Tata Punch : இப்போது அனைத்து இன்ஜின் வேரியன்ட்களிலும் சன்ரூஃப் கிடைக்கும்
published on ஆகஸ்ட் 08, 2023 04:28 pm by shreyash for டாடா பன்ச்
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
சன்ரூஃப் சேர்க்கப்படுவதால் இந்த வேரியன்ட்கள் ரூ.50,000 வரை விலை உயர்வுடன் வருகின்றன.
சன்ரூஃப் உடன் பன்ச் CNG -யை அறிமுகப்படுத்திய மூன்று நாட்களிலேயே, டாடா இப்போது மைக்ரோ எஸ்யூவியின் வழக்கமான பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு இந்த அம்சத்தை விரிவுபடுத்தியுள்ளது. சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்களின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சன்ரூஃப்வேரியண்ட்கள் |
விலை |
தொடர்புடைய வேரியன்டில் உள்ள வித்தியாசம் |
அகாம்ப்ளிஸ்டு S |
ரூ 8.25 லட்சம் |
+ரூ 50,000 |
அகாம்ப்ளிஸ்டு டாசில் S |
ரூ 8.65 லட்சம் |
+ரூ 50,000 |
அகாம்ப்ளிஸ்டு S AMT |
ரூ 8.85 லட்சம் |
+ரூ 50,000 |
கிரியேடிவ் S AMT |
ரூ 9.20 லட்சம் |
+ரூ 45,000 |
அகாம்ப்ளிஸ்டு டாசில் S AMT |
ரூ 9.25 லட்சம் |
+ரூ 50,000 |
கிரியேடிவ் ஃபிளாக்ஷிப் DT |
ரூ 9.50 லட்சம் |
பொருந்தாது |
அகாம்ப்ளிஸ்டு டாசில் S CNG |
ரூ 9.68 லட்சம் |
பொருந்தாது |
கிரியேடிவ் DT S AMT |
ரூ 9.80 லட்சம் |
+ரூ. 45,000 |
கிரியேடிவ் ஃபிளாக்ஷிப் DT AMT |
ரூ 10.10 லட்சம் |
பொருந்தாது |
அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை
நீங்கள் அட்டவணையில் பார்ப்பது போல, ரூ 8.25 லட்சம் ரூபாய் விலையுள்ள அகாம்ப்ளிஸ்டு S வேரியன்டிலிருந்து டாடா பன்ச் உங்களுக்கு சன்ரூஃப் -ஐ வழங்குகிறது.
இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் என்பது கிரியேட்டிவ் iRA வேரியண்டின் மறுபெயரிடப்பட்ட வெர்சன் ஆகும். இதில் சன்ரூஃப் மட்டும் இல்லாமல் டாடாவின் iRA கனெக்டட் கார் டெக்னாலஜியும் இருப்பது கூடுதல் அம்சமாகும்.
நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால், ஆல்ட்ரோஸ் -ன் சன்ரூஃப் வேரியன்ட் XM (S) வேரியன்ட்டுடன் தொடங்குகிறது (ஆனால் வாய்ஸ் அசிஸ்டென்ட் இல்லாமல்), இதன் விலை ரூ. 7.35 லட்சம், இது டாடா பன்ச் -ன் தொடக்க சன்ரூஃப் வேரியன்ட்டை விட ரூ.90,000 குறைவான விலையில் கிடைப்பதை காண்பீர்கள்.
இதற்கு நேர்மாறாக, டாடா பன்ச்ன் நேரடி போட்டியாளரான ஹூண்டாய் எக்ஸ்டெர் அதன் SX வேரியன்ட்டிலிருந்து ரூ.8 லட்சம் விலையில் சன்ரூஃப் வழங்குகிறது. இது டாடா பன்ச்ன் அகாம்ப்ளிஸ்டு S வேரியண்டை விட ரூ.25,000 குறைவு.
மேலும் படிக்கவும்: டாடா பன்ச் CNG Vs ஹுண்டாய் எக்ஸ்டெர் CNG - விவரக்குறிப்பு மற்றும் விலை ஒப்பீடு
பவர்டிரெய்ன்கள் விவரம்
டாடா பன்ச் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது, இது 88PS மற்றும் 115Nm -ஐ உருவாக்குகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதே இன்ஜின் CNG வேரியன்ட்டிலும் வழங்கப்படுகிறது, இது CNG மோடில் 74PS மற்றும் 103Nm -ஐ உருவாக்குகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
டாடா பன்ச் -ன் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயித்துள்ளது. இது ஹுண்டாய் எக்ஸ்டர் -க்கு நேரடி போட்டியாக உள்ளது, மேலும் அதன் விலையை கருத்தில் கொண்டு பார்த்தால், இதை சிட்ரோன் C3, மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: டாடா பன்ச் AMT
0 out of 0 found this helpful