சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Audi Q6 e-tron அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி 625 கி.மீ. ரேஞ்ச் மற்றும் அப்டேட்டட் இன்ட்டீரியர் உடன் வருகின்றது

published on மார்ச் 20, 2024 08:56 pm by ansh for பிஎன்டபில்யூ ix1

ஆடி Q6 இ-ட்ரான் ஃபோர்ஸ் உடன் பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது இது 94.9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்ட ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும்.

  • புதிய Q8 இ-ட்ரான் ஆடியின் சமீபத்திய எலக்ட்ரிக் எஸ்யூவி அதன் உலகளாவிய EV வரிசையில் Q8 இ-ட்ரான் காரின் கீழே உள்ளது.

  • Q6 இ-ட்ரான் குவாட்ரோ மற்றும் SQ6 இ-ட்ரான் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் மூலம் அதன் உலகளாவிய அறிமுகம் நடைபெற்றுள்ளது.

  • டாஷ்போர்டில் கர்வ்டு இன்டெகிரேட்டட் ஸ்கிரீன்கள் மற்றும் முன்பக்க பயணிகளுக்கான பிரத்யேக டச் ஸ்க்ரீன் மற்றும் முற்றிலும் புதிய கேபின் செட்டப்பை கொண்டுள்ளது.

  • 625 கி.மீ. வரை WLTP கிளைம் செய்யப்படும் ரேஞ்சை கொண்ட 94.9 kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

  • 2025-க்குள் இந்தியாவில் லாஞ்ச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது; முழுவதும் லோட் செய்யப்பட்ட குவாட்ரோ வெர்ஷனின் விலை ரூ. 80 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

ஆடி நிறுவனம் சமீபத்தில் ஆடி Q6 இ-ட்ரான் எனப்படும் அதன் சமீபத்திய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலக்ட்ரிக்) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஆடியின் லக்ஸரி கார்களின் வரிசையில் Q8 இ-ட்ரானுக்கு கீழே வரிசைப்படுத்தப்படும்.

கண்ணைக் கவரும் டிஸைன்

Q6 இ-ட்ரான் ஒரு அதி அற்புதமான முன்பக்கத்தை கொண்டுள்ளது இதில் கணிசமான கிரில் மற்றும் ஸ்பிளிட் லைட்டிங் அமைப்பானது ஃபாசியாவின் மேல் பகுதியில் அமைந்துள்ள LED DRL-களை கொண்டுள்ளது. மேட்ரிக்ஸ் LED யூனிட்களுக்கு 8 லைட்டிங் ஆப்ஷன்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஹெட்லைட் அமைப்பை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

பக்கவாட்டில் இருந்து Q6 இ-ட்ரான் ஆடி எஸ்யூவி -களின் வழக்கமான தோற்றத்தை கொண்டுள்ளது மற்றும் ஸ்டைலான அலாய் வீல்களுடன் டாப்பர் செட் பொருத்தப்பட்டுள்ளது. ரியர் பகுதியில் இது 6 OLED பேனல்களுடன் இணைக்கப்பட்ட OLED டெயில்லைட்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு 10 மில்லி விநாடிகளுக்கும் ஒரு புதிய அனிமேஷனை உருவாக்க மொத்தம் 360 பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆடி ரியர் விளக்கு யூனிட் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது. இது Q6 இ-ட்ரானை தொடர்ந்து கார்களுடன் துரிதமாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. முக்கிய எச்சரிக்கை சிம்பல்களைக் காண்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட ட்ராஃபிக் காட்சிகள் அல்லது விபத்தை பற்றி பின்னால் இருக்கும் வாகனத்திற்கு இதன் மூலம் தெரிவிக்கலாம்.

Q6 இ-ட்ரான் அதன் சற்று ஸ்போர்ட்டியர் வேரியன்ட்டை சேர்ந்த SQ6 இ-ட்ரான் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ப்ளாக்ட்-அவுட் விவரங்கள் மற்றும் தனித்துவமான அலாய் வீல்களை கொண்டுள்ளது.

புதிய PPE பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட அறிமுக ஆடி மாடலாக பிராண்டின் தற்போதைய முதன்மை EV எஸ்யூவி -க்கு எதிராக அதன் பரிமாணங்கள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை கீழே பார்க்கலாம்:



அளவீடுகள்



ஆடி Q6 இ-ட்ரான்



ஆடி Q8 இ-ட்ரான்



நீளம்



4771 mm



4915 mm



அகலம்



1993 mm



1976 mm



உயரம்



1648 mm



1632 mm



வீல்பேஸ்



2899 mm



2928 mm

Q8 இ-ட்ரான் உடன் ஒப்பிடும்போது Q6 இ-ட்ரான் அதிக அகலத்தையும் உயரத்தையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த நீளத்தில் தனித்துவம் பெறுகிறது மற்றும் நீண்ட வீல் பேஸை வழங்குகிறது. அளவில் பெரியது என்பதால் Q8 இ-ட்ரான் கேபினுக்குள் கூடுதல் லெக்ரூமை வழங்குகிறது.

முற்றிலும் புதிய ஆடி - இன்டீரியர்

இந்த காரில் ஒரு கூடுதல் வசதியாக Q6 இ-ட்ரான் ஆடியின் சமீபத்திய இன்டீரியர் டிசைனை அறிமுகப்படுத்துகிறது. இது வரவிருக்கும் மாடல்களிலும் இடம்பெறும். டாஷ்போர்டின் பெரும்பகுதி இப்போது முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. இதில் டிரைவர் மற்றும் சென்ட்ரல் ஸ்கிரீன்களுக்கு கர்வ்டு டூயல்-இன்டெக்ரேட்டட் ஸ்கிரீன்கள் உள்ளன. இது மூன்று ஸ்கிரீன்களை வழங்குகிறது: 11.9-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஒரு விசாலமான 14.5-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் சக பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே. குறிப்பிடத்தக்க வகையில் கிளைமேட் கண்ட்ரோல்களுக்காக கன்சோலில் தனி டச் ஸ்கிரீன் இன்டர்ஃபேஸ் இல்லை; மாறாக இந்த செயல்பாடுகள் சென்டர் டிஸ்பிலேவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. கூடுதலாக டிரைவரின் கவனச்சிதறல்களைக் குறைக்க சக பயணிகளுக்கான ஸ்கிரீனில் பிரத்தியோகமாக 'ஆக்டிவ் பிரைவசி மோட்' உள்ளது.

Q6 இ-ட்ரான் ஒரு ஆப்ஷனான ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேயையும் வழங்குகிறது இது வேகம் ட்ராஃபிக் சைன்கள் மற்றும் நேவிகேஷன் சிம்பல்கள் போன்ற தகவல்களை வழங்குகிறது. ஆடி தனது வாய்ஸ் அசிஸ்டண்டை ‘ஆடி அசிஸ்டெண்ட்’ என அழைக்கிறது இது செயற்கை நுண்ணறிவை (A.I) ஒருங்கிணைத்து 800 வாய்ஸ் கமாண்ட்களை புரிந்துகொள்ள உதவுகிறது. டிரைவருக்கான கஸ்டமைஸ்டு ஆதரவை வழங்குவதற்காக பயனர் நடத்தையிலிருந்து இது தொடர்ந்து கற்றுக்கொள்கிறது.

கூடுதலாக டாஷ்போர்டின் மேற்புறத்தில் ஒரு லைட் பார் உள்ளது இது இடது முன் கதவிலிருந்து வலப்புறமாக நீண்டுள்ளது. இது மூன்று செயல்பாடுகளை வழங்குகிறது: முதலாவதாக பயணிகளை வரவேற்பது கார் எப்போது பூட்டப்பட்டது அல்லது திறக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக இது டைனமிக் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகளை பிரதிபலிக்கிறது. ஆனால் டிஜிட்டல் கிளஸ்டரில் உள்ள பாரம்பரிய இண்டிகேட்டர்களை இது நேரடியாக மாற்றாது. கடைசியாக இது சார்ஜ் நிலை மற்றும் சார்ஜிங் செயல்முறையையும் காட்டுகிறது.

போர்டில் உள்ள மற்ற உபகரணங்களில் 830W 20-ஸ்பீக்கர் பேங் ஓலுஃப்சென் 3D சவுண்ட் சிஸ்டம் 360 டிகிரி கேமரா வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

Q6 இ-ட்ரான் பொதுவாக டார்க் கேபினை கொண்டுள்ளது இது குரோம் ஆக்ஸன்ட்களுடன் டூயல்-டோன் தீம் -ஐ பராமரிக்கிறது. இதற்கு மாறாக SQ6 இ-ட்ரான் ஆல் பிளாக் கேபினை கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: சிக்ஸரால் Tata Punch EV -யின் கண்ணாடியை சிதறடித்த WPL வீராங்கனை எல்லிஸ் பெர்ரி… மறக்கமுடியாத பரிசளித்த டாடா நிறுவனம்

எலெக்ட்ரிக் பவர் ட்ரெயின்கள் பற்றிய விவரங்கள்

ஆடி ஆரம்பத்தில் உலகளாவிய-ஸ்பெக் Q6 இ-ட்ரானை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்துகிறது: Q6 இ-ட்ரான் குவாட்ரோ மற்றும் SQ6 இ-ட்ரான். ஒவ்வொரு வேரியன்டிற்கான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.



விவரங்கள்



Q6 இ-ட்ரான் குவாட்ரோ



SQ6 இ-ட்ரான்



பேட்டரி பேக்



94.9 kWh



94.9 kWh



எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை



2



2



WLTP – கிளைம் செய்யப்படும் ரேஞ்ச்



625 கி.மீ



598 கி.மீ



0-100 kmph



5.9 நொடிகள்



4.3 நொடிகள்

இரண்டு வேரியன்ட்களிலும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டிருந்தாலும் மார்க்கெட்டை பொறுத்து EV -யின் ரியர்-வீல்-டிரைவ் (RWD) வெர்ஷன்களை பின்னர் அறிமுகப்படுத்த ஆடி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக ஒரு சிறிய 83 kWh பேட்டரி பேக்கை கொண்ட RWD Q6 இ-ட்ரான் இருக்கும் அது பின்னர் அறிமுகப்படுத்தப்படும்.

100 kWh பேட்டரி யூனிட் (மொத்த திறன்) 270 kW வரை வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் 800-வோல்ட் எலக்ட்ரிக் கட்டமைப்பு வெறும் 21 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். ஆடி 11 கிலோவாட் ஏசி சார்ஜரை ஆன்-போர்டுடன் வழங்குகிறது ஒரே இரவில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. கூடுதலாக ஆடி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வேகமான 22 kW AC சார்ஜிங் ஆப்ஷனை பிற்காலத்தில் வழங்கவிருக்கிறது.

ஆடி 400-வோல்ட் டெக்னாலஜியை மட்டுமே ஆதரிக்கும் ஸ்டேஷன்களுக்கு அற்புதமான புதிய அதிவிரைவான சார்ஜிங் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் Q6 இ-ட்ரான் பேங்க் சார்ஜிங்கைப் பயன்படுத்துகிறது இது 800-வோல்ட் பேட்டரி செட்டப்பை சமமான மின்னழுத்தங்களுடன் இரண்டு பேட்டரிகளாக பிரித்து 150 kW வரை இணையாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. சார்ஜ் நிலையை பொறுத்து பேட்டரியின் இரண்டு பகுதிகளும் ஆரம்பத்தில் சமப்படுத்தப்பட்டு பின்னர் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யப்படுகின்றன. இந்த தொழில்நுட்பமானது திறமையான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் பேட்டரி சேதமடையும் அபாயத்தைக் குறைப்பதற்கும் பெரிய பேட்டரிகள் கொண்ட நவீன ஸ்மார்ட்போன்களில் காணப்படுவதைப் போன்றது.

மேலும் படிக்க: இந்தியாவில் வேகமெடுக்கும் Tesla-வின் பயணம்: புதிய EV கொள்கையானது விரைவான அறிமுகம் மற்றும் குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு உதவுகின்றது

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் விலை

ஆடி Q6 இ-ட்ரான் தற்போது ஜெர்மனி மற்றும் வேறு சில ஐரோப்பிய மார்க்கெட்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் SQ6 இ-ட்ரான் உடன் 2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஃபுல்லி லோடெட் குவாட்ரோ வெர்ஷனின் ஆரம்ப விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வோல்வோ C40 ரீசார்ஜ் கியா EV6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 போன்ற மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: இ-ட்ரான் ஆட்டோமேட்டிக்

a
வெளியிட்டவர்

ansh

  • 31 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது பிஎன்டபில்யூ ix1

Read Full News

explore similar கார்கள்

பிஎன்டபில்யூ எக்ஸ்5

Rs.96 லட்சம் - 1.09 சிஆர்* get சாலை விலை
டீசல்12 கேஎம்பிஎல்
பெட்ரோல்12 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

பிஎன்டபில்யூ எக்ஸ்1

Rs.49.50 - 52.50 லட்சம்* get சாலை விலை
டீசல்20.37 கேஎம்பிஎல்
பெட்ரோல்20.37 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

பிஎன்டபில்யூ எக்ஸ7்

Rs.1.27 - 1.30 சிஆர்* get சாலை விலை
டீசல்14.31 கேஎம்பிஎல்
பெட்ரோல்11.29 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை