• English
    • Login / Register

    டொயோட்டா டீசல் காருக்காக நீங்கள் 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்?

    டொயோட்டா ஃபார்ச்சூனர் க்காக ஜூன் 13, 2024 05:19 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 29 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மூன்று டீசல் மாடல்களை மட்டுமே வழங்குகிறது: ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இனோவா கிரிஸ்டா

    Toyota Diesel Cars June 2024 Waiting Period

    டொயோட்டா தனது சொந்த தயாரிப்புகள் மற்றும் மாருதியுடன் பகிரப்பட்ட மாடல்கள் உட்பட இந்தியாவில் பல மாடல்களை வழங்கிவருகிறது. பகிரப்பட்ட கார்கள் பெட்ரோல் இன்ஜின்களில் மட்டுமே கிடைக்கின்றன, இந்தியாவில் டொயோட்டாவின் சொந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றன. டொயோட்டா இந்த ஜூன் மாதம் தனது டீசல் கார்களுக்கான காத்திருப்பு காலத்தை அப்டேட் செய்துள்ளது. நீங்கள் டொயோட்டா டீசல் மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்க்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது குறித்த விவரங்கள் இதோ.

     

    மாடல்

     

    காத்திருப்பு காலம்*

     

    இனோவா கிரிஸ்டா

     

    சுமார் 6 மாதங்கள்

     

    ஹைலக்ஸ்

     

    சுமார் 1 மாதம்

     

    ஃபார்ச்சூனர்

     

    சுமார் 2 மாதங்கள்

    • சராசரி வெயிட்டிங் பீரியட் ( பான்-இந்தியா )

    மூன்று டீசல் மாடல்களில் ஹைலக்ஸ் விரைவில் டெலிவரி செய்யப்படுகிறது. ஃபார்ச்சூனர் காருக்காக சராசரியாக இரண்டு மாத காலங்கள் காத்திருப்புக் காலத்துடன் பின்தொடர்கிறது. இருப்பினும் இனோவா கிரிஸ்டா உங்கள் கேரேஜை அடைய அதிக காலம் ஆகும். அதுவும் சராசரியாக ஆறு மாத காலங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

    பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

     

    இனோவா கிரிஸ்டா

     

    இன்ஜின்

     

    2.4-லிட்டர் டீசல் இன்ஜின்

     

    பவர்

     

    150 PS

     

    டார்க்

     

    343 Nm

     

    டிரான்ஸ்மிஷன்

     

    5-ஸ்பீடு MT

    இனோவா கிரிஸ்டா மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஒரு ஆட்டோமேட்டிக் காரை விரும்பினால், பெட்ரோலில் பவர்டு இன்னோவா ஹைகிராஸை தேர்வுசெய்யலாம்.  ஹைகிராஸ் அதன் வழக்கமான 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் CVT ஆப்ஷனை வழங்குகிறது. அல்லது அதன் பெட்ரோல்-ஹைப்ரிட் செட்டப் உடன்  e-CVT கியர்பாக்ஸை வழங்குகிறது.

    ஃபார்ச்சூனர்/ஹைலக்ஸ்

     

    இன்ஜின்

     

    2.8-லிட்டர் டீசல் இன்ஜின்

     

    பவர்

     

    204 PS

     

    டார்க்

     

    420 Nm, 500 Nm

     

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

    மேலும் பார்க்க: Toyota Taisor காரின் டெலிவரி தொடங்கி நடந்து வருகிறது

    ஹைலக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் இரண்டும் (ஃபார்ச்சூனர் லெஜெண்டர் உட்பட) ஒரே இன்ஜின் ஆப்ஷனுடனும் ஃபோர்-வீல்-டிரைவ்  (4WD) அமைப்புடனும் வருகிறது. இருப்பினும், ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜெண்டர் ரியர்-வீல்-டிரைவ்  (RWD) அமைப்பையும் வழங்குகிறது.

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    kia carens vs toyota innova crysta

    டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.55 லட்சம் வரையிலும், ஃபார்ச்சூனரின் விலை ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையிலும், ஹிலக்ஸின் விலை ரூ.30.40 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் வரையிலும் உள்ளது.

    இன்னோவா கிரிஸ்டா மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸுக்கு பிரீமியம் மாற்றாக செயல்படுகிறது. ஃபார்ச்சூனர் MG குளோஸ்டர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இசுஸு வி-கிராஸுக்கு மேலே இருக்கும். ஹைலக்ஸ் ஆனது ஃபார்ச்சூனர் மற்றும் குளோஸ்டர் போன்ற முழு அளவிலான எஸ்யூவி-களுக்கு மாற்றாக பிக்கப் டிரக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை

    குறிப்பு: இந்த காத்திருப்பு காலங்கள் கார் தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட டொயோட்டா மாடல்களுக்கான சராசரி பான்-இந்திய மதிப்பீடுகள் ஆகும். மேலும் விரிவான தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள டொயோட்டா டீலரை தொடர்பு கொள்ளவும்.

    மேலும் படிக்க: ஃபார்ச்சூனரின் ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Toyota ஃபார்ச்சூனர்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience