• English
    • Login / Register

    ஆஸ்திரேலியாவில் 3-டோர் ஜிம்னிக்கான புதிய ஹெரிடேஜ் எடிஷனை அறிமுகப்படுத்துகிறது சுஸூகி

    மாருதி ஜிம்னி க்காக மார்ச் 09, 2023 08:07 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 57 Views
    • ஒரு கருத்தை எழுதுக

      

    சிவப்பு மட் ஃபிளாப்ஸ் மற்றும் ஸ்பெஷல் டீகால்கள் உட்பட சில மாற்றங்களுடன் லிமிடெட் எடிஷன் SUV யானது, நிலையான ஜிம்னியை விட சில காஸ்மெடிக் வேறுபாடுகளைப் பெற்றிருக்கிறது.

    Suzuki Jimny Heritage edition

    • சுஸூகி  ஜிம்னி ஹெரிடேஜ் எடிஷன் வெறும் 300 யூனிட்களுக்கு மட்டுமே வரவிருக்கிறது.

    • இது 1970 களில் இருந்து 1990 கள் வரையிலான  SUV-யின் 4x4 ஹெரிடேஜை கொண்டாடுகிறது.

    • நான்கு வண்ணங்களில் வழங்கப்படுகிறது: வொயிட், ப்ளூயிஷ் பிளாஃப் பேர்ல், ஜங்கிள் கிரீன் மற்றும் மீடியம் கிரே.

    • அதன் அம்சங்களில் ஏழு இன்ச் டச்ஸ்க்ரீன் மற்றும் ஃப்ரன்ட் பவர் விண்டோக்கள் உள்ளன; க்ரூஸ் கண்ட்ரோல் மிஸ் ஆகிறது.

    • ஸ்டாண்டார்டு மாடலின் ஐந்து வேக MT உடன் மட்டுமே, அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (102PS/130Nm) மூலம் இயக்கப்படுகிறது.

    • மாருதி அதன் ஃபைவ்-டோர் ஜிம்னியை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும்; இது சிறப்பு எடிஷன்களையும் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    சுஸூகி ஆஸ்திரேலியாவில் த்ரீ-டோர் ஜிம்னி யின் புதிய லிமிடெட் எடிஷனான “ஹெரிடேஜ்” எடிஷனை அறிமுகப்படுத்துகிறது. வெறும் 300 யூனிட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஆஃப்-ரோடரின் புதிய ஸ்பெஷல் எடிஷன், 1970களில் இருந்து 1990கள் வரை அதன் 4x4 ஹெரிடேஜை கொண்டாடுகிறது என்று கார் தயாரிப்பாளர் கூறுகிறார்.

    “ஹெரிடேஜ்” எடிஷனின் தனித்துவமான விவரங்கள்

    Suzuki Jimny Heritage edition side

    ஹெரிடேஜ் எடிஷன் ஆனது ஸ்டாண்டர்ட் த்ரீ-டோர் மாடலை விட சில காஸ்மெடிக் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இதில் ரெட் மட் ஃப்ளாப்கள் (பின்புறம் “சுஸூகி” என எம்போஸ் செய்யப்பட்டிருக்கும்), ஸ்பெஷல் ஜிம்னி ஹெரிடேஜ் பூட் மேட், ரியர் வீல் ஆர்க்கின் மேல் “ஹெரிடேஜ்” டீகால்கள் மற்றும் “ஹெரிடேஜ்” பேக் ஆகியவை இருக்கும்.

    Suzuki Jimny Heritage edition Bluish Black Pearl
    Suzuki Jimny Heritage edition Jungle Green

    ஜிம்னி ஹெரிடேஜ் எடிஷனின் இண்டீரியரில் எந்த டீடெயிலும் இல்லை என்றாலும், சுஸூகி அதை மேம்படுத்த முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. லிமிடெட் எடிஷன் SUV ஆனது ஸ்டாண்டார்டு மாடலில் உள்ள அதே ஃபேப்ரிக் இருக்கைகளைப் பெறுகிறது.

    தொடர்புடையவை: இந்த 3-கதவு ஜிம்னி டிஷ்யூ பாக்ஸ் உங்கள் மாருதி ஜிம்னிக்கு சிறந்த ஆக்சஸரியாகும்

    இது என்ன அம்சங்களைப் பெறுகிறது?

    ரெட்ரோ-இன்ஸ்பயர்டு, லிமிடெட் எடிஷன் ஜிம்னியில் மாடர்ன் கம்ஃபர்ட்களை அப்படியே வைத்திருக்கிறது. ஏழு இன்ச் டச்ஸ்க்ரீன் அமைப்பு, டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், முன்பக்க பவர் விண்டோக்கள் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வழக்கமான ஜிம்னியின் அதே உபகரணங்களை இது பெரும்பாலும் பெறுகிறது. இருந்தாலும், இதில் க்ரூஸ் கண்ட்ரோல் இல்லை.

    Suzuki Jimny Heritage edition rear

    இதன் சேஃப்டி கிட்டில் ஒரு ரிவர்சிங் கேமரா, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி புரோகிராம் (ESP) மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளது. இதில் ஹை-பீம் அசிஸ்ட், ஆட்டோ-எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன் டிபார்சர் வார்னிங் உட்பட டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம்களும் சில உள்ளன.

    மேலும் படிக்க: உங்கள் மாருதி ஜிம்னியை மினி ஜி-வேகனாக மாற்றுவதற்கான சிறந்த 5 கிட்டுகள் இவை

    ஹூட்டின் கீழ் மாற்றங்கள் இல்லை

    ஜிம்னி ஹெரிடேஜ் எடிஷன் வழக்கமான மாடலின் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (102PS/130Nm) மற்றும் 4WD உடன் தொடர்கிறது, ஆனால் இது ஐந்து-வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது, அதேசமயம் ஸ்டாண்டர்டு ஜிம்னிக்கு ஆப்ஷனல் நான்கு-வேக ஆட்டோமெட்டிக்கையும் சுஸூகி வழங்குகிறது. 

    இந்தியாவில் ஜிம்னி

    India-spec Maruti Jimny

    2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட ஃபைவ்-டோர் ஜிம்னியை மாருதி சுஸூகி விரைவில் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது பிரபலமான ஆஃப்-ரோடரின் மேலதிக பிராக்டிகல் எடிஷனாகும், நீண்ட வீல்பேஸ் பின்புறத்தில் அதிக லெக்ரூமை தருவது சிறப்பாகும். இது 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வழங்கப்படும் (105PS/134Nm), ஐந்து-வேக மேனுவல் அல்லது நான்கு-வேக ஆட்டோமெட்டிக் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஸ்பெக் ஜிம்னியும் ஸ்டாண்டார்டாக 4WD பெறுகிறது. SUVயின் சில சந்தை சார்ந்த லிமிடெட் எடிஷன்களையும் மாருதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

      

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஜிம்னி

    explore மேலும் on மாருதி ஜிம்னி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience