Toyota Taisor காரின் டெலிவரி தொடங்கி நடந்து வருகிறது
published on ஜூன் 06, 2024 06:03 pm by dipan for டொயோட்டா டெய்சர்
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெய்சர் எஸ்யூவி 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: E, S, S+, G மற்றும் V, மற்றும் பெட்ரோல், CNG மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் வெளியிடப்பட்டது. மாருதி ஃபிரான்க்ஸ் அடிப்படையிலான இந்த கிராஸ்ஓவரின் விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டாவின் இணையதளம் மற்றும் டீலர்ஷிப்களில் 11,000 ரூபாய்க்கு முன்பதிவும் தொடங்கியது.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
1.2 லிட்டர் NA பெட்ரோல் |
1.2 லிட்டர் பெட்ரோலில் + சிஎன்ஜி |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|
பவர் |
90 PS |
77.5 PS |
100 PS |
டார்க் |
113 Nm |
98.5 Nm |
148 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT |
5-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
100 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் உட்பட டொயோட்டா அர்பன் க்ரூஸர் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது.
உட்புறம் மற்றும் பாதுகாப்பு
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் காரின் இன்ட்டீரியரில் பிரவுன் மற்றும் பிளாக் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் கொடுக்கப்பட்டுள்ளது. டாப்-எண்ட் வேரியன்ட் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை கொண்டுள்ளது, அதே சமயம் பேஸ் மற்றும் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் 7-இன்ச் யூனிட் உள்ளது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இதிலுள்ள மற்ற வசதிகளாகும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் ரூ.7.74 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மாருதி ஃபிரான்க்ஸ் உடன் போட்டியிடுகின்றது. மேலும் கியா சோனெட், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்ற சப்-4m எஸ்யூவி களுக்கு ஒரு கிராஸ்ஓவர் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டெய்சர் AMT
0 out of 0 found this helpful