சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

5 டோர் Mahindra Thar Roxx -ன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது

published on ஆகஸ்ட் 12, 2024 07:38 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்

ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆக்சுவேட்டட் ரியர் டிஃபெரன்ஷியல் லாக் போன்ற சில ஆஃப் ரோடு -க்கான விஷயங்களை டீசரில் பார்க்க முடிகிறது.

  • பனோரமிக் சன்ரூஃப், டூயல் டிஸ்ப்ளேக்கள் (இரண்டும் 10.25-இன்ச் யூனிட்கள்) மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் இந்த காரில் கிடைக்கும் என்பதை முந்தைய டீசர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ் , 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • 3-டோர் தார் உடன் வழங்கப்படும் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • விலை ரூ.15 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் ரோக்ஸ் காருக்கான வெளியீடு நெருங்கி வருகிறது. சுதந்திர தினத்தன்று இந்த கார் வெளியிடப்படவுள்ளது. மஹிந்திரா இந்த எஸ்யூவி -யின் வடிவமைப்பு விவரங்கள் மற்றும் வசதிகளை காட்டும் புதிய டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமீபத்திய டீசர் ஆஃப்-ரோட் -க்கான புதிய விஷயங்களை காட்டுகிறது.

டீசரில் என்ன பார்க்க முடிகிறது ?

டீசரில் காரின் கன்சோலில் உள்ள பட்டன்களின் தொகுப்பை தெளிவாக பார்க்க முடிகிறது. தார் ரோக்ஸ் வென்டிலேட்டட் முன் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது. ஹில் டெசென்ட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கலி ஆட்டிவேட்டட் ரியர் டிஃபரென்ஷியல் லாக் ஆகியவற்றுக்கான மற்ற இரண்டு பட்டன்கள் உள்ளன. ஹில் டிசென்ட் கன்ட்ரோல் செங்குத்தான தளத்தில் இறங்கும் போது நிலையான வேகத்தை பராமரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் பின்புற லாக்கிங் டிஃபெரென்ஷியல் பின்புற சக்கரங்களை ஒரே ஆக்ஸிலில் லாக் செய்கிறது, இதனால் அவை வேகமாக சுழலும். இது சீரற்ற மேற்பரப்பில் அதிக டிராக்‌ஷனை பெற உதவும். இது சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து வெளியேற உங்களுக்கு உதவும்.

மேலும் பார்க்க: சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி கூபே -வை ஓட்டிய பிறகு நாங்கள் கற்றுக்கொண்ட 5 விஷயங்கள்

எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள்

ஏற்கனவே முந்தைய டீசர்களில் காட்டப்பட்டுள்ளபடி பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (இரண்டும் 10.25-இன்ச் யூனிட்கள்), ஆட்டோமெட்டிக் ஏசி, ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் தார் ரோக்ஸ் வரும்.

பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV700 மற்றும் XUV 3XO -ல் காணப்படுவது போல் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் இந்த கார் வரும்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

தார் ரோக்ஸ் ஆனது தார் 3 டோர் காரில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.ஆனால் அவுட்புட்டில் மாற்றம் இருக்கலாம். இந்த இன்ஜின்களில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உள்ளன. ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் காருக்கு நேரடியான போட்டியாளராக இருக்கும். மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.

கார்கள் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

P
prakash iyer
Aug 12, 2024, 2:01:23 PM

I am waiting to take a Test Drive of the Thar ROXX and would pick up contemplating between the Manual Transmission and Automatic Transmission .

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
new variant
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
எலக்ட்ரிக்
எலக்ட்ரிக்
new variant
Rs.6.20 - 10.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை