சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஆஸ்திரேலியாவில் 5-டோர் Maruti Jimny -யின் ஹெரிடேஜ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

published on மே 17, 2024 07:34 pm by sonny for மாருதி ஜிம்னி

கடந்த ஆண்டு அறிமுகமான 3-டோர் ஹெரிடேஜ் பதிப்பின் அதே ரெட்ரோ டீக்கால்கள் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸூகி ஜிம்னி காருக்கு ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச சந்தைகளில் ஒப்பனை ரீதியாக மேம்படுத்தப்பட்ட லிமிடெட் எடிஷன் வேரியன்ட்களுக்கு விற்பனைக்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. இந்தியாவில் அறிமுகமான 5-டோர் ஜிம்னி அங்கு ஜிம்னி XL என்ற பெயரில் விற்கப்படுகிறது. மேலும் அது இப்போது ஹெரிடேஜ் பதிப்பைப் பெறுகிறது. அதுவும் வெறும் 500 யூனிட்டுள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.

தனித்துவமான வடிவமைப்பு விவரங்கள்

ஜிம்னி ஹெரிடேஜ் எடிஷன் முதன்முதலில் 3-டோர் பதிப்பிற்காக மார்ச் 2023 -ல் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. அதன் 5-டோர் எடிஷன் அதே ரெட் மற்றும் ஆரஞ்ச் கலரில் ரெட் சேண்ட் மட் ஃபிளாப்களுடன் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. காண்டாமிருக வடிவம் கொண்ட ஜிம்னி ஹெரிடேஜ் லோகோ டீக்கால் உள்ளது. சுஸூகி ஆஸ்திரேலியா நிறுவனம் இதை 5 எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் வழங்குகிறது - வொயிட், க்ரீன் , பிளாக், கிரே மற்றும் ஐவரி.

நமக்கு தெரிந்தவரையில் உட்புறத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இது ஹெரிடேஜ் எடிஷன் என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன ?

ஜிம்னி பெயர்ப்பலகை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கலாம், ஆனால் ஜப்பானிய இலகுரக ஆஃப்-ரோடர் பல தசாப்தங்களாக உலகளவில் அந்த பெயரில் அறியப்படுகிறது. இங்கே அறிமுகமான அதன் 5-டோர் எடிஷன் ஆஸ்திரேலியா உட்பட ரைட் ஹேண்ட் டிரைவிங் சந்தைகளுக்கு ஜிம்னி XL என்ற பெயரில் சென்றது. கடந்த காலங்களில் இந்த வகையான 3-டோர் ஆஃப்-ரோடர்கள் பிரகாசமான டீக்கால்களுடன் வந்தன. மேலும் இந்த புதிய ஹெரிடேஜ் எடிஷன் அந்த ஸ்டைலிங் டீடெயில்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்ளது.

ஜிம்னி -யில் உள்ள வசதிகள்

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டுடன் ஜிம்னி ஃபுல்லி லோடட் ஆக வருகின்றது. ஆட்டோ ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், சுற்றிலும் பவர் விண்டோஸ் மற்றும் LED ஹெட்லைட்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.

6 ஏர்பேக்குகள், ரியர்-வியூ பார்க்கிங் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றது. ஆஸி-ஸ்பெக் காரில் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களையும் இது பெறுகிறது.

இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டிலும் ஜிம்னி 1.5-லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுனுடன் (105 PS/ 134 Nm) 5-ஸ்பீடு மேனுவலுடன் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4x4 செட்டப்பை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மாருதி சுஸூகி ஜிம்னி கார் ஆனது மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் உடன் போட்டியிடுகின்றது, அதே சமயம் சப்-4எம் எஸ்யூவி -களுக்கு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மாற்றாக இருக்கிறது. இதன் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

மேலும் படிக்க: ஜிம்னி ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

sonny

  • 74 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Maruti ஜிம்னி

Read Full News

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை