இந்தியாவுக்கு மீண்டும் வருகின்றதா ஃபோர்டு ? புதிய தலைமுறை Ford Everest (Endeavour) இப்போது சாலையில் தென்பட்டுள்ளது !
modified on மார்ச் 08, 2024 12:00 pm by rohit
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரு வேளை புதிய ஃபோர்டு எண்டீவர் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் CBU (முழுமையாக கட்டமைக்கப்பட்டது) ஆக வரும். அதே சமயத்தில் இது ஒரு விலையுயர்ந்த காராக இருக்கும்.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தைக்கு திரும்ப வருகின்றதா இல்லையா ? என்பது தொடர்பான விவராதங்கள் சமீபத்தில் இணையதளத்தில் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான தகவல்கள் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ஃபோர்டு மஸ்டாங் Mach-E என்ற பெயர் சமீபத்தில் வர்த்தகத்துக்காக பதிவு செய்யப்பட்டது. இப்போது புதிய தலைமுறை ஃபோர்டு எண்டீவர் (சில சர்வதேச சந்தைகளில் 'எவரெஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது) முதன்முறையாக இந்தியாவில் இப்போது தென்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் இரண்டும் ஃபோர்டு திரும்பக்கூடும் என்பதை காட்டுகின்றன.
ஸ்பை ஷாட்கள் எதை காட்டுகின்றன ?
ஸ்பை ஷாட்கள், முற்றிலும் மறைக்கப்படாமல் கோல்டு ஷேடில் இருந்த ஃபோர்டு எஸ்யூவி -யை காட்டுகின்றன. இது புதிய எண்டீவரின் பின்புற பக்கத்தையும் காட்டுகிறது. இதில் நேர்த்தியான LED டெயில்லைட்கள் மற்றும் பின்பகுதியில் 'எவரெஸ்ட்' மோனிகர் (எழுத்து) உள்ளது.
காரின் முன்பக்கம் கேமராவில் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் இது C-வடிவ LED DRL -கள் மற்றும் டூயல்-பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் உலகளவில் விற்கப்படும் மாடலில் காணப்படும் குரோம்-பதிக்கப்பட்ட கிரில் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
கேபின் மற்றும் வசதிகள்
கேபினை பற்றிய ஸ்பை ஷாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் குளோபல்-ஸ்பெக் எவரெஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டதாக இது இருக்கலாம். இது ஆல் பிளாக் தீம் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வரலாம். வசதிகளை பொறுத்தவரை புதிய ஃபோர்டு எண்டீவர் 12-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட் மற்றும் டிரைவருக்கான 12.4-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம். போர்டில் உள்ள மற்ற அம்சங்களில் பவர்-அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் பவர்-ஃபோல்டபிள் மூன்றாம் வரிசை இருக்கைகள் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
பாதுகாப்பு -க்காக 360 டிகிரி கேமரா 9 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வரலாம்.
மேலும் படிக்க: இந்தியாவில் டிரேட்மார்க்கிற்காக பதிவு செய்யப்பட்ட Ford Mustang Mach-e Electric எஸ்யூவி… இறுதியாக இந்தியாவில் வெளியாகவுள்ளதா ?
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ?
புதிய ஃபோர்டு எண்டீவர் சந்தை மற்றும் வேரியன்ட்டின் அடிப்படையில் பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஃபோர்டு புதிய 3-லிட்டர் V6 டர்போ-டீசல் இன்ஜின் மற்றும் இரண்டு 2-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின்கள் (டூயல்-டர்போ உட்பட) மற்றும் 2.3-லிட்டர் ஈகோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது. பெட்ரோல் யூனிட் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல்கள் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4-வீல்-டிரைவ் (4WD) அமைப்பு ஆஃப்-ரோட் டிரைவிங் மோடுகள் லாக்கிங் ரியர் டிஃபெரன்ஷியல் மற்றும் டூ-ஸ்பீட் டிரான்ஸ்ஃபர் கேஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது 2-வீல்-டிரைவ் (2WD) வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது.
இந்திய வெளியீடு மற்றும் பிற விவரங்கள்
புதிய எண்டெவரின் ஸ்பை ஷாட்கள் இந்தியாவிற்கு ஃபோர்டு நிறுவனம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதை காட்டுகின்றன. ஆனால் இப்போது வரை ஃபோர்டு நிறுவனம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. ஆகவே ஸ்பை ஷாட்கள் மூலமாக எதிர்பார்ப்பை கொண்டிருக்க வேண்டாம் என்றே நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஃபோர்டு எஸ்யூவி -யை இங்கு கொண்டு வர முடிவு செய்தாலும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தியதால் அது CBU ஆகவே வரும். எனவே எஸ்யூவி -யின் விலை அதிகமாக இருக்கலாம். ஒரு வேளை அறிமுகப்படுத்தப்பட்டால் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.