இந்த மார்ச் மாதம் டொயோட்டா -வின் டீசல் காரை வாங்க முடிவெடுத்துள்ளீர்களா ? டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
published on மார்ச் 08, 2024 04:41 pm by rohit for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா பிக்கப் டிரக் விரைவில் கிடைக்கும். அதே சமயம் மிகப்பிரபலமான மாடலான இன்னோவா கிரிஸ்டா காரை டெலிவரி எடுக்க அதிக காலம் எடுக்கும்.
-
இன்னோவா நிறுவனம் இந்தியாவில் கிரிஸ்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் கார்களில் டீசல் இன்ஜின்களை வழங்குகிறது.
-
ஃபார்ச்சூனர் காரை வாங்க சராசரியாக இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
-
ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் இரண்டும் 4WD ஆப்ஷனுடன் ஒரே 2.8 லிட்டர் டீசல் பவர்டிரெய்னை பெறுகின்றன.
-
இன்னோவா கிரிஸ்டா , RWD அமைப்புடன் 2.4 லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது.
-
கிரிஸ்டா -வின் விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.30 லட்சம் வரை இருக்கும்.
-
டொயோட்டா ஃபார்ச்சூனர் ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரை உள்ளது.
-
ஹைலக்ஸ் விலை ரூ.30.40 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் வரை இருகின்றது.
டொயோட்டா இந்தியாவில் இன்னும் டீசல் இன்ஜின்களை வழங்கும் ஒரே மாஸ்-மார்க்கெட் பிராண்ட் ஆக உள்ளது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் ஆகிய பிரபலமான மாடல்களில் டீசல் இன்ஜின்களை டொயோட்டா கொடுக்கின்றது. மார்ச் 2024 மாதத்திற்கான இந்த டீசல் கார்களை புதிதாக வாங்க நினைப்பவர்களுக்கு இருக்கக்கூடிய காத்திருப்பு நேரத்தின் விவரங்களை டொயோட்டா இப்போது வெளியிட்டுள்ளது:
மாடல் வாரியான காத்திருப்பு காலம்
மாடல் |
காத்திருப்பு காலம்* |
இன்னோவா கிரிஸ்டா |
சுமார் 6 மாதங்கள் |
ஃபார்ச்சூனர் |
சுமார் 2 மாதங்கள் |
ஹைலக்ஸ் |
சுமார் 1 மாதம் |
* அனைத்தும் முன்பதிவு செய்யும் நேரத்திலிருந்து கணக்கிடப்படுகிறது
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாடல்களில் ஹைலக்ஸ் விரைவில் கிடைக்கும். இன்னோவா கிரிஸ்டா உங்கள் வீட்டிற்கு வந்து சேர சுமார் ஆறு மாதங்கள் ஆகும். இவை டீசலில் இயங்கும் டொயோட்டா கார்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் ஆகும். எனவே உங்களுக்கான சரியான காத்திருப்பு நேரத்தை அறிய உங்கள் உள்ளூர் டொயோட்டா டீலரை தொடர்பு கொள்ளவும்.
டீசல் பவர் ட்ரெயின்களின் விவரங்கள்
இன்னோவா கிரிஸ்டா
விவரங்கள் |
2.4 லிட்டர் டீசல் |
பவர் |
150 PS |
டார்க் |
343 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
பெட்ரோல்-சிவிடி மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரும். அதன் புதிய பதிப்பிற்கு (இன்னோவா ஹைகிராஸ்) மாறாக இன்னோவா கிரிஸ்ட்டா ஒரு மேனுவல் ஷிஃப்டருடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஃபார்ச்சூனர்/ஹைலக்ஸ்
விவரங்கள் |
2.8 லிட்டர் டீசல் |
பவர் |
204 PS |
டார்க் |
420 Nm 500 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AT |
ஃபார்ச்சூனர் டீசல் RWD மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷனையும் பெறுகிறது. ஃபார்ச்சூனர் லெஜெண்டர் கூட RWD மற்றும் 4WD அமைப்புகளுடன் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஹைலக்ஸ் 4WD உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் பார்க்க: இந்தியாவுக்கு மீண்டும் வருகின்றதா ஃபோர்டு ? புதிய தலைமுறை Ford Everest (Endeavour) இப்போது சாலையில் தென்பட்டுள்ளது !
விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.30 லட்சம் வரையிலும் ஃபார்ச்சூனரின் விலை ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையிலும் (லெஜண்டர் வேரியன்ட்களும் அடங்கும்) இருக்கின்றன. டொயோட்டா ஹைலக்ஸ் ரூ.30.40 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இன்னோவா கிரிஸ்டா மாருதி எர்டிகாவிற்கு பிரீமியம் மாற்றாக உள்ளது. ஃபார்ச்சூனர்
கியா கேரன்ஸ், எம்ஜி குளோஸ்டர் ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். ஹைலக்ஸ் காரானது ஃபார்ச்சூனர் மற்றும் குளோஸ்டர் உள்ளிட்ட முழு அளவிலான எஸ்யூவி -களுக்கு மாற்றாக இஸூசு வி-கிராஸுக்கு மேலே விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க: இன்னோவா கிரிஸ்டா டீசல்