• English
  • Login / Register

வெளிப்புறம் மறைக்கப்படாத Tata Curvv முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஜூலை 22, 2024 07:10 pm by samarth for டாடா curvv

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டேடோனா கிரேயில் ஃபினிஷ் செய்யப்பட்ட கர்வ்வ் காரின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை படங்கள் காட்டுகின்றன.

Tata Curvv Spotted Undisguised

  • கர்வ்வ் ICE கனெக்டட் LED DRL -கள், வெர்டிகலாக உள்ள ஹெட்லைட்கள் மற்றும் முன் பார்க்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.

  • பின்புறத்தில் கனெக்டட் LED டெயில்லைட், ஒரு உயரமான பூட்லிட் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் வருகிறது.

  • 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட்  முன் சீட்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கர்வ்வ் -ன் ICE எடிஷன் 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கர்வ்வ் EV காரின் விலை ஆகஸ்ட் 7 -ம் தேதி வெளியிடப்படும். அதே நேரத்தில் கர்வ்வ் ICE -க்கான விலை பின்னர் வெளியிடப்படும். 

  • கர்வ்வ் ICE -ன் விலை ரூ. 10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளியிடப்படவுள்ள டாடா கர்வ்வ் டாடாவி -டமிருந்து எஸ்யூவி-கூபே முற்றிலும் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. கர்வ்வ் காரின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இது எஸ்யூவி-கூபே -ன் வடிவமைப்பை இன்னும் நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. கர்வ்வ் இவி -யின் விலை விவரங்களை ஆகஸ்ட் 7 அன்று இவற்றின் டாடா அறிவிக்க உள்ளது. கர்வ்வ் ICE விலை பின்னர் அறிவிக்கப்படும்.

கவனிக்கப்பட்ட விவரங்கள் என்ன ?

Tata Curvv Spotted Undisguised

பிற டாடா கார்களில் காணப்படும் டேடோனா கிரே கலர் ஆப்ஷன் போன்ற தோற்றத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட புரடெக்ஷன்-ஸ்பெக் கர்வ்வி காரின் படங்கள் வெளிவருவது இதுவே முதல் முறை. முன்பக்கத்தில் கர்வ்வ் ஆனது கனெக்டட் LED DRL ஸ்டிரிப்பை இது கொண்டுள்ளது. இது இப்போது டாடாவின் புதிய எஸ்யூவி மாடல்களுக்கான சிக்னேச்சர் வடிவமைப்பாக மாறியுள்ளது. அதற்குக் கீழே புதிய ஹாரியரில் உள்ள குரோம் ஸ்டுட்களை கொண்ட கிரில்லையும் நீங்கள் கவனிக்கலாம்.

ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் ஒரு முக்கோண ஹவுஸிங் செட்டப்களுக்குள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழே நகர்ந்தால் முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமராவை நீங்கள் கவனிக்கலாம். இது போர்டில் 360 டிகிரி செட்டப்பின் ஒரு பகுதியாகும். பக்கவாட்டு தோற்றத்தை பொறுத்தவரையில் இது எந்த டாடா காரிலும் பார்க்க முடியாதபடி உள்ளது. ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஒரு புதிய ஃபிளவர்-பெட்டல் வடிவ அலாய் வீல் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

Tata Curvv Rearபின்புற சுயவிவரம் கனெக்டட் டெயில் லைட் செட்டப்பை கொண்டுள்ளது. முன் வடிவமைப்பும் அப்படியே உள்ளது. இது அதன் சாய்வான கூரையுடன் தனித்து தெரிகிறது. பின்புற ஸ்பாய்லர் மற்றும் கூரையில் இருக்கும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவற்றைக் பார்க்க முடிகிறது. கர்வ்வ் பிராண்டிங் பூட் கேட்டின் மையத்தில் வைக்கப்பட்டு, குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்புற பம்பரில் சில்வர் ஃபினிஷிங் கொண்ட ஃபாக்ஸ்-ஸ்கிட் பிளேட் உள்ளது. 

எதிர்பார்க்கப்படும் கேபின், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Tata Curvv 4-spoke steering wheel spied

கர்வ்வ் -ன் உட்புறத்தை இந்த படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது நெக்ஸான் போன்றே வெவ்வேறு கேபின் தீம் கொண்ட டாஷ்போர்டு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஸ்கிரீன் செட்டப் (12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே), வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டிருக்கலாம்), பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

கர்வ்வ் ICE பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: 

இன்ஜின்

1.2 லிட்டர் TGDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜின்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

125 PS

115 PS

டார்க்

225 Nm

260 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* (எதிர்பார்க்கப்படுகிறது)

6-ஸ்பீடு MT

*DCT- டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் 

கர்வ்வ் -காரின் EV எடிஷன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச் சுமார் 500 கி.மீ ஆக இருக்கும். கர்வ்வ் EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா கர்வ்வ் -ன் ICE பதிப்பு ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்வ்வ் ICE ஆனது சிட்ரோன் பசால்ட் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப்பை சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

பட ஆதாரம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata curvv

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • போர்டு இண்��டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • ஸ்கோடா kylaq
    ஸ்கோடா kylaq
    Rs.8.50 - 15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • ஹூண்டாய் அழகேசர் 2024
    ஹூண்டாய் அழகேசர் 2024
    Rs.17 - 22 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2024
×
We need your சிட்டி to customize your experience