• English
  • Login / Register

க்யா கார்னிவல் போட்டியாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா: சிறப்பம்சங்கள் ஒப்பீடு

published on ஜனவரி 31, 2020 11:01 am by dinesh for க்யா கார்னிவல் 2020-2023

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உங்கள் இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் இன்னும் மேம்பட்டதை விரும்புகிறீர்களா? க்யா உங்களுக்கான சிறந்த விருப்பத்தேர்வாக உள்ளது

Kia Carnival vs Toyota Innova Crysta: Specification Comparison

க்யா தனது கார்னிவல் எம்பிவியை 5 பிப்ரவரி, 2020 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. அறிமுகமானது இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில், கார் தயாரிப்பு நிறுவனம் வரவிருக்கும் வாகனத்தைக் குறித்து பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளார். இன்னோவா கிரிஸ்டாவிலிருந்து இன்னும் மேம்பட்ட காரை வாங்க விரும்புவோர் மற்றும் ஒப்பீட்டளவில் பிரீமியத்தை செலுத்த விரும்புவோருக்கு இந்த கார்னிவல் மிக சிறந்ததாக இருக்கும், குறிப்பாகப் பார்த்தால் அதிக நபர்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே, மேலும் கவலைப்படாமல், க்யா எம்பிவியானது  பிரபலமான இன்னோவா கிரிஸ்டாவை விட இன்னும் மேம்படுத்தப்பட்டதா என்பதைக் காணலாம்.

 

பரிமாணங்கள்: 

 

க்யா கார்னிவல்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

நீளம்

5115எம்‌எம்

4735எம்‌எம் (-380எம்‌எம்)

அகலம்

1985எம்‌எம்

1830எம்‌எம் (-155எம்‌எம் )

உயரம்

1740எம்‌எம்

1795எம்‌எம் (+55எம்‌எம் )

சக்கரஅமைவு

3060எம்‌எம்

2750எம்‌எம் (-310எம்‌எம் )

பொருட்களை வைக்கும் இடம்

540எல்

இல்லை 

கிடைக்கக்கூடிய இருக்கை உள்ளமைவு

7-,8-,9-இருக்கை

7-,8-இருக்கை

  • கார்னிவல் கார் இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் நீளமானது மற்றும் அகலமானது. அத்துடன் இது டொயோட்டாவை விட நீளமான சக்கரங்களுக்கு  இடையிலான தூரத்தைக் கொண்டுள்ளது.

  • இதன் கரணமாக, கார்னிவல் இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் அதிக தரமனதாகவும் மிகவும் விசாலமான எம்பிவியாகவும் இருக்கிறது.

  • கார்னிவலானது மூன்று மாறுபட்ட இருக்கை உள்ளமைவுகளுடன் இருக்கின்றது, இன்னோவா கிரிஸ்டாவில் இரண்டு வகையான இருக்கை மட்டுமே இருக்கிறது.

மேலும் படிக்க: கியா கார்னிவல் வாகனத்திற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இது ஆட்டோ எக்ஸ்போ 2020 பிப்ரவரி 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது 

இயந்திரம்:

டீசல்: 

 

க்யா கார்னிவல் 

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

இயந்திரம்

2.2-லிட்டர்

2.4-லிட்டர்

ஆற்றல்

200பி‌எஸ்

150பி‌எஸ்

முறுக்குதிறன்

440என்‌எம்

343என்‌எம்/360என்‌எம்

செலுத்துதல்

8-வேக ஏ‌டி

5-வேக எம்‌டி6-வேக/ ஏ‌டி

  • இதன் இயக்கும் இயந்திரம் சிறிய அளவில் இருந்த போதிலும், இவை இரண்டில் க்யா மிகவும் ஆற்றல் மிக்கதாக இருக்கின்றது, இது டொயோட்டாவின் 2.4 லிட்டர் இயந்திரத்தைக் விடவும் 50பி‌எஸ்ஐ அதிகம் அளிக்கிறது.  மேலும், கார்னிவாலில் 2.2 லிட்டர் முறுக்கு திறன் இருக்கிறது. 

  •  செலுத்துதலைப் பொருத்தவரை, கார்னிவல் 8-வேக ஏடியைப் பெறுகிறது, அதே சமயத்தில் கிரிஸ்டாவை விடவும் 5-வேக எம்டி அல்லது 6-வேக ஏடி என்ற அளவில் இருக்கிறது.

  • கைமுறை செலுத்துதலுடன் கூடிய இன்னோவா கிரிஸ்டா 343என்‌எம் முறுக்குதிறன் வெளியீட்டைக் கொண்டுள்ளது, தானியங்கி பற்சக்கரபெட்டி ஒன்றுடன் 360என்‌எம் ஐ உருவாக்குகிறது.

குறிப்பு: இன்னோவா கிரிஸ்டா பெட்ரோல் இயந்திரத்துடனும் கிடைக்கிறது. இது 2.7-லிட்டர் என்ற அளவில் இயங்கிகிறது, இது 166பி‌எஸ் மற்றும் 245என்‌எம் ஐ உருவாக்குகிறது. இந்த இயந்திரம் 5-வேக எம்டி அல்லது 6-வேகத் தானியங்கி பற்சக்கரபெட்டி கொண்டிருக்கலாம்.

சிறப்பம்சங்கள்:

பாதுகாப்பு:

  • இரண்டு கார்களிலும் முன்புற இரண்டு காற்றுப்பைகளும்,இபிடியுடன் ஏபிஎஸ், பின்புறமாக வாகனம் நிறுத்துவதற்கான உணர்விகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மரையாணிகள் போன்றவை நல்ல தரமானதாக இருக்கிறது.

  • கூடுதலாக, இன்னோவா கிரிஸ்டாவில் ஓட்டுநருக்கான முழங்கால் பாதுகாப்பு காற்றுபைகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு மற்றும் மலை பகுதிகளில்  வாகனத்தை இயக்குவதற்கான உதவி போன்றவற்றை தரமாக பெறுகிறது. கார்னிவல் வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு மற்றும் மலை பகுதிகளில் வாகனத்தை இயக்குவதற்கான உதவி போன்ற சிறப்பாம்சம்சங்களைப் பெறுகிறது, என்றாலும் கூட இவை விலை அதிகமாக இருக்கும் வகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  • விலை அதிகமாக இருக்கும் வகைகளில், கார்னிவல் 6-கற்றுபைகள் வரை இருக்க கூடியவற்றில், இன்னோவா 7-காற்றுபைகள் வரை கிடைக்கிறது.

  • முன்புறம் வாகனத்தை நிறுத்துவதற்கான உணர்விகள் மற்றும் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்ற சில பிரத்யேகமான பாதுகாப்பு அம்சங்களை கார்னிவலில் விலை அதிகமாக இருக்கும் வாகன வகைகளில் கிடைக்கிறது. 

ஒளிபரப்பு அமைப்பு: 

  • கார்னிவல் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கி 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பைப் பெறுகிறது. மறுபுறம், இன்னோவா கிரிஸ்டாவின் விலை அதிகம் இருக்கும் வகைகளில் மட்டுமே தொடுதிரை அமைப்புகள் இருக்கிறது. அது போலவே, ஈதல் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கி பொருந்தக்கூடிய ஒளிபரப்பு அமைப்புகள் கிடையாது.

  • விலை அதிகமாக இருக்கும் வகைகளில், கார்னிவலில் ஹர்மன் கார்டன் இசை அமைப்பு மற்றும் செல்டோஸ் போன்ற இணைய அணுகல் கார் தொழில்நுட்ப அம்சங்களைத் தொலைதூரத்தில் இருந்து இயங்கும் இயந்திர தொடக்கம்-நிறுத்தம் மற்றும் உள்புற குளிரூட்டும் அமைப்பு போன்றவை இருக்கிறது, இது இன்னோவா கிரிஸ்டாவில் கிடையாது

மேலும் படிக்க: க்யா கார்னிவல் லிமோசைன்: முதல் சோதனை ஓட்டம் குறித்த மதிப்பாய்வு 

வசதிகள்: 

  • அடிப்படை வகையில் கூட, கார்னிவலில் ஆற்றல் மிக்க நழுவு பின்பக்க கதவுகள், அழுத்த-பொத்தான் தொடக்கம், மூன்று-பகுதி காலநிலை கட்டுப்பாடு, பின்புற புகைப்படக் கருவி, பின்புற மற்றும் தொலைநோக்கி சரிசெய்யக்கூடிய திசைதிருப்பி சக்கரம், பகல் / இரவு ஐஆர்விஎம், தானியங்கி முகப்பு விளக்குகள், பின்புற குளிர்சாதன வசதி துளை அமைப்பு மற்றும் தானியங்கி வேக கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இருக்கின்றன.

  • இன்னோவா கிரிஸ்டா ஒரு தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற புகைப்படக் கருவி, பின்புற மற்றும் தொலைநோக்கி சரிசெய்யக்கூடிய திசைதிருப்பி சக்கரம், அழுத்த-பொத்தான் தொடங்கு மற்றும் வேக கட்டுப்பாடு போன்ற அம்சங்களையும் பெறுகிறது. இருப்பினும், அவை விலை அதிகமாக இருக்கும் வகைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது.

  • அடிப்படை வகையில், இன்னோவா கிரிஸ்டா பின்புற மற்றும் தொலைநோக்கி சரிசெய்யக்கூடிய திசைதிருப்பி சக்கரம் மற்றும் பின்புற ஏசி துளைகளுடன் கைமுறையாக இயக்கக் கூடிய குளிர்சாதான வசதியுடன் வருகிறது.

  • விலை அதிகமாக இருக்கும் வகைகளில், கார்னிவல் இரட்டை-அடுக்கு மின்சார சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, காற்று சுத்திகரிப்பி, இரட்டை தொடுதிரை பின்புற இருக்கை ஒளிபரப்பு அமைப்பு, மின்சார சக்தி தடைக்கருவி, ஆற்றல் மிக்க டெயில்கேட், ஆற்றல்மிக்க மற்றும் காற்றோட்டமான ஓட்டுநர் இருக்கை மற்றும் தானியங்கி-சரிசெய்யக்கூடிய அமைப்பு போன்றவை இருக்கின்றது.

விலை: 

இன்னோவா கிரிஸ்டா டீசலின் காரின் விலை ரூபாய் 16.14 லட்சதிதிலிருந்து ரூபாய் 23.02 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) வரையில் இருக்கிறது. மறுபுறம், கியா கார்னிவல் விலை ரூபாய் 24 லட்சத்திலிருந்து ரூபாய் 31 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

was this article helpful ?

Write your Comment on Kia கார்னிவல் 2020-2023

1 கருத்தை
1
R
roman deba
Jan 24, 2020, 2:55:45 PM

Price was too high for KIA carnival

Read More...
பதில்
Write a Reply
2
B
bhaskar sarmah
Jan 26, 2020, 3:50:43 PM

Canival features are terrific But we all are satisfied with basic manual Crista Innova Since it is a big car as it is

Read More...
    பதில்
    Write a Reply

    explore மேலும் on க்யா கார்னிவல் 2020-2023

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • எம்ஜி m9
      எம்ஜி m9
      Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • க்யா கேர்ஸ் ev
      க்யா கேர்ஸ் ev
      Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • ரெனால்ட் டிரிபர் 2025
      ரெனால்ட் டிரிபர் 2025
      Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • vinfast vf9
      vinfast vf9
      Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience