2023 Tata Harrier Facelift: முதல் டீசர் வெளியீடு, அக்டோபர் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்

published on அக்டோபர் 04, 2023 04:13 pm by stuti for டாடா ஹெரியர்

  • 136 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய டாடா ஹாரியரின் ஸ்பிளிட் LED ஹெட்லைட் செட்டப் மற்றும் எஸ்யூவி -யின் முன்புற முகம் முழுவதும் படர்ந்து இருக்கும் நீளமான LED DRL  ஸ்ட்ரிப் ஆகியவற்றின் தோற்றத்தை டீசரில் பார்க்க முடிகிறது.

2023 Tata Harrier Facelift First Teaser Out, Bookings Open On October 6

  • 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஹாரியர் அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறவுள்ளது.

  • டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது.

  • புதிய அலாய் வீல்களின் செட், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகளை பெற உள்ளது.

  • கேபின் புதுப்பிப்புகளில் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை அடங்கும்.

  • வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ADAS உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நவம்பர் மாதத்தில் ஹாரியர் ஃபேஸ்லிஃப்டை டாடா அறிமுகப்படுத்தலாம், மேலும் அதன் விலை ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட SUV -யின் முதல் டீசரை கார் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது, அதே நேரத்தில் அதன் முன்பதிவு அக்டோபர் 6 முதல் தொடங்கும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

A post shared by Tata Harrier Official (@tataharrier)

டீசரில்  காணப்பட்ட விவரங்கள்

இது ஒரு டீசர் என்பதால், இந்த வீடியோ ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -யின் முகப்பு தோற்றத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. புதிய வடிவிலான மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட ஸ்பிளிட் LED ஹெட்லைட் அமைப்பு, நேர்த்தியான கிரில் மற்றும் இன்டிகேட்டர்கள் மற்றும் பானெட்டின் அகலத்தில் பரவியிருக்கும் புதிய LED DRL  ஸ்ட்ரிப் ஆகியவற்றை நாம் காணலாம். இந்த அப்டேட்கள் அனைத்தும் புதிய டாடா நெக்ஸான் மற்றும் டாடா நெக்ஸான் EV கார்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளன.

டீசரில் இதன் முழுமையான முகப்புத்தோற்றம் மற்றும் பின்புறம் காட்டப்படவில்லை என்றாலும், முந்தைய சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்கள் புதிய அலாய் சக்கரங்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

அதிக கேபின் அப்டேட்களை பெறும்

Tata Harrier cabin

புதிய ஹாரியரின் கேபினை பற்றி டாடா இதுவரை நமக்கு விவரம் வழங்கவில்லை, ஆனால் இது ஹாரியரின் கேபினை மறுசீரமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். புதிய அடிவிலான டாஷ்போர்டு மற்றும் பேக்லிட் டாடா லோகோவுடன் கூடிய புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை சாத்தியமான மாற்றங்களாக இருக்கலாம்.

பெரிய டச் ஸ்கிரீன் செட்டப், முழுமையான டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.

ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESP), 360-டிகிரி கேமரா,  மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவற்றால் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படும்.

இதையும் பாருங்கள்: மீண்டும் சாலையில் தென்பட்ட டாடா பஞ்ச் EV , புத்தம்புதிய  விவரங்களை தெரிவிக்கிறது

பெட்ரோல் பவர்டிரெயினும் கொடுக்கப்படலாம்

2023 Tata Harrier Facelift First Teaser Out, Bookings Open On October 6

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (170PS/280Nm) வழங்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இது மேனுவல் மற்றும் DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதன் தற்போதைய 2 லிட்டர் டீசல் யூனிட் (170PS/350Nm) அப்டேட் உடன் விற்பனையில் தொடர வாய்ப்புள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கும்.

எப்போது அறிமுகமாகிறது?

ஃபேஸ்லிஃப்டட் ஹாரியரை டாடா நிறுவனம் 2023 நவம்பரில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். அது தற்போதைய மாடலை விட கூடுதலான விலையில் கிடைக்கும்,  ரூ.15.20 லட்சத்திலிருந்து ரூ. 24.27 லட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம் டெல்லி) கூடுதலான விலையில் வரலாம். மஹிந்திரா XUV700, MG ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் ஹையர் வேரியன்ட்களுடன் டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும்.

மேலும் தெரிந்து கொள்ள: டாடா ஹாரியர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா ஹெரியர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience