சிக்ஸரால் Tata Punch EV -யின் கண்ணாடியை சிதறடித்த WPL வீராங்கனை எல்லிஸ் பெர்ரி… மறக்கமுடியாத பரிசளித்த டாடா நிறுவனம்
published on மார்ச் 19, 2024 07:22 pm by shreyash for டாடா பன்ச் EV
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா WPL (மகளிர் பிரீமியர் லீக்) 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக பன்ச் EV இருந்தது. ஒரு கார் போட்டிகளின் போது மைதானத்திற்கு அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
டாடா டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) 2024 போட்டியின் வெற்றியாளராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த ஒரு சிக்ஸரின் வீடியோ இணையத்தில் வைரலானது. எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்ஸர் மைதானத்தின் நிறுத்தப்பட்டிருந்த டாடா பன்ச் EV -யின் கண்ணாடியை உடைத்தது. உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதியை நினைவு பரிசாக மாற்றி அதை எல்லிஸ் பெர்ரியிடம் வழங்கியுள்ளது டாடா நிறுவனம்.
TATA.ev -ல் ஷேர் செய்யப்பட்ட ஒரு போஸ்ட் (@tata.evofficial)
இந்த சம்பவம் நடந்தது எப்படி?
WPL -ன் இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ காராக ஒவ்வொரு போட்டியிலும் பன்ச் EV காட்சிப்படுத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் RCB மற்றும் UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தின் போது RCB பேட்ஸ்மேன் எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்ஸரால் பன்ச் EV-யின் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
எல்லிஸ் பந்தை உயரமாகவும் ஸ்டாண்டுகளை நோக்கியும் அடிக்கும் வீடியோ -வில் பன்ச் EV-யின் பின்புற கதவு ஜன்னலைத் தாக்கியது பதிவாகியது. WPL 2024 இறுதிப் போட்டிக்கு சற்று முன்பு எல்லிஸ் டாடா -விடமிருந்து ஒரு சிறப்புப் பரிசைப் பெற்றார் மேலும் அது பன்ச் EV-யில் இருந்து உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதி பிரேமில் மாட்டப்பட்டிருந்தது. போட்டியில் எல்லிஸின் "கிளாஸ் பிரேக்கிங்" திறமைக்காக டாடா அவரை பாராட்டியது மற்றும் பன்ச் EV -யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கின் மூலம் ஒரு படத்தையும் ஷேர் செய்தது. போட்டோ உடைந்த கண்ணாடியின் ஃபிரேம் செய்யப்பட்ட பிட்களை எல்லிஸ் பெர்ரிக்கு பரிசாக வழங்கிய தருணத்தைக் காட்டுகிறது.
ஒவ்வொரு முறையும் ஒரு வீரர் டிஸ்பிளே செய்யப்பட்ட காரில் பந்தை அடிக்கும் போது ரூ.5 லட்சத்தை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி டாடாவின் முன்னறிவிப்பின் அடிப்படையில் கொல்கத்தாவில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு அதே தொகையை வழங்கி தனது உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளது. எல்லிஸ் பெர்ரிக்கு வேறு எந்த வீரரும் காரை தாக்கவில்லை என்பதால் அது எல்லிஸின் சிக்ஸர் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
மேலும் பார்க்க: வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் Hyundai Creta EV இந்தியாவில் 2025 ஆண்டில் அறிமுகமாகலாம் !
பன்ச் EV பற்றிய கூடுதல் தகவல்கள்
டாடா பன்ச் EV கார் MR (மீடியம் ரேஞ்ச்) மற்றும் LR (லாங் ரேஞ்ச்) ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது - கூடுதல் விவரங்கள் கீழே உள்ளன:
வேரியன்ட் |
MR |
LR |
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
பவர் |
82 PS |
122 82 PS |
டார்க் |
114 Nm |
190 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC மதிப்பிடப்பட்டது) |
315 கி.மீ |
421 கி.மீ |
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடா பன்ச் EV ஆனது 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற வசதிகளுடன் கொடுக்கப்படுகின்றது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV -யின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது சிட்ரோன் eC3 உடன் போட்டியிடும். டாடா டியாகோ EV -வுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும் மேலும் டாடா நெக்ஸான் EV -க்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்