதவீதம் பேர் சன்ரூஃப் வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர்

published on ஆகஸ்ட் 10, 2023 05:11 pm by tarun for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சன்ரூஃப் எக்ஸ்டரின் மிட்-ஸ்பெக் எஸ்எக்ஸ் வேரியன்ட்டிலிருந்து கிடைக்கிறது, இது இந்த அம்சத்துடன் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

Hyundai Exter

 மே முதல் வாரத்தில் முன்பதிவு தொடங்கியதில் இருந்து எக்ஸ்டர் 50,000- க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

● 75 சதவீத முன்பதிவுகள் சன்ரூஃப் வேரியன்ட்களுக்கு, முதல் மூன்று டிரிம்களில் கிடைக்கும், இதன் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

● மூன்றில் ஒரு பங்கு வாடிக்கையாளர்கள் AMT வேரியன்ட்களை தேர்ந்தெடுத்துள்ளனர், இது ரூ.7.97 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

● 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டூயல் டேஷ் கேம்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

● விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும்.

சந்தையில் சமீபத்திய மைக்ரோ எஸ்யூவி, ஹூண்டாய் எக்ஸ்டர், இப்போது 50,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இதன் முன்பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கியது மற்றும் ஜூலை 10 அன்று விற்பனைக்கு வந்தது. பேபி ஹூண்டாய் எஸ்யூவி ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

சன்ரூஃப் வேரியன்ட்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்

75 Percent Of Hyundai Exter Buyers Chose The Sunroof Variants

ஹூண்டாய் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சன்ரூஃப் தேர்வு செய்ததாக கூறுகிறது, இது அம்சம் எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் முதல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 8 லட்சம். இது சன்ரூஃப் கொண்ட விலை குறைவான கார்களில் ஒன்றாகும். குறிப்புக்கு, எக்ஸ்டெர் பின்வரும் வேரியன்ட்களில் கிடைக்கிறது: EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட்.

இந்த அம்சம் எக்ஸ்டர் -ன் CNG வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது, இது ரூ. 8.97 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இது சிஎன்ஜி வாடிக்கையாளர்கள் கூடுதலான வசதிகளை அனுபவிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்: டாடா பன்ச் CNG Vs Hyundai எக்ஸ்டர் CNG - விவரக்குறிப்பு மற்றும் விலை ஒப்பீடு

ஏஎம்டியை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள்

Hyundai Exter AMT

முன்பதிவுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை AMT வேரியன்ட்களுக்கானவை. ஹூண்டாய் ஹேட்ச்பேக்கின் செகண்ட் ஃப்ரம்-பேஸ் எஸ் வேரியன்ட்டிலிருந்து ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குகிறது. எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ.7.97 லட்சம், நீங்கள் உண்மையில் சுமார் ரூ.10 லட்சம் (ஆன்-ரோடு) விலையில் AMT பொருத்தப்பட்ட வேரியண்ட்டை பெறலாம்.

எக்ஸ்டெர் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது 83PS மற்றும் 114Nm ஐ உருவாக்குகிறது, அதே நேரத்தில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, பிந்தையது பேடில் ஷிஃப்டர்களுடன் எளிதாக மாற்றுவதற்காக வருகிறது. மேனுவல் வேரியன்ட்கள் லிட்டருக்கு 19.2 கிமீ மைலேஜை கொடுப்பதாக கூறுகின்றன, அதே சமயம் AMT ஆனது 19.4 கிமீ லிட்டருக்கு வழங்குகிறது.

இதன் சிஎன்ஜி -யானது 69PS மற்றும் 95.2Nm மைலேஜுடன் 27.1km/kg என்ற மைலேஜுடன் உருவாக்குகிறது.

கூடுதலான வசதிகள்

Hyundai Exter Infotainment System

ஹூண்டாய் எக்ஸ்டர் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட டிரைவர்ஸ் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆறு ஏர்பேக்குகள், ESC, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டூயல் கேமரா டேஷ் கேம் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: ஹூண்டாய் எக்ஸ்டெர் டாடா பன்ச் மீது இந்த 7 அம்சங்களைப் பெறுகிறது

 எக்ஸ்டர் காரானது டாடா பன்ச், மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட் ரெனால்ட் கைகர், சிட்ரோன் C3 மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுடன் போராடுகிறது.

(அனைத்தும் டெல்லியின் எக்ஸ்ஷோரூம் விலை)

மேலும் படிக்க: எக்ஸ்டர் AMT

 

was this article helpful ?

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience