2024 Maruti Dzire -ன் புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
published on அக்டோபர் 29, 2024 05:53 pm by shreyash for மாருதி டிசையர்
- 110 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 மாருதி டிசையர் முற்றிலும் புதிய வடிவிலான முன்பக்கம் உள்ளது. ஆகவே புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை இது கொண்டுள்ளது.
-
வெளிப்புறத்தில் ஒரு பெரிய கிரில், ஸ்லீக்கரான LED ஹெட்லைட்கள் மற்றும் Y- வடிவ LED டெயில் லைட்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன.
-
உள்ளே இது புதிய மாருதி ஸ்விஃப்ட்டில் உள்ள அதே டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும்.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஸ்விஃப்ட்டின் 82 PS 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ.6.70 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
2024 மாருதி டிசையர் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக மறைக்கப்படாத காரின் ஒரு புதிய ஸ்பை வீடியோ ஒன்று ஆன்லைனில் வெளிவந்துள்ளது. கடந்த மே மாதம் வெளியான புதிய மாருதி ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடும் போது புதிய தலைமுறை டிசையர் இப்போது முற்றிலும் மாறுபட்டதாகத் தோற்றமளிக்கிறது. சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மூலமாக இது எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
ஒரு புதிய வடிவமைப்பு
வடிவமைப்பின் அடிப்படையில் பார்க்கப்போனால் 2024 டிசையர் இப்போது ஸ்விஃப்ட் காரிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளதை சமீபத்திய ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன. இது பல கிடைமட்ட ஸ்லேட்டுகளுடன் கூடிய பெரிய கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்விஃப்ட்டின் ஹனிகோப்ம் வடிவிலான கிரில்லில் இருந்து வேறுபட்டது. மாருதி அதற்கு நேர்த்தியான LED ஹெட்லைட்களை (அவை சியாஸ் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன) கிடைமட்ட DRL -களை ஸ்போர்ட்டியான மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க பம்பரை இந்த காரில் பார்க்க முடிகிறது.
வீடியோவில் அதன் புதிய டூயல்-டோன் அலாய் வீல்களையும் பார்க்க முடிகிறது. பின்புறத்தில் புதிய டிசையரில் Y-வடிவிலான LED டெயில் லைட்ஸ் இருப்பதையும் நாம் பார்க்கலாம். இது குரோம் எலமென்ட் மூலம் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
2024 ஸ்விஃப்ட் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
புதிய ஜென் டிசைரின் உட்புறம் எப்படி இருக்கிறது என்பதை ஸ்பை வீடியோ காட்டவில்லை, ஆனால் 2024 மாருதி ஸ்விஃப்டில் பார்த்தது போன்ற டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இது பழைய டிசையரில் இருந்து டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் தீம் கொடுக்கப்படலாம்.
9-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் 2024 டிசையரை மாருதி வழங்கலாம். 2024 டிசையர் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் இந்த வசதியுடன் வரும் முதல் சப்காம்பாக்ட் செடானாகவும் இது மாறும். அதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா (இந்த பிரிவில் முதலாவது) ஆகியவை இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
2024 டிசையர் புதிய Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஸ்விஃப்ட்டில் அறிமுகமானது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் |
பவர் |
82 PS |
டார்க் |
112 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
இது ஒரு சிஎன்ஜி பவர்டிரெய்னின் ஆப்ஷனையும் இது பெறலாம். இருப்பினும் பின்னர் கொண்டு அறிமுகப்படுத்தபடலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மாருதி டிசையர் காரின் ஆரம்ப விலை ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இது ஹூண்டாய் ஆரா, டாடா டைகோர், மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மற்ற சப்காம்பாக்ட் செடான்களுடன் போட்டியிடும்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful