Mahindra Thar Roxx: வேரியன்ட் வாரியான விலை விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
modified on ஆகஸ்ட் 16, 2024 06:13 pm by ansh for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 75 Views
- ஒரு கருத்தை எழுதுக
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் மஹிந்திரா தார் ராக்ஸ் கிடைக்கும் .
-
தார் ராக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது( எக்ஸ்-ஷோரூம், அறிமுகம்).
-
இது ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப்களுடன் கிடைக்கும்.
-
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஒரு பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகிய வசதிகள் கிடைக்கும்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 5-டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், அறிமுகம் ). மஹிந்திரா தார் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் மற்றும் ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) செட்டப் ஆகிய தேர்வுகளை கொடுத்துள்ளது.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ராக்ஸ் பேஸ் MX1 வேரியன்ட் பேக்கில் கிடைக்கும் அனைத்து வசதிகளின் விவரங்கள் இங்கே
தார் ராக்ஸ் ராக்ஸ் காரின் டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும். மற்றும் முன்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும். தசரா அன்று (அக்டோபர் 12ம் தேதி) டெலிவரிகளை மஹிந்திரா தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய தார் காரின் வேரியன்ட் வாரியான விலை மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே.
விலை
எக்ஸ்-ஷோரூம் விலை, அறிமுகம் |
||
பெட்ரோல் |
||
வேரியன்ட் |
மேனுவல் |
ஆட்டோமெட்டிக் |
MX1 RWD |
ரூ.12.99 லட்சம் |
கிடைக்காது |
MX3 RWD |
கிடைக்காது |
ரூ.14.99 லட்சம் |
MX5 RWD |
ரூ.16.49 லட்சம் |
ரூ.17.99 லட்சம் |
AX7L RWD |
கிடைக்காது |
ரூ.19.99 லட்சம் |
டீசல் |
||
வேரியன்ட் |
மேனுவல் |
ஆட்டோமெட்டிக் |
MX1 RWD |
ரூ.13.99 லட்சம் |
கிடைக்காது |
MX3 RWD |
ரூ.15.99 லட்சம் |
ரூ.17.49 லட்சம் |
AX3L RWD |
ரூ.16.99 லட்சம் |
கிடைக்காது |
MX5 RWD |
ரூ.16.99 லட்சம் |
ரூ.18.49 லட்சம் |
AX5L RWD |
கிடைக்காது |
ரூ.18.99 லட்சம் |
AX7L RWD |
ரூ.18.99 லட்சம் |
ரூ.20.49 லட்சம் |
3-டோர் தார் உடன் ஒப்பிடும்போது, தார் ராக்ஸ்ஸின் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ. 1.64 லட்சம் அதிகம்.
குறிப்பு: டீசல்-பவர்டு MX5, AX5L மற்றும் AX7L வேரியன்ட்கள் மட்டுமே 4-வீல்-டிரைவ் (4WD) செட்டப்பில் கிடைக்கும். இந்த வேரியன்ட்களின் விலை விவரங்களை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை.
வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள்: உள்ளேயும் வெளியேயும்
அளவுகள் |
மஹிந்திரா தார் ராக்ஸ் |
மஹிந்திரா தார் |
வித்தியாசம் |
நீளம் |
4428 மி.மீ |
3985 மி.மீ |
+ 443 மிமீ |
அகலம் |
1870 மி.மீ |
1820 மி.மீ |
+ 50 மி.மீ |
உயரம் |
1923 மி.மீ |
1855 மிமீ வரை |
+ 68 மி.மீ |
வீல்பேஸ் |
2850 மி.மீ |
2450 மி.மீ |
+ 400 மி.மீ |
தார் ராக்ஸ் உடன் மஹிந்திரா 6-ஸ்லேட் கிரில், சில்வர்-ஃபினிஷ் செய்யப்பட்ட பம்ப்பர்கள், சி-வடிவ DRL -களுடன் கூடிய வட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை வழங்குகிறது. பக்கவாட்டில் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ள செங்குத்தான டோர் ஹேண்டில்கள் மற்றும் ஒரு மெட்டல் சைடு ஸ்டெப் உடன் பின்புற டோர்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
3-டோர் பதிப்போடு ஒப்பிடும்போது பின்புறம் பெரிதாக மாறவில்லை. மேலும் இது C-ஷேப்டு லைட்டிங் எலமென்ட்களுடன் LED டெயில் லைட் செட்டப்பையும் பெரிய பம்பரையும் கொண்டுள்ளது .
உள்ளே தார் ராக்ஸ் பிளாக் கலர் டாஷ்போர்டுடன் லெதரெட் பேடிங் மற்றும் காப்பர் கலர் ஸ்டிச்களுடன் வருகிறது. இது இருக்கைகளுக்கு வொயிட் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. பின்புறத்தில் "தார்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
பவர்டிரெய்ன்
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
177 PS வரை |
175 PS வரை |
டார்க் |
380 Nm வரை |
370 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6MT & 6AT |
6MT & 6AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
RWD & 4WD |
3-டோர் தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் (1.5-லிட்டர் டீசல் மட்டும்) தார் ராக்ஸ் வருகிறது. இருப்பினும் 5-டோர் தார் உள்ள இன்ஜின் அதிகமாக ட்யூன் செய்யப்பட்டிருக்கும்.
ஆஃப்-ரோடு விவரங்கள் |
|
அப்ரோச் ஆங்கிள் |
41.7 டிகிரி |
பிரேக்கிங் ஆங்கிள் |
23.9 டிகிரி |
டிபார்ச்சர் ஆங்கிள் |
36.1 டிகிரி |
வாட்டர் வேடிங் கெபாசிட்டி |
650 மி.மீ |
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
5-டோர் தார் ராக்ஸ் ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 6-வே பவர் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன்பக்க சீட் மற்றும் 560W சப்வூஃபர் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் என நிறைய வசதிகள் உடன் வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் பிரேக்கிங் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளுடன் இது வருகிறது.
போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா உடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மற்றும் அதிக பிரீமியமான மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ராக்ஸ் டீசல்
0 out of 0 found this helpful