Thar Roxx -ன் டெஸ்ட் டிரைவ், முன்பதிவு மற்றும் டெலிவரி எப்போது தொடங்கும் தெரியுமா ?
modified on ஆகஸ்ட் 16, 2024 06:21 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 73 Views
- ஒரு கருத்தை எழுதுக
தார் ராக்ஸின் டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 14 ஆம் தேதியும், முன்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
-
ராக்ஸ் காரின் டெலிவரிகள் 2024 தசரா பண்டிகை அன்று தொடங்கும்.
-
மஹிந்திரா தார் ராக்ஸை 2 டிரிம்களில் வழங்குகிறது: MX மற்றும் AX.
-
ஆல்-LED லைட்ஸ் மற்றும் 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் உடன் கார் வருகிறது.
-
கேபின் டூயல்-டோன் தீம் மூலம் சாஃப்ட் டச் மெட்டீரியல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் வொயிட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது.
-
டூயல் 10.25-இன்ச் காட்சிகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
MT மற்றும் AT விருப்பங்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டையும் பெறுகிறது; 4WD டீசல் வகைகளுக்கு மட்டுமே.
-
எஸ்யூவியின் விலைகள் ரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி வெளியீடுகளில் ஒன்றான மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ.12.99 லட்சத்தில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா பல்வேறு விவரங்களுடன், எஸ்யூவியின் முன்பதிவுகள் மற்றும் டெலிவரிகள் பற்றிய சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் டிரைவ், முன்பதிவு மற்றும் டெலிவரி
மஹிந்திரா செப்டம்பர் 14 முதல் தார் ராக்ஸின் டெஸ்ட் டிரைவை தொடங்கும். எஸ்யூவிக் -கான முன்பதிவு அக்டோபர் 3 முதல் திறக்கப்படும். அதே நேரத்தில் டெலிவரிகள் தசரா பண்டிகை முதல் தொடங்கும்.
மஹிந்திரா தார் ராக்ஸ் விவரங்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் 2 டிரிம்களில் கிடைக்கிறது - MX மற்றும் AX - இவை மேலும் பின்வரும் சப் வேரியன்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளன:
-
MX - MX1, MX3 மற்றும் MX5
-
AX - AX3L, AX5L மற்றும் AX7L
மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் 6-ஸ்லேட் கிரில், C-வடிவ LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள் மற்றும் LED டெயில் லைட்களை வழங்கியுள்ளது. எஸ்யூவி ஆனது 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் பெரிய பம்பர்களுடன் வருகிறது. மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் இது கிடைக்கும், இவை அனைத்தும் ஸ்டாண்டர்டாக பிளாக் ரூஃப் உடன் வரும்..
மேலும் பார்க்க: 5 டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் எக்ஸ்டீரியர் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
தார் ராக்ஸ் கார் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கானது), வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் கார் வருகிறது. பனோரமிக் சன்ரூஃப், 6 வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் 9-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில் அசென்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்புக்கான வசதிகளுடன் ராக்ஸ் வருகிறது. எஸ்யூவி சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் பெறுகிறது. இதில் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை வசதிக அடங்கும்.
தொடர்புடையது: மஹிந்திரா தார் ராக்ஸ் பேஸ் எம்எக்ஸ்1 வேரியண்ட் பேக்கிங் வருகிறது அனைத்து அம்சங்கள் இங்கே
பவர்டிரெய்ன் விவரங்கள்
தார் ராக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
177 PS வரை |
175 PS வரை |
டார்க் |
380 Nm வரை |
370 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD^ |
RWD, 4WD* |
^RWD- ரியர் வீல் டிரைவ்
*4WD- 4-வீல்-டிரைவ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சத்தில் இருந்து ரூ. 20.49 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. தார் ராக்ஸ் -ன் 4WD வேரியன்ட்களின் விலை விவரங்களை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை. மஹிந்திரா தார் ராக்ஸ் காரானது 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்க்கு போட்டியாக உள்ளது. மாருதி ஜிம்னி மற்றும் 3-டோர் மஹிந்திரா தார் ஆகிய கார்களுக்கு ஒரு பெரிய மற்றும் அதிக பிரீமியம் மாற்றாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: தார் ராக்ஸ் டீசல்
0 out of 0 found this helpful