சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பாருங்கள்: Tata Punch EV -யின் சார்ஜிங் போர்ட்டை சரியாக மூடுவது எப்படி ?

டாடா பன்ச் EV க்காக பிப்ரவரி 20, 2024 03:51 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஓபன் அண்ட் மற்றும் ஸ்லைடு அமைப்புடன், முன்பக்கத்தில் சார்ஜிங் போர்ட்டை பெறும் முதல் டாடா EV -யான பன்ச் EV உள்ளது.

டாடா -வின் சமீபத்திய காரான டாடா பன்ச் EV புதிய Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் காராக ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. டாடாவின் சமீபத்திய EV -யான பன்ச் குறிப்பிட்ட வடிவமைப்புடன் வருகிறது. பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் 421 கிமீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது. பன்ச் EV -யில் , பக்கவாட்டாக திறக்கும் முன்பக்க சார்ஜிங் ஃபிளாப் டாடா கார்களில் புதுமையான ஒன்றாகும். நீங்கள் பன்ச் EV -யை வைத்திருந்தால், நீங்கள் இந்த ஃபிளாப்பை தவறான வழியில் மூடுவதற்கான வாய்ப்புள்ளது; அதை எப்படி சரியாக மூடுவது என்று இங்கே பார்க்கலாம்:

CarDekho India (@cardekhoindia) -வால் ஷேர் செய்யப்பட்பதிவு

சார்ஜிங் ஃபிளாப்பை மூடுவதற்கான - சரியான வழி

மேலே காட்டப்பட்டுள்ளபடி, சார்ஜிங் போர்ட் ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது: அது மேலே எழும்பி, பக்கவாட்டில் நகரும். எனவே, அதை மூடும் போது அதை மீண்டும் செய்வது என்பது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அவ்வாறு செய்யும்போது, ​​​​நீங்கள் ஒரு வேளை அதன் இரு விளிம்பிலிருந்தும் தள்ளலாம் அல்லது இழுக்கலாம், மேலும் இது சார்ஜிங் பிளாக் சரியாக மூடப்படாமல் போகலாம். ஆனால் இதற்காக அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை இதில் சிக்கல் இருந்தால் அதை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பன்ச் EV உங்களுக்குத் தெரிவிக்கும்.

மேலும் படிக்க: Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது

இருந்தாலும் விளிம்புகள் வெளியே வராமல் பாதுகாப்பாக மூடுவதற்கு, டாடா லோகோ வழியாக ஃபிளாப்பை மையத்திலிருந்து பிடித்து, அதனை மூடும் நிலைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும். இந்த வழியில், பக்கங்களும் கிரில்லுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளன, ஆகவே சார்ஜிங் போர்ட் சரியாக மூடப்படும்.

பவர்டிரெய்ன்

மற்ற டாடா EV களை போலவே, பன்ச் EV இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது: 25 kWh பேட்டரி பேக், 82 PS மற்றும் 114 Nm அவுட்புட்டை கொடுக்கும் கார் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 35 kWh பேட்டரி பேக் உடன் 122 PS மற்றும் 190 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக் கிளைம்டு 315 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது, மேலும் பெரியது 421 கி.மீ கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஏர் ஃபியூரிபையர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் பன்ச் EV வருகிறது.

மேலும் படிக்க: Tata Tiago EV மற்றும் MG Comet EV ஆகிய கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது… அவற்றின் ஒப்பீடு இங்கே

பாதுகாப்பிற்காக, இதில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஒரு ப்ளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொடுக்கப்பட்டுள்ளன.

விலை போட்டியாளர்கள்

டாடா நிறுவனம் பன்ச் EV -யின் விலையை ரூ. 10.99 லட்சத்தில் இருந்து ரூ. 15.49 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயித்துள்ளது. மேலும் இது சிட்ரோன் eC3 -க்கு நேரடியாக போட்டியாளராக உள்ளது. மேலும், இது டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக செயல்படுகிறது

மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata பன்ச் EV

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
தொடங்கப்பட்டது on : Feb 17, 2025
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை