சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அப்டேட்: Toyota நிறுவனம் டீசல் பவர்டு கார்களை மீண்டும் விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது

டொயோட்டா இனோவா கிரிஸ்டா க்காக பிப்ரவரி 09, 2024 07:28 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா வாடிக்கையாளர்கள் இனிமேல் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

சமீபத்தில், டொயோட்டா நிறுவனம் அதன் மூன்று டீசல் இன்ஜின்களை பயன்படுத்தும் கார் மாடல்களை உற்பத்தி ஆலையில் இருந்து விநியோகம் செய்வதையும் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு காரணம் ஜப்பானில் செய்யப்பட்ட சான்றிதழ் சோதனையின் போது கண்டறியப்பட்ட குளறுபடிகள் காரணமாகவே டொயோட்டா அந்த முடிவை எடுத்திருந்தது. ஆராய்ந்தபோது , சோதனை செய்யப்பட்ட யூனிட்களில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் வெவ்வேறு ECU மென்பொருளில் இயங்குவதை டொயோட்டா கண்டறிந்தது. உலகளாவிய அறிவிப்பைத் தொடர்ந்து, டொயோட்டா இந்தியாவிலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா ஹைலக்ஸ், மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களை விநியோகம் செய்வதை நிறுத்தியது - ஆனால் இந்த கார்களுக்கான புதிய ஆர்டர்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தது. மேலும் மதிப்பீட்டிற்குப் பிறகு, டொயோட்டா நிறுவனம் ஒரு அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளது அதை கீழே பார்க்கலாம் :

‘ டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) டீசல் இன்ஜின்கள் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவுக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்வதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் ஆகியவற்றின் விநியோகம் ஒரு குறுகிய காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது சிக்கல்கள் சரி செய்யப்பட்டதால் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட நிறுவனமாக, மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.’ என டொயோட்டா அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது

ஏற்கனவே இந்த கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டுமா ?

சான்றிதழ் சோதனையில் சில சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்த இன்ஜின்களின் உச்சபட்ச செயல்திறன் மற்றும் டார்க்கில் இது எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, மேலும் இந்த டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் தங்கள் கார்களை பயன்படுத்தலாம் என்று டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மேலும் படிக்க: Toyota Hilux காரை இந்த 6 செயல்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம்: தீயணைப்பு, கட்டுமானம், வங்கி மற்றும் பிற தேவைகள்

இப்போது, ​​டொயோட்டா ஜப்பானில் இருந்து இந்த இன்ஜின்களை அனுப்புவதை மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்த டீசலில் இயங்கும் மாடல்களின் உற்பத்தியில் எந்த தாமதமும் இருக்காது. எனவே, ஃபார்ச்சூனர் எஸ்யூவி, ஹைலக்ஸ் பிக்கப் மற்றும் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி -க்கான காத்திருப்பு காலம் என்பது அப்படியே இருக்கும். இந்தியாவில் விற்பனையாகும் மற்ற டொயோட்டா மாடல்களான கிளான்ஸா, ரூமியான், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகியவை மாருதியுடன் பகிரப்பட்ட கார்களாக இருக்கின்றன.

மேலும் படிக்க: இன்னோவா கிரிஸ்டா டீசல்

Share via

Write your Comment on Toyota இனோவா Crysta

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rs.63.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.10.60 - 19.70 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை