• English
    • Login / Register

    2023 Tata Safari Facelift முதல் டீசர் வெளியானது, அக்டோபர் 6 ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது

    rohit ஆல் அக்டோபர் 05, 2023 06:24 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 51 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய டாடா சஃபாரி நவம்பர் 2023 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tata Safari facelift teased

    • 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை சஃபாரி, முதல் முறை பெரிய அளவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

    • அக்டோபர் 6 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -க்கான முன்பதிவுகளை டாடா தொடங்கவுள்ளது.

    • இந்த ஸ்பிலிட்-LED ஹெட்லைட்கள், நீண்ட LED DRL -கள் மற்றும் புதிய 19-இன்ச் அலாய் வீல்களை பெறும்.

    • இதன் கேபினில் பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் இருக்கும்.

    • போர்டில் உள்ள மற்ற அம்சங்களில் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்

    • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இரண்டிலும் இது வழங்கப்படலாம்

    • தற்போதைய மாடலை விட கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்படலாம் (டெல்லி எக்ஸ்ஷோரூம் ரூ.15.85 லட்சம் முதல் ரூ.25.21 லட்சம் வரை இருக்கலாம்.

    டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டுடன் புதுப்பிக்கப்பட்ட 3-வரிசை எஸ்யூவியின் டீசரை டாடா பகிர்ந்துள்ளதால்,  டாடா சஃபாரி ஃ பேஸ்லிஃப்ட் காரின் திரை விரைவில் விலகும் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சஃபாரியின் முன்பதிவுகள் அக்டோபர் 6 முதல் தொடங்கும்.

    என்ன பார்க்க முடிகிறது?

    டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில்  காணப்பட்ட மாற்றங்களை போலவே, எஸ்யூவியின் முன்பக்கத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்களை டீஸர் நமக்கு காட்டுகிறது. இன்செர்ட்களுடன் கூடிய புதிய வடிவிலான கிரில், நேர்த்தியான இண்டிகேட்டர்கள், நீளமான LED DRL -கள் விளக்குகள் ஸ்ட்ரிப் பானட்டின் அகலம் மற்றும் புதிய  டாடா நெக்ஸான்- மற்றும் டாடா நெக்ஸான் EV  போன்ற செங்குத்தாக அடுக்கப்பட்ட பிளவுபட்ட LED ஹெட்லைட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    அதன் பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றங்களைப் பற்றி இன்னும் டீசரில் விவரங்கள் காட்டப்படவில்லை, ஆனால் பல சோதனை கார்களை பார்த்த வகையில், புதிய சஃபாரி பெரிய 19-இன்ச் அலாய் வீல்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகளுடன் வர வாய்ப்புள்ளது.

    மேலும் பார்க்கவும்: 2023 Tata டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் முதல் டீசர் வெளியிடப்பட்டது, முன்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கும் 

    கேபினும் மேம்படுத்தப்பட உள்ளது

    Tata Safari cabin

    தற்போதுள்ள சஃபாரியின் கேபின் படம் குறிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது 

    எஸ்யூவி -யின் புதுப்பிக்கப்பட்ட கேபின் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இதுவும் புதுப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய  நெக்ஸான்- நெக்ஸான் EV இரட்டை வாகனங்களில் உள்ளது போல் புதிய சஃபாரிக்கு, ரீடோன் டாஷ்போர்டு மற்றும் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை, பேக்லிட் டாடா லோகோவுடன் டாடா வழங்க முடியும்.

    பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், வென்டிலேட்டட் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் (பிந்தையது 6 இருக்கைகள் கொண்ட பதிப்பில் மட்டும்), முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பயணக் கட்டுப்பாடு, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் சஃபாரியை கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு வலையில் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ISOFIX ஆங்கர் பாயிண்ட்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

    ஹூட்டின் கீழ் என்ன கிடைக்கும்?

    Tata Safari facelift grille

    டாடா 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170PS/350Nm) தனது முதன்மையான 3-வரிசை எஸ்யூவி -யை  தொடர்ந்து வழங்கும். இது டாடாவின் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெற வாய்ப்புள்ளது, இது 170PS மற்றும் 280Nm மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.

    இதையும் படியுங்கள்: 360 டிகிரி கேமரா கொண்ட 10 மலிவு விலை கார்கள்: மாருதி பலேனோ, டாடா நெக்ஸான், கியா செல்டோஸ் மற்றும் பிற கார்கள்

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சஃபாரி இந்த நவம்பரில் ஷோரூம்களுக்கு வரலாம். 15.85 லட்சம் முதல் 25.21 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனையாகும், இது தற்போதைய மாடலை விட இதன் அதிகமாக இருக்கும். புதிய சஃபாரி எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய மாடல்களுடனான அதன் போட்டியை மீண்டும் தொடரும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata சாஃபாரி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience