Mahindra BE 6 மற்றும் XEV 9e -யை சில நகரங்களில் டெஸ்ட் டிரைவ் செய்யலாம்
published on ஜனவரி 15, 2025 09:00 pm by kartik for மஹிந்திரா be 6
- 10 Views
- ஒரு கருத்தை எழுதுக
முதல் கட்ட டெஸ்ட் டிரைவ் இப்போது தொடங்கியுள்ளது. இரண்டு மற்றும் மூன்று கட்ட டெஸ்ட் டிரைவ் விரைவில் தொடங்கவுள்ளது.
-
டெஸ்ட் டிரைவ்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
-
முதல் கட்ட பகுதிகளில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் சென்னை ஆகியவை அடங்கும்.
-
இரண்டாம் கட்டம் ஜனவரி பிற்பகுதியிலும், மூன்றாம் கட்டம் பிப்ரவரி தொடக்கத்திலும் தொடங்கும்.
-
BE 6 மற்றும் XEV 9e இரண்டும் 3 வேரியன்ட்களில் கிடைக்கின்றன: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3.
-
பல ஜோன் ஆட்டோ ஏசி, பவர்டு மற்றும் வென்டிலேஷன் கொண்ட முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் ஆகியவை கிடைக்கும்.
-
EV -கள் இரண்டு பேட்டரி பேக்குகளில் வழங்கப்படுகின்றன: 59 kWh மற்றும் 79 kWh, 682 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகின்றன.
-
BE6 விலை ரூ. 18.90 லட்சம் முதல் ரூ. 26.90 லட்சம் வரையிலும், XEV 9e விலை ரூ.21.90 லட்சம் முதல் ரூ. 30.50 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
மஹிந்திராவின் BE 6 மற்றும் XEV 9e கார்களின் டெஸ்ட் டிரைவ் இப்போது தொடங்கியுள்ளது. மஹிந்திரா ஏற்கனவே மூன்று கட்டங்களாக டெஸ்ட் டிரைவ்கள் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. இரண்டாம் கட்ட டெஸ்ட் டிரைவ் வரும் ஜனவரி 24 -ம் அன்று தொடங்கவுள்ளது. மூன்றாவது கட்டம் பிப்ரவரி 7 -ல் தொடங்கும். தற்போது நீங்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இரண்டு EV - களை டெஸ்ட் டிரைவ் செய்யலாம். இரண்டாம் கட்டம் இந்தூர், கோவா, லூதியானா மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களை உள்ளடக்கியிருக்கும். இறுதி கட்டத்தில் இந்தியா முழுவதும் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும். மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகிய மூன்று போர்டு வேரியன்ட்களில் பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3 ஆகியவற்றை வழங்குகிறது மற்றும் இரண்டு எலக்ட்ரிக் வாகனங்களும் எவற்றையெல்லாம் வழங்குகின்றன என்பது இங்கே:
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e கார்களில் கிடைக்கும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
XEV 9e -க்கான 12.3-இன்ச் டிரிபிள்-ஸ்கிரீன் செட்டப் மற்றும் BE 6 -க்கான டூயல் ஸ்கிரீன் செட்டப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப், பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் கிடைக்கும்.
பயணிகளின் பாதுகாப்புக்காக மஹிந்திரா EV -களை 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை வழங்குகிறது. BE6 மற்றும் XEV 9e ஆனது, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XEV 9e மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5: விவரங்கள் ஒப்பீடு
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பவர்ட்ரெய்ன்
இரண்டு முழு எலக்ட்ரிக் கார்களும் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
BE 6 |
XEV 9e |
பேட்டரி பேக் |
59 kWh/ 79 kWh |
59 kWh/ 79 kWh |
பவர் |
231 PS/ 286 PS |
231 PS/ 286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC PI+P II) |
535 கி.மீ/ 682 கி.மீ |
542 கி.மீ/ 656 கி.மீ |
இந்த இரண்டும் பின்புற சக்கரங்களை இயக்கும் ஒரே ஒரு மோட்டார் செட்டப் உடன் வருகின்றன. பேட்டரி பேக்குகள் 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன, 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா BE6 விலை ரூ. 18.9 லட்சம் முதல் ரூ. 26.9 லட்சம் வரை இருக்கும். இது டாடா கர்வ்வ் EV, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மாருதி சுஸூகி இ விட்டாரா மற்றும் MG ZS EV போன்ற எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் XEV 9e விலை ரூ.21.9 லட்சம் முதல் ரூ.30.5 லட்சம் வரை இருக்கும். இது டாடா சஃபாரி EV மற்றும் டாடா ஹாரியர் EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
இதையும் பார்க்கவும்: மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6 டாப்-எண்ட் பேக் 3 வேரியன்ட்கள் குறைவான விலையில் கிடைக்கும்
பொறுப்பு துறப்பு
(கட்டுரையில் உள்ள அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியாவுக்கானவை மற்றும் ஹோம் சார்ஜர் இதில் சேர்க்கப்படவில்லை).
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.