வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் Hyundai Creta EV இந்தியாவில் 2025 ஆண்டில் அறிமுகமாகலாம் !
published on மார்ச் 18, 2024 07:58 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா ev
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் கிரெட்டா EV -யின் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்க வாய்ப்புள்ளது.
-
கிரெட்டா EV ஆனது ஜனவரி 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்டட் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
-
முன்பக்கமாக முழுவதுமாக மூடிய கிரில் மற்றும் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் கொடுக்கப்படலாம்.
-
புதிய டாஷ்போர்டு அமைப்பு மற்றும் கேபின் தீம் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கு லைட் கலர் கொடுக்கப்படலாம்.
-
டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS போன்ற வசதிகளுடன் இது வரக்கூடும்.
-
பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை; 400 கி.மீ.க்கு மேல் ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாகவே ஹூண்டாய் கிரெட்டா EV -யின் ஒரு சில ஸ்பை காட்சிகள் இணையத்தில் வலம் வருகின்றன. இப்போது கூடுதலாக ஒரு புதிய ஸ்பை ஷாட் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இது முழுவதுமாக கவர் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் காரை காட்டுகிறது. இந்த எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா இந்தியா-ஸ்பெக் ஃபேஸ்லிஃப்டை அடிப்படையாகக் கொண்டது அதன் சொந்த நாடான தென் கொரியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
படத்தில் என்ன கவனிக்க முடிகிறது?
சமீபத்திய போட்டோ வரவிருக்கும் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை பற்றிய ஒரு தெளிவான பார்வையை நமக்கு வழங்குகிறது. கிரெட்டா EV இன்னும் முழுவதுமாக மூடப்பட்டிருந்தாலும் ஸ்டாண்டர்டு மாடலுக்கும் இதற்கும் இடையே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. முன் பம்பரில் ஒரு கட்அவுட் பகுதி உள்ளது இது சார்ஜிங் போர்ட்டின் இருப்பிடத்தைக் காட்டுகின்றது.
எஸ்யூவி -யின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) வெர்ஷனில் காணப்பட்ட அதே டூயல் L- வடிவ LED DRL -களை இதிலும் பார்க்க முடிகின்றது.
புதிய 17-இன்ச் அலாய் வீல்களை கூடுதலான ஏரோடைனமிக் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர வழக்கமான கிரெட்டா போலவே அதன் பக்கவாட்டு தோற்றம் இருக்கிறது. EV -யின் பின்புறத்தில் எந்தப் படமும் இல்லாவிட்டாலும் புதிய வடிவிலான பம்பருடன் இணைக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்பைக் கொண்டிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் கேபின் விவரங்கள் மற்றும் வசதிகள்
ஸ்டாண்டர்ட் கிரெட்டாவின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
ஸ்பை ஷாட் -டில் கேபினை பற்றிய எந்த விவரங்களும் நமக்கு தெரிய வரவில்லை என்றாலும் கிரெட்டா EV -யின் கேபின் தீம் மற்றும் அப்ஹோல்ஸ்டரியில் லைட் ஷேட் கொடுக்கப்பட்டிருக்கலாம். டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்னொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக) உள்ளிட்ட ஸ்டாண்டர்ட்டு எஸ்யூவியின் டேஷ்போர்டு வடிவமைப்பையும் இது பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மற்ற எதிர்பார்க்கப்படும் இன்ஸ்ட்ரூமென்ட்களில் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ,360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றை பாதுகாப்புக்காக ஹூண்டாய் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: நீங்கள் எதை வாங்க வேண்டும்?
எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
கிரெட்டா EV -யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கிரெட்டா EV 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹூண்டாய் EV உலகளாவிய மாடல்கள் மற்றும் இந்தியாவில் அதன் EV போட்டியாளர்களை போலவே இதுவும் பல்வேறு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் இது வழங்கப்படலாம்.
விலை என்னவாக இருக்கும்?
ஹூண்டாய் கிரெட்டா EV -யின் ஆரம்ப விலை ரூ 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விற்பனைக்கு வரும்போது MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 ஆகியவற்றுக்கு கிரெட்டா EV பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful