• English
    • Login / Register

    2024 நிஸான் X-டிரெயில் மூன்று நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது

    நிசான் எக்ஸ்-டிரையல் க்காக ஜூலை 24, 2024 05:03 pm அன்று samarth ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 41 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய தலைமுறை X-டிரெயில் பேர்ல் ஒயிட், டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர் என மூன்று மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.

    2024 Nissan X-Trail Colour Options

    • புதிய தலைமுறை நிஸான் X-டிரெயில் இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் தயாரிப்பாக இருக்கும்.

    • இது 3 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்: பேர்ல் ஒயிட், டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர்.

    • முக்கிய வசதிகள் பின்வருமாறு: 8-இன்ச் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப்.

    • இது 12V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி மற்றும் CVT கியர்பாக்ஸுடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்.

    • விலை ரூ.40 லட்சத்தில் (X-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் 2024 நிஸான் X-டிரெயில் கார் அறிமுகமாகியுள்ளது. மேலும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இது இந்தியாவில் நிஸானின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆக இருக்கும். நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் இந்தியாவில் மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும். அதன் விவரங்கள் இங்கே.

    கலர் ஆப்ஷன்கள்

    • பேர்ல் வொயிட்

    Nissan X-Trail Pearl White

    • டயமண்ட் பிளாக்

    Fourth-generation Nissan X-Trail Diamond Black

    • ஷாம்பெயின் சில்வர்

    Fourth-generation Nissan X-Trail Champagne Silver

    2024 X-டிரெயில் கார் மூன்று மோனோடோன் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.

    மேலும் பார்க்க:  2024 நிஸான் X-டிரெயில் ஆஃப்லைன் முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் திறக்கப்பட்டுள்ளன

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    2024 Nissan X-Trail cabin

    நிஸாஜின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியானது 12.3 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும்.

    பவர்டிரெய்ன் 

    2024 நிஸான் X-டிரெயில் ஆனது 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கும். ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) செட்டப்பில் மட்டுமே விற்பனைக்கு வரும். கிடைக்கும் பவர்டிரெயினின் விரிவான விவரங்கள் இங்கே: 

    விவரங்கள்

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

    பவர்

    163 PS

    டார்க்

    300 Nm

    டிரான்ஸ்மிஷன்

    CVT

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் காரின் ஆரம்ப விலை ரூ.40 லட்சம் (X-ஷோரூம்) ஆக இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக், மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience