2024 Nissan X-Trail காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளன.
modified on ஜூலை 23, 2024 05:49 pm by rohit for நிசான் எக்ஸ்-டிரையல்
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
மேக்னைட்டுக்கு பிறகு நிஸானின் ஒரே காராக எக்ஸ்-டிரெயில் மாறும். மேலும் இந்தியாவில் நிஸானின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும்.
-
நிஸான் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு ‘எக்ஸ்-டிரெயில்’ காரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது.
-
புதிய எஸ்யூவியில் LED லைட்ஸ், 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
-
கேபின் விவரங்களில் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும்.
-
8-இன்ச் டச் ஸ்கிரீனை பெறக்கூடும், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 7 ஏர்பேக்குகள்.
-
ஒரே ஒரு 163 PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 12V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி மற்றும் CVT கியர் பாக்ஸ் உடன் வழங்கப்படும்.
-
ஆகஸ்ட் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ 40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நிஸான் எக்ஸ்-டிரெயில் காரின் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட யூனிட் (CBU) ஆக வழியாக இப்போது நான்காவது தலைமுறை அவதாரத்தில் விரைவில் இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. நிஸான் நிறுவனம் சமீபத்தில் இந்தியா-ஸ்பெக் மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. சில நிஸான் டீலர்ஷிப்கள் வரும் ஆகஸ்ட் 1, 2024 அன்று இந்த கார் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆஃப்லைன் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கின்றன என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளோம்.
CarDekho India (@cardekhoindia) ஆல் ஷேர் செய்யப்பட்ட ஒரு பதிவு
வடிவமைப்பு விவரங்கள்
2024 இந்தியா-ஸ்பெக் எக்ஸ்-டிரெயில் ஸ்பிளிட்-டிசைன் ஹெட்லைட் வடிவமைப்பு மற்றும் LED DRL-களுடன் உலகளாவிய காரை போலவே உள்ளது. இது குரோம் அலங்காரங்களுடன் கூடிய V-வடிவ கிரில்லையும் பெறுகிறது. நிஸான் அதன் முழு அளவிலான எஸ்யூவி -யில் 20-இன்ச் அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தடிமனான பாடி கிளாடிங்க் காரை சுற்றிலும் உள்ளது. பின்புறத்தில் புதிய எக்ஸ்-டிரெயில் LED டெயில் லைட்ஸ், 'நிஸான்' மற்றும் 'எக்ஸ்-டிரெயில்' பேட்ஜ்கள் மற்றும் ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைப் பெறுகிறது.
கேபின் மற்றும் வசதிகள்
நிஸான் நான்காவது தலைமுறை இந்தியா-ஸ்பெக் எக்ஸ்-டிரெயிலை ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் வழங்குகிறது. இது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைன்டு 2 -வது வரிசை இருக்கைகள் ஆகியவை போர்டில் உள்ள மற்ற வசதிகளாகும்.
எஸ்யூவியின் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல்-ஒன்லி ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்
இது இந்தியாவில் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் கிடைக்கும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
163 PS |
டார்க் |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
CVT |
நிஸான் ஒரு ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) தோற்றத்தில் லிமிடெட் ஸ்லிப் டிஃபரென்ஷியல் உடன் மட்டுமே வழங்கும். டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் பெறுகிறது.
மேலும் பார்க்க: வெளிப்புறம் மறைக்கப்படாத Tata Curvv முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
காரின் விலை எவ்வளவாக இருக்கும்?
நான்காவது தலைமுறை நிஸான் X-Trail காரின் ஆரம்ப விலை ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக், மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful