சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மிரட்டலான தோற்றத்தில் அறிமுகமானது Mahindra Thar Roxx, தொடக்க விலை ரூ.12.99 லட்சமாக நிர்ணயம்

modified on ஆகஸ்ட் 14, 2024 10:29 pm by dipan for மஹிந்திரா தார் ராக்ஸ்

மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது தார் 3-டோர் மாடலின் நீளமான பதிப்பாகும். இது அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் இடவசதியை கொண்டிருக்கும்.

  • 6-ஸ்லாட் கிரில், LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் சி வடிவ LED DRL -கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.

  • டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் 2 -வது வரிசையில் பெஞ்ச் சீட் அமைப்பைக் கொண்டுள்ளது.

  • போர்டில் உள்ள வசதிகளில் இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை அடங்கும்.

  • பாதுகாப்புக்காக ஸ்டாண்டர்டான TPMS மற்றும் ADAS மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளன.

  • தார் 3-டோரில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. ஆனால் காரில் உள்ள இன்ஜின் அதிக செயல்திறனுடன் இருக்கும்.

  • விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மஹிந்திரா தார் ரோக்ஸ் கார் ரூ. 12.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேரியன்ட் வாரியான விலை விரைவில் வெளியிடப்படும். அதன் 5-டோர் மாடலில் தார் ரோக்ஸ் தற்போதுள்ள 3-டோர் தார் காரில் கிடைக்கும் அனைத்து ஆஃப்-ரோட் வசதிகளுடன் வருகிறது. தார் ரோக்ஸ் வழங்கும் அனைத்தையும் இங்கே பார்க்கலாம்:

வெளிப்புறம்

ஏற்கனவே தார் ரோக்ஸ் காரின் பல டீஸர்களை மஹிந்திரா வெளியிட்டிருந்தது. அதன் மூலமாக காரை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நீளமான தார் பாக்ஸி வடிவத்தில் இருக்கிறது. C-வடிவ LED DRL -கள் கொண்ட LED ஹெட்லைட்கள் மற்றும் ஒரு புதிய பாடி கலர்டு 6-ஸ்லாட் கிரில்லை கொண்டுள்ளது. முன் பம்பரில் சில சில்வர் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கங்களில் சி-பில்லர் மீது டோர் ஹேண்டில் உடன் பின்புற டோர்கள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். கூடுதலாக தார் ரோக்ஸ் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் வழங்கப்படுகிறது. காரில் மெட்டல் ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பனோரமிக் சன்ரூஃபை கொண்டுள்ளது. மஹிந்திரா சில லோவர் மாடல்களுக்கு சிங்கிள்-பேன் சன்ரூஃபை வழங்குகிறது.

டெயில்லைட்கள் C -வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ட்டீரியர்

5-டோர் தார் ஒரு பிளாக் மற்றும் வொயிட் தீமை பெறுகிறது. அங்கு இருக்கைகள் வொயிட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் டாஷ்போர்டில் கான்ட்ராஸ்ட் காப்பர் ஸ்டிச்களுடன் பிளாக் லெதரெட் பேடிங்கில் குளோஸ் செய்யப்பட்டிருக்கும். முன்பக்க பயணிகளுக்கு சென்டர் ஆர் ரெஸ்ட்கள் உள்ளன. எஸ்யூவி -யின் இரண்டாவது வரிசையின் பக்கவாட்டில் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஒரு ஃபோல்டபிள் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

இந்த தார் 5-டோர் காரில் இப்போது நிறைய வசதிகளை கொண்டுள்ளது. இது இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்களை பெறுகிறது (ஒன்று டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரீன்), ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி ஆகிய வசதிகள் உள்ளன. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளும் இந்த காரில் உள்ளன.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ஒரு 360 டிகிரி கேமரா செட்டப், ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது.

பவர்டிரெய்ன்

மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின் ஆப்ஷன்கள்

பெட்ரோல் இன்ஜின்

டீசல் இன்ஜின்

பவர்

162 PS

152 PS

டார்க்

330 Nm

330 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

டிரைவ்டிரெய்ன்

4WD, RWD

4WD, RWD

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) வெளியிடப்பட்டுள்ளது. வேரியன்ட் வாரியான விலை விரைவில் வெளியிடப்படும். இது நேரடியாக 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா உடன் போட்டியிடும். மேலும் மாருதி ஜிம்னி -க்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ரோக்ஸ் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
new variant
Rs.11.69 - 16.73 லட்சம்*
new variant
Rs.8 - 15.80 லட்சம்*
எலக்ட்ரிக்new variant
new variant
Rs.7.94 - 13.62 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை